0,00 INR

No products in the cart.

வாசகர்கள்  ஜமாய்க்கிறாங்க!

எஸ்.மாரிமுத்து, சென்னை
பிரிஞ்சி இலை பயன்கள் 

பிரிஞ்சி இலை இமயமலை, நேபாளம், பூடான் ஆகிய இடங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதில் ஆன்டி – ஆக்ஸிடன்டுகள், ப்ளேவோரைய்டுகள், கால்சியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, செலினியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.

இது செரிமான  பிரச்சனை வராமல் தடுக்கும். இதனை டீயில் கொதிக்க வைத்து குடித்தால் மலச்சிக்கல், குடலியக்க பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். பிரியாணி இலை ரத்த சர்க்கரை அளவை சீராக்கி இதய செயல்பாட்டை சீராக வைத்துக்கொள்ள உதவும். இது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

பிரியாணி இலையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் மூட்டு வலியைக் குறைக்கும். தலைவலிக்கு இந்த எண்ணெயால் மஸாஜ் செய்தால் தலைவலி நீங்கும். வீட்டில் ஒரு மூலையில் ஒரு பிரிஞ்சி இலையை எரித்து 10 நிமிடம் அறையை மூடிவிட்டு பின் திறந்தால் அப்புகை மன அமைதி தரும்.

தூக்கமின்மைக்கு இந்த இலையை நீரில் இட்டு காய்ச்சி குடிக்க நிம்மதியான தூக்கம் வரும். பிரிஞ்சி இலையை, கறி வகைகள், கேக், இனிப்பு, ரொட்டி முதலியவற்றில் போடலாம். இவை நறுமணத்திற்கும், பசியைத் தூண்டவும், ஜீரணக் கோளாறுகளை சரி செய்யவும் பயன்படும்.

வேப்பிலையின் பயன்கள்

காலில் பித்த வெடிப்பு உள்ளவர்கள் வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, அதனை வெடிப்பின் மேல் தடவி, காலையில் கழுவிவிட பித்த வெடிப்புகள் மறையும்.

நகச்சுத்தி ஏற்பட்டால் வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அதனை விரலில் வைத்துக்கட்டி வந்தால் விரைவில் குணமாகும். வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து பின் ஆறிய தண்ணீரை கொண்டு முகம், கை, கால்கள் கழுவி வந்தால் சரும பிரச்சனைகள் குணமாகும்.

வேப்பம் விதையுடன் வெல்லம் சேர்த்து காலை, மாலை ஒரு மண்டலம் சாப்பிட உள்மூலம், வெளிமூலம் தீரும். மாதம் ஒருமுறை வேப்பிலையை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும். வாந்தி, மயக்கம் குணமாகும். வேப்ப மரக்குச்சிகளால் பல் துலக்கினால் ஈறுகளை வலுப்படுத்தும்.

வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் கலந்து உடலில் தேய்த்துக்கொண்டு உறங்கினால் கொசுக்கடி, பூச்சி கடிகளிலிருந்து தப்பிக்கலாம். வேம்பு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.

மல்லிகைப் பூ பயன்கள்

மிழகமெங்கும் மல்லிகை அதன்  மலர்களுடைய முக்கியத்துவம் கருதி பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. மல்லிகை மலர்கள் மருத்துவத்தில் அதிகமாக உபயோகப்படுகின்றன.

தாய்ப்பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய மலர்ந்த மல்லிகைப் பூக்கள் இருபதை பாலூட்டும் தாய்மார்களின் மார்பில் அரைத்து இரவில் மூன்று நாட்கள் தடவ குணமாகும். மல்லிகை பூவை அரைத்து தொடையில் புண் உள்ள பகுதியில் இரவில் பூசிவர தொடைப் புண் குணமாகும்.

மல்லிகை உடல் வெப்பத்தை அதிகரிக்கும். குடல் புழுக்களை வெளியேற்றும். மல்லிகை வீக்கத்தைக் கரைக்கும். சிறுநீரைப் பெருக்கும். கண்நோய்கள், மனக்கலக்கம் போன்றவற்றை குணமாக்கும்.

மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து வெந்நீரில் கலந்து டீ போலக் காய்ச்சி குடிக்க சிறுநீரகக் கற்கள் நீங்கும். நீர் சுருக்கு, நீர் எரிச்சல் போன்றவை சரியாகும். மல்லிகைப் பூக்களை நிழலில் காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

மல்லிகைப் பூக்களை அடிக்கடி சாப்பிட உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, மூக்கடைப்பு நீங்க இப் பூக்கள் உதவி செய்கின்றன.

கீழாநெல்லி மருத்துவ குணங்கள்

கீழாநெல்லி மஞ்சள் காமாலை, குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்று வலி, பேதி, அதிக உஷ்ணம், கண் நோய்கள், பசியின்மை, தோல் நோய்கள், புண்கள், வீக்கம் போன்ற பல நோய்களுக்கு மூலிகை மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகிறது.

கீழாநெல்லியை அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை இரு வேளை தொடர்ந்து மூன்று நாட்கள் உட்கொள்ள உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும். நீர் சுருக்கு ஏற்பட்டால் கீழாநெல்லி இலையுடன், சீனி கற்கண்டு சேர்த்து மை போல அரைத்து இருவேளைகள் ஒரு வாரம் சாப்பிட சரியாகும்.

கீழாநெல்லி வேரை வாயில் போட்டு இரண்டு நிமிடம் மென்றால் பல்கூச்சம் போய்விடும்.

சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறு சேர்த்துப் பருகிவர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கலந்து குடிக்க மஞ்சள் காமாலை, வெப்பம், நீரிழிவு நோய்கள் குணமாகும்.

கீழாநெல்லி  இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து ஊறவிட்டு குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.

சுரைக்காயின் நன்மைகள்

சிறுநீரக கோளாறை  சரி செய்யும் மற்றும் உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய். இதில் வைட்டமின் பி, சி சத்துகள் உள்ளது. நீர்ச்சத்து 96.07%, இரும்புச்சத்து 3.2%, தாது உப்பு 0.5%, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.5%, கார்போ ஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகள் உள்ளது.

சுரைக்காயின் சதை பகுதியை  ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை பழ சாற்றை சேர்த்து பருகி வர சிறு நீரக கோளாறுகள் நீங்கும். சிறுநீர்க்கட்டு, நீர் எரிச்சல் ஆகியவைக்கு சிறந்தது.

அஜீரண கோளாறு உள்ளவர்கள் சுரைக்காய் சாப்பிடலாம். நா வறட்சி போகும். கை, கால் எரிச்சல், சதை பகுதி எரிச்சல் குறையும். உடலில் சர்க்கரையின் அளவு குறைய சுரைக்காய் உண்ணலாம்.

வெப்பத்தினால் ஏற்படும் தலைவலிக்கு  சதை பகுதியை அரைத்து நெற்றியில் போடலாம். தேவையற்ற வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறும். பெரு வயிறு நீர்க்கட்டுக்கு சுரையின் இலை ஊற வைத்து பருகலாம்.

மதிய உணவில் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். நரம்புகளுக்கு புத்துணர்வு தரும்.

Related Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...