0,00 INR

No products in the cart.

வாசகர்களின் திக்… திக்… அனுபவங்கள்!

நள்ளிரவில் ஒரு நாள்! 

துரையில் படிப்பை முடித்து விட்டு என் சகோதரர் இருந்த ஹைதராபாதுக்கு வந்தேன். அங்கே அரசாங்கப் பணி கிடைத்து வேலையில் சேர்ந்த சில மாதங்களில் வாரங்கல் என்ற ஊருக்கு பணி மாற்றல் உத்தரவு வந்தது.  என்னைப் போலவே மாற்றல் ஆன  சக பெண் ஊழியர் ஒருவருடன் வாரங்கல்லில் ஒரு வீட்டில் தங்கி இருந்தேன். எனக்கு தெலுங்கு தெரியாது. என்னோடு இருந்த தோழிதான் பெரிதும் உதவினாள். சனி, ஞாயிறுகளில் ஹைதராபாத் வந்து விடுவோம்.

ஒரு நாள் என் அறைத் தோழி அவசர வேலையாக ஹைதராபாத் கிளம்ப, தனியாக இருக்க பயந்து, நானும் அவளுடன் கிளம்பினேன். நான் வசிக்கும் இடத்திற்கு செல்லும் பஸ்ஸில் ஏறும்போதே இரவு மணி பதினொன்றைத் தாண்டி விட்டது. பஸ் நிறுத்தத்திலிருந்து எங்கள் வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும்.

தெருவில் விளக்கு இல்லை. ஒரே கும்மிருட்டு. லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. ஆள் நடமாட்டமும் இல்லை. விறு விறுவென நடக்கத் துவங்கினேன். பின்னால் ஏதோ  சத்தம் வர திரும்பிப் பார்த்தேன். ஒருவன் என் பின்னால் வந்து கொண்டிருப்பது லேசாகத் தெரிய பயத்தில் திக்கென்றது. எப்போதாவது பயம் வந்தால் ‘கந்த சஷ்டி கவசம் சொல், பயம் போய் விடும்’ என்பார் என் தாயார். சஷ்டி கவசத்தை சொல்லியவாறே இன்னும் வேகமாக நடக்கலானேன். அவன் மிகவும் அருகில் வர கால்கள் நடுங்க முருகா முருகா என சொல்லியபடி நின்று விட்டேன். அவன் தெலுங்கில் ஏதோ கேட்க நான் பயத்தில் ‘மு’ ‘மு’ என்று சொல்ல, என்ன நினைத்தானோ வேகமாக சென்று விட்டான். நான் ஒரே ஓட்டமாக வீடு வந்து சேர்ந்தவுடன்தான் மூச்சு வந்தது.
– வி.ரத்தினா,  ஹைதராபாத். 

பூட்டி  இருந்த வீட்டில் குழந்தை சத்தம்! 

ங்கள் ஊர் பட்டுக்கோட்டை. என்னோடு கூட பிறந்தவர்கள் இரண்டு பேர். முதல் அக்கா 11ம் வகுப்பு, இரண்டாம் அக்கா 10ம் வகுப்பு, நான் 9ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தோம். பக்கத்து வீட்டுக்கும் எங்கள் வீட்டிற்கும் நடுவில் ஒரே சுவர்தான் . பக்கத்து வீட்டு அக்காவிற்கு குழந்தை இல்லை. இதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ஒரு நாள் அவர் தற்கொலை செய்து கொண்டார்.  பிறகு ஒரே  மாதத்தில் அவர்கள் வீட்டை காலி செய்து சென்று விட்டனர்.

ஒரு வாரம் கழித்து இரவில் குழந்தை கத்தும் சப்தம் கேட்டது. நாங்கள் மூவரும் பயந்து போய் எனக்கு ஜுரமே வந்து விட்டது. எங்கள் பாட்டி எங்களை சிறுவாச்சூர் அழைத்துச் சென்று மந்திரித்து தாயத்து கட்டினார். இறந்த அக்காதான் குழந்தை போல பேயாக வந்து விட்டதாக நம்பினோம். சிறிது நாட்கள் நாங்கள் மூவரும் எங்கள் மாமா வீட்டில் இருந்தோம். விபரம் தெரிந்த பின்புதான் பூனைகள் சில சமயங்களில் அவ்வாறு கத்தும் என்பது புரிந்தது. அப்போது நாங்கள் பயந்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கும்.
– உஷா சங்கரன், சென்னை. 

கரணம் தப்பினால் மரணம்!

சென்ற ஆண்டு நானும் என் குடும்பத்தாரும் காரில் கொடைக்கானல் சுற்றுலா சென்றோம். அங்கிருந்து பள்ளங்கி என்ற இடத்தை காணச் சென்றபோது மாலை
6 மணி ஆகிவிட்டது. இருட்டத் தொடங்கிவிட்டது. கூடவே பயமும் தொற்றிக் கொண்டது. பயணத்தைத் தொடராமல் பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு மீண்டும் தங்கிருந்த ஓட்டலுக்கு திரும்பிச் செல்ல முற்பட்டோம். சரியான மேடு, கார் மேலே செல்ல மிகவும் திணறியது, ஏற முடியவில்லை. பிரேக் மட்டும் இல்லையென்றால் பள்ளத்தில் விழ வேண்டியதுதான். நடுகாடு என்பதால் உதவிக்கு பக்கத்தில் யாருமில்லை! தூரத்தில் ஏதேதோ சப்தம் கேட்டது. கேட்கவே பயங்கரமாக இருந்தது. கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

நல்லவேளையாக ஒரு ஐடியா தோன்றியது!  கார் ஓட்டிய என் பையனைத் தவிர மற்ற நால்வரும் கீழே இறங்கிக் கொண்டோம். பிறகு கார் மெதுவாக மேலே சென்றது, சமதளத்தில் நிறுத்தப்பட்டது. மூச்சிரைக்க மேலே நடந்து சென்றோம். இருந்தாலும் பயத்தால் போன மூச்சு அப்போதுதான் திரும்பி வந்தது! அதன்பிறகு நல்லபடியாக ஓட்டலுக்கு திரும்பி வந்துவிட்டோம். என் வாழ்நாளில் மறக்க முடியாத அந்நிகழ்ச்சியை இப்போது நினைத்தாலும் மனது திக்திக்கென்று இருக்கிறது!
– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி 

மொட்டைமாடி அமர்க்களம்!

ங்கள் குடும்பம் பெரிய கூட்டுக்குடும்பம். நானும் என் சகோதரிகளும் பரிட்சை நேரங்களில் மொட்டை மாடியில் ‘டியூப்  லைட்’ வெளிச்சத்தில் படிப்பது வழக்கம். இரவு நேரங்களில் மரங்களுக்கு நடுவே எங்கள் வீடு ரம்மியமாக இருக்கும், கூடவே வௌவால்கள், மரங்களின் நிழலாட்டம், பூச்சி பொட்டு  என திகிலாகவும் இருக்கும். கூட்டாக படித்தால் பொதுவாக பயம் தெரியாது.

இப்படி ஒரு நாள் படித்துக் கொண்டிருக்கையில், ஒரு கருப்பு நிற பூனை மாடியில் பதுங்கி இருந்தது போலும்… அதை நாங்கள் கவனிக்கவே இல்லை. சாதாரணமாகவே நாய், பூனைக்கெல்லாம் இரவில் கண்கள் பளீரென ஒளி வீசும்.  அதுவும் கருப்பு பூனை என்றால் கேட்கவும் வேண்டுமா? திடீரென ஒரு ஓரத்திலிருந்து  இரண்டு ஒளிவீசும் முட்டை கண்கள் தெரிய, ஒ! என்று அலறினேன். பின்னிருந்த இரண்டு சகோதரிகளும் அவ்விதமே அலற, பாவம் பூனை பயந்தே போனது!
– காயத்ரி, சென்னை. 

Related Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...