0,00 INR

No products in the cart.

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! 

பழைய சோறும், மாவடுவும்!

ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாத பெருமாளுக்கு எல்லா நாளுமே திருநாள்தான். அதில் வித்தியாசமான ஆனால் அதேசமயம் எல்லோரையும் நெகிழவைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறும். ‘பழைய சோறும், மாவடுவும்’ என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமாள் ஸ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பிச் செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளிகளின் மண்டகப்படி பெருமானுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறும் .

அதன் பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. வெண்ணையும் , மண்ணையும் உண்ட அந்த பெருமான் அன்று பழைய சோறு, மாவடுவும் உண்பார். இதன் பின்னால் நெஞ்சை உருக்கும் ஒரு கதை உள்ளது .ஏழைகளுக்கு உதவும் பரந்தாமன் அன்றோ ஒரு ஏழை பாட்டிக்காக அவளின் பேரனின் வடிவம் தாங்கி வந்து திருவிளையாடல் புரிந்ததுதான் அந்த கதை.

ஜீயர்புரம்  என்பது காவிரிக்கரை அருகே உள்ள அழகான கிராமம். அங்கு ரங்கநாதரை சதாசர்வகாலமும் நினைத்து வாழும் ஒரு பாட்டியும் அவளுக்கு என்று ஒரே உறவான பேரனும் வசித்து வந்தனர். அவள் எப்போதும் நின்றாலும், இருந்தாலும் , படுத்தாலும் ‘ரங்கா’ என்று கூறிக்கொண்டே , அவன் புகழ் பாடிக் கொண்டே வாழ்ந்து வந்தாள் . ஒரு நாள் முகம் திருத்தி கொண்டுவருவதாக சொல்லிக்கொண்டு காவிரி கரைக்குச் சென்ற பேரன் காவிரியில் இறங்கி  குளிக்கும்போது பெருகி வந்த வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்துக்கு அருகே கரை ஒதுங்கினான் . ரொம்ப நேரமாக பேரனைக் காணாமல் கவலையுடன் அழுது  காவிரி கரைக்கு  சென்றாள் பாட்டி.

அவரை  ஆறுதல்படுத்த கிளம்பிய பரந்தாமன்,  திருத்தம் செய்த முகத்தோடு குளித்து எழுந்த நிலையில், பாட்டியின் பேரன் ரங்கனாகவே வந்தார். பாட்டி மகிழ்ந்து பேரனை கட்டியணைத்து வீட்டுக்கு அழைத்துச்சென்று அவனுக்கு பழைய சோறும் மாவடுவும் அளித்து சாப்பிடச் செய்தாள். பரந்தாமன் சாப்பிட்டுக்கொண்டிருந்த அதேவேளையில் உண்மையான பேரனும் வந்து விட பாட்டி திகைத்தாள். அடியவருக்கு அடைக்கலம் தரும் பெருமான் சிரித்தபடியே மறைந்தான். பாட்டியும் பேரனும் பெருமானின் அருளை எண்ணி துதித்தார்கள். அதை நினைவூட்டும் விதமாக இன்றும் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழாவில் இதை  நடத்தி வருகிறார்கள்.
– கிருஷ்ணவேணி, சென்னை.

………………………………..

ஒரே வரியில் அத்தனை தெய்வங்களையும் வர்ணிக்க முடியமா? 

‘சிரமாறு உடையான்’ 

  1. ‘சிரம் மாறு உடையான்’

தலையது மாறி வேழத்தின் சிரம் அமைந்த ஸ்ரீவிநாயகனைக் குறிக்கும்.

  1. ‘சிரம் ஆறு (6) உடையான்’ 

ஆறுமுகம் படைத்த ஸ்ரீசுப்பிரமணியத்தைக் குறிக்கும்.

  1. ‘சிரம் ஆறு உடையான்’ 

சிரத்தில் கங்கையைக் கொண்ட சிவபெருமானைக் குறிக்கும்.

  1. ‘சிரம் மாறு உடையான்’

சிரம் அது முன்னும் பின்னும் உள்ள நான்குமுகனாம் ஸ்ரீபிரம்மாவைக் குறிக்கும்.

  1. சிரம் ஆறு (river) உடையான்’ 

காவிரி ஆற்றில் தலை வைத்து சயனித்திருக்கும் ஸ்ரீரங்கநாதரைக் குறிக்கும்.
– ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

………………………………..

வாழ்வியலும் வானசாஸ்திரமும்!

ஞ்சாங்கத்தில்  மேல்நோக்கு நாட்கள் , கீழ்நோக்கு நாட்கள் , சமநோக்கு நாட்கள்  என்று கூறப்பட்டிருக்கிறதே, அது ஏன்? இவைகள் நட்சத்திரத்தின் அடிப்படையில் வருகின்றன .

ரோகிணி , திருவாதிரை , பூசம் உத்திரம் , அவிட்டம்,   உத்திராடம், திருவோணம் , சதயம் , உத்திரட்டாதி  ஆகிய  9  நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் என்று கூறுவார்கள்.  இந்த நாட்களில் மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களை விதைக்கவும் , மரங்களை நடவும், மேல்நோக்கி எழும் கட்டடங்களையும் , உயரமான மதில்களை கட்ட ஆரம்பிக்கலாம்.

பரணி , கிருத்திகை , ஆயில்யம் , மகம், பூரம் , விசாகம் , மூலம் , பூராடம் , பூரட்டாதி ஆகிய 9ம் கீழ் நோக்கு நட்சத்திரங்கள் .   கிணறு வெட்டுதல் , புதையல்  தேடுதல் , சுரங்கப்பணிகளை மேற்கொள்ளுதல் , கிழங்குவகை செடிகளை பயிரிடுதல்  முதலிய பணிகளை  இந்த நாட்களில் செய்யலாம் .

அஸ்வினி, மிருகசீருஷம், புனர்பூசம், ஹஸ்தம் , சித்திரை ,ஸ்வாதி , அனுஷம் , கேட்டை , ரேவதி  ஆகிய 9ம்  சமநோக்கு நாட்கள் . வாகனங்கள் வாங்குதல் , செல்லப்பிராணிகள் , பசு , காளை  வாங்குதல், சாலை அமைத்தல் , வாசக்கால் வைத்தால் , வயல் உழுதல் ஆகியவை இந்த நாட்களில் செய்யலாம்.

………………………………..

சங்கிலியுடன் அனுமன்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல்முடியனூர் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு தனிச்சந்நிதி உள்ளது . இங்கு ஆஞ்சநேயரின் கால்கள் கல்லினால் செதுக்கப்பட்ட சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது.

ராமா அவதாரம்  முடிந்து வைகுண்டம் போகும்முன் ராமர்  அனுமனையும் உடன் செல்ல அழைத்தார். ஆனால் அனுமன் , ‘நான்  பூலோகத்தில் இருந்து எங்கெல்லாம் ராம நாமம் கேட்கிறதோ அங்கெல்லாம் இருக்க விரும்புகிறேன்’ அதனால் ராமருடன் வர இயலவில்லை என்று சொல்லிவிட்டாராம் . ஆனால் ராமர் மீண்டும் அழைத்தால்  மனம் மாறிவிடுமோ என்று பயந்து கால்களில் சங்கிலி போட்டுக்கொண்டார் என்பது இந்த கோயிலின் ஸ்தல புராணங்களில் ஒன்று.
-மரகதம் சிம்மன், சென்னை.

Related Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...