0,00 INR

No products in the cart.

மேடையில் நீங்கள் பார்த்து ரசித்த நாடகம் எது? ஏன்?

FB பகிர்வு : மங்கையர் மலரில் பதிவு!

யிறு வலிக்க சிரித்து மகிழ்ந்த, ‘சாக்லேட் கிருஷ்ணா.’ இரவு சாப்பாட்டை மறந்த தருணம். அவ்வளவு இனிய நகைச்சுவை நாடகம்.
ஸ்ரீவித்யா பிரசாத்

தியாகராயர் மேனிலைப் பள்ளி, சென்னையில் ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்பு சேரும்போது டொனேஷனுக்காக (அதிகமில்லை; ஒருவருக்கு இருபத்தைந்து ரூபாய் தான்) கொடுத்த பணத்தில் தி.நகர் கிருஷ்ண கான சபாவில், ‘ஞான ஒளி’ நாடகத்திற்கு டிக்கட் கொடுத்தார்கள். திரைப்படத்தில் சிவாஜி நடித்த பாத்திரத்தில் மேஜர் சுந்தர்ராஜன் நடித்து இருந்தார். நடிப்பு மிக அருமை. அதுவே முதலும் கடைசியும் ஆகும். அதுவும் வகுப்பு தோழிகளுடன் பார்த்தது.
அன்பு பாலா

Ponniyin selvan. periya kaviyam medayil nadippadu sadarana vishayamillai. Oru sila Kuraigal irundalum pidiththirundadu.
– Rajalakshmi Srinivasan.

லங்கேஸ்வரா மனோகர் அவர்களின் நாடகம். மேடையிலே மாயாஜால காட்சிகள் அபாரம். அற்புதமான நாடகம்.
பத்மா முரளி

நான் மேடையில் அதிக நாடகங்கள் பார்த்ததில்லை. என் கணவருக்கு நடிப்பதில் ஆர்வம் அதிகம். படிக்கும் காலத்திலும் திருமணத்திற்கு முன்பும் அவரே நாடகங்கள் எழுதி, நடித்து இருக்கிறார். நான் பார்த்து ரசித்த இரண்டு நாடகங்களும் என் கணவர் நடித்ததுதான். 45 ஆண்டுகளுக்கு முன், தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட்டில் நடந்த ஒரு சமூக நாடகத்தில், டாக்டராக நடித்தார். சமீபத்தில், 2017ல் திருச்சி, ஆர்.ஆர்.சபாவில், ‘யாரோ இவர் யாரோ என்ற நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இரண்டிலுமே அவர் நடிப்பு நன்றாக இருந்தது. தொலைக்காட்சிகளில் கிரேசி மோகன், பாலச்சந்தர் நாடகங்களை விரும்பிப் பார்ப்பேன்.
லலிதா பாலா

கிரேஸி மோகன் அவர்களின்,
சாக்லேட் கிருஷ்ணா
சிரித்து சிரித்து வயிற்று வலியே
வந்த நகைச்சுவை நாடகம்
.
உஷா முத்துராமன்.

M.S.Amma biopic Drama’ – well narrated with important / informative / Interesting incidents that happened in her life with melodious songs. Super dialogues. Drama written / directed By Sri Shanmukhananda Theatre group Mumbai – Mrs Santhosh Rajan.
– Meena Latha

கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்.’ 1976ல் வெளிவந்த கிரேஸி மோகனின் முதல் நாடகம். நான் பார்த்த முதல் நாடகமும் கூட. இரண்டு மணி நேரம் முழுவதும் சிரிக்க வைத்த நாடகம். மோகனுக்கு,கிரேஸி மோகன் என்ற பெயரும் கிடைத்தது இந்த நாடகத்தால்தான். தமிழில் P.G.Wodehouse போல நகைச்சுவையாக எழுதியவர், கிரேஸி மோகன். இந்த நாடகம் பார்த்த பின், அவரது நாடகங்கள் ஒன்றையும் விடாமல் பார்த்திருக்கிறேன். யாரையும் புண்படுத்தாத, அப்பாவியான காமெடியாக இருக்கும்.
பாம்பே ஞானம் அவர்களின்,ஜெயதேவர் நாடகம் நான் மிகவும் ரசித்த ஒன்று. கிருஷ்ண பக்தரான ஜெயதேவரின் வாழ்க்கை வரலாற்றை பெண்கள் மட்டுமே பங்கேற்று நடித்த நாடகம் என்பது இதன் தனிச்சிறப்பு. ஞானம் அவர்கள், அதிக முயற்சிகளை மேற்கொண்டு சிறப்பாகத் தயாரித்த நாடகம். சிறந்த இசை, நடனம், நடிப்பு. செட்டிங்ஸ் பிரமாதம்.

தெய்வத்துள் தெய்வம் என்ற நாடகம். காஞ்சி மகா ஸ்வாமிகளின் வாழ்க்கையை நமக்குக் கண்முன் கொண்டுவந்த நாடகம். 108 நடிகர்களை சிறப்பாக நடிக்கவைத்து தயாரிக்கப்பட்ட நாடகம். தோட்டா தரணியின் காட்சி அமைப்புகள் நம்மை அந்தந்த காலகட்டங்களுக்கு அழைத்துச் செல்லும். மாண்டலின் இசை மனதுக்கு இதமாக இருக்கும். கடைசிக் காட்சியில் மகாபெரியவரின் கனகாபிஷேகக் காட்சி என்னை சிலிர்க்க வைத்துவிட்டது. அவரை நேரில் தரிசித்த உணர்வு ஏற்பட்டது.
ராதிகா ரவீந்திரன்

நான் பூனாவில் பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, சோ அவர்களின் மூன்று நாடகங்கள் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ‘யாருக்கும் வெட்கமில்லை நாடகம் என்றுதான் நினைக்கிறேன். ஒரு அரசியல்வாதி கூறுவார், ‘இவர் பெயர் கஜபதி. சுத்த தமிழ்ல ஆனை மணாளன்னு மாத்தி வச்சுக்கிட்டார் என்பார். அதன் பிறகு,இவன் என் பையன் கோபால் என்று அந்த அரசியல்வாதி கூறுவார். அதற்கு சோ,சுத்த தமிழ்ல பசும்பால்னு மாத்தி வச்சிக்கிறதுதானே என்பார். அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.
சுதா திருநாராயணன்

கிரேஸி தீவ்ஸ்இன் பாலவாக்கம்வயிறு குலுங்க சிரிக்க வைத்ததால்.
பிரேமா ரமணி

நான் மேடையில் பார்த்து ரசித்த நாடகம், S. V.சேகர் நடித்த,அல்வா. மதுரையில் வைத்துப் பார்த்தேன். நகைச்சுவை ரசிக்கும்படி இருந்தது.
ஜெயா சம்பத்

ண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று நான் பார்த்த ஒரே ஒரு நாடகம், முத்தான நாடகம் கோவையில் கொடிசியாவில் நடந்த, எழுத்தாளர் இசைக்கவி ரமணன் நடித்த,பாரதி யார்?’ என்ற நாடகம். அதில் ரமணனில் பாரதியைப் பார்த்தேன். ஏனைய கலைஞர்கள், காட்சிகள், வடிவமைப்பு கண்ணையும் மனதையும் கொள்ளை கொண்டன.
ஜானகி பரந்தாமன்

எஸ்.வி.சேகரின்,காதுல பூ நாடகம்! இன்றைய கலக்கப்போவது யாரு, அசத்த போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் அன்றே அவர் நாடகத்தில் பேசி, அப்ளாஸ் வாங்கி விட்டார்! கட் விட் மன்னன் அவர்!
தாரை செ.ஆசைத்தம்பி

சாக்லேட் கிருஷ்ணா தொடக்கம் முதல், கடைசி வரை செம கலகலமேஜிக் காட்சிகளில் வியந்து அசந்தது நிஜம்.
பாலகிருஷ்ணன் நன்னுசாமி

முகமது பின் துக்ளக்.’ மணமான புதிதில் சென்னை சென்றால், அண்ணன் (விருகம்பாக்கத்தில் இருந்தான்) சினிமாவை விட, நாடகத்துக்குத்தான் அழைத்துச் செல்வான். நாங்கள் மிகவும் ரசித்து சிரித்த நாடகம்,முகமது பின் துக்ளக்.’ ஒரு வாரம் அண்ணன் வீட்டில் சோ மாதிரி குதித்து குதித்து நடக்க, நாங்க குலுங்கி சிரித்த பொற்காலம் அது.
கோமதி சிவம்

நான் சிறு வயதில் ரசித்த நவாப் ராஜமாணிக்கத்தின்,சம்பூர்ண ராமாயணம்.’ அந்தக் காலத்திலேயே செட்டிங்ஸ் அற்புதமாக இருக்கும். அதுவும் அனுமாரை, ராவணனுக்கு முன் வாலால் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்தது பிரமிக்க வைத்தது.
ராஜலக்ஷ்மி கௌரிசங்கர்

Nadagamna manogarthan. Langeshwaran. Arumayana nadippu. Triplicane la Niraya poduvar. Screen mathuvathil Avaruku Nigar avarthan.
– Saroja Narayanan

பாம்பே ஞானம் அவர்களின் ஆதிசங்கரர், பக்த ஜெயதேவர், ராமகிருஷ்ண பரமஹம்சர், சீரடி சாய்பாபா ஆகிய நாடகங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத அற்புதமான ஆன்மிக சிந்தனைகளை விதைத்த நாடகங்களில் சில. அதுவும் ஜெயதேவர் டிராமா குரோம்பேட் கல்ச்சுரல் அகாடமியில் குடும்பத்துடன் பார்த்தோம். நடித்த ஒவ்வொருவரும் அருமையாகச் செய்திருந்தனர். ஜெயதேவரின் அஷ்டபதி பாடல்கள் அவ்வளவும் அருமையாக, காதுக்கு இனிமையாக இருந்தது. நாடகம் முடிந்ததும் யாருக்கும் எழுந்து போகவே மனசு வரவில்லை. அவ்வளவு ஒன்றிப் போயிருந்தோம் நாடகத்தில். ஒரே கூட்டம் உட்கார இடம் கிடைக்காமல் நிறைய பேர் நின்றுகொண்டே பார்த்தனர். தொடர்ந்து மூன்று நாட்கள் சென்று அதே நாடகத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தோம். உண்மையிலேயே பாம்பே ஞானம் அவர்களுக்கு ஒரு பெரிய ராயல் சல்யூட். அவருடைய இந்த ஆன்மிகப் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
கிருஷ்ணவேணி

சைக்கவி ரமணன் நடித்த நாடகம்,பாரதி யார் ?’ புகைப்படத்தில் நான் பார்த்த பாரதியை நேரில் பார்ப்பது போல் இருந்தது, அவரது தோற்றம். பாரதியார் இயற்றிய கவிதைகளை சரளமாகப் பேசியதில், மெய்மறந்து ரசித்தேன் அந்த நாடகத்தை. கை தட்டல்கள் குவிந்தன அவருக்கு அன்று.
பிரீதா ரங்கசாமி

னோகர் நடித்த,சாகுந்தலம், திருவிளையாடல் நாடகம், பாம்பே ஞானத்தின்,ரமண விஜயம், காத்தாடி ராமமூர்த்தி நடித்த,படி தாண்டிய பதி, கிரேசி மோகன் இயக்கத்தில்,சாக்லேட் கிருஷ்ணா இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். மேடை நாடகத்துக்கு ஈடே கிடையாது.
காயத்ரி ரவிச்சந்திரன்

கிரேஸி மோகனின்,மாது ப்ளஸ் டூ.’ மோகன் தம்பி பாலாஜியின் நடிப்பு சிறப்பாக இருக்கும். மாது, சீனு, ஜானகி, மைதிலி இந்த நான்கு கதாபாத்திரங்கள் அடிக்கும் கூத்து, கண்களில் நீர் வரும் அளவுக்கு சிரிக்க வைக்கும். பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். கொடுக்கும் காசுக்கு வாய் விட்டு சிரித்து, மன நிறைவும் பெற வேண்டுமென்றால், கிரேஸி மோகன் நாடகங்கள் பார்க்க வேண்டும்.
ஹேமலதா சீனிவாசன்

ல்கி இதழில் கிரேஸி மோகன், கேள்வி பதில் பகுதியில் சிறந்த கேள்வியாக என் கேள்வி தேர்வு செய்யப்பட்டு, சென்னையில்கல்கி நடத்திய விழாவில் கிரேஸி மோகன் மற்றும் மாது பாலாஜி ஆகியோர் கலக்கிய,சாக்லேட் கிருஷ்ணாதான் நான் பார்த்த முதல் நாடகம். இதுவரை நான் மேடை நாடகம் பார்த்தது இல்லை என்ற குறையைப் போக்கியது கல்கி. இன்றும் பசுமையான நினைவுகள் மறக்க முடியாது.கல்கி நிறுவனம் வாசகர்கள் மீது அன்பு காட்டி, பாசம் காட்டி, வரவேற்று மரியாதை செலுத்தியது, நெஞ்சை விட்டு நீங்காத நினைவு அந்த விழா.
பொ.பாலாஜிகணேஷ்

ளன் தமயந்தி, அரிச்சந்திரன் சந்திரமதி நாடகங்கள். நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது, கோயில் திருவிழாவில் பார்த்திருக்கிறேன். நளன் சூதாட்டத்தில் நாட்டை இழந்து, மனைவி, குழந்தையோடு காட்டிற்குச் சென்று சனியின் சூழ்ச்சியால் மனைவியைப் பிரிகிறான். நளனை பாம்பு தீண்டி உருவம் கருமை நிறத்தில் மாறிய காட்சி இப்போதும் என் மனத்திரையில் நிற்கிறது. நடித்தவர்கள் யார் என்று தெரியாது. அவர்கள் நடிப்பு மறக்க முடியாத அளவுக்கு தத்ரூபமாகவே இருந்தது.
கலைமதி சிவகுரு

ஜே.மகேந்திரன் எழுதி, S.A.கண்ணன் இயக்கத்தில் 1973ல், சிவாஜி நாடக மன்றத்தினர் நடத்திய,தங்கப்பதக்கம் நாடகமே மியூசிக் அகாடமியில் நான் பார்த்து ரசித்து மறக்க முடியாத நாடகம். அதில் S.P.சௌத்ரி வேடத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். முதல் சீன். திரை விலகியது. போலீஸ் உடையில் சிவாஜி மேடையின் ஒரு பக்கத்தில் இருந்து மாயாண்டி என்னும் ரவுடியை பூட்ஸ் காலால் உதைப்பார். அவன் தரையில் விழுந்து புரள, சிவாஜி வசனத்தை அரங்கமே அதிர, கர்ஜித்தபடி மீண்டும் மீண்டும் உதைத்து கையில் விலங்கை மாட்டி மேடையின் மற்றொரு புறம் இழுத்துச் செல்வார். அப்பவே கைத்தட்டல் காதைப் பிளந்தது. அதே விறுவிறுப்பு இறுதிவரை. SPயின் மனைவியா சிவகாமி என்பவரும், மகனாக ராஜபாண்டியன் என்ற நடிகரும் நடித்திருந்தனர். ‘ஒரு இனிப்புப் பண்டத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்குமோ, அந்த அளவு சிவாஜியின் நடிப்பு இருந்தது என தனது விமர்சனத்தில்,கல்கி இதழ் உயர்த்திக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெயகாந்தி மஹாதேவன்

நான்,கலாக்ஷேத்ரா அமைப்பைச் சேர்ந்த பள்ளியில் படிக்கும்போது நடன மாமேதை திருமதி ருக்மணி தேவி அருண்டேல் அவர்களின் மாணவிகள் நடித்த மேடை நாட்டிய நாடகமான ராமாயணம் பல முறை பார்த்து மகிழும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ராமர் வேடத்தில் தனஞ்செயன் அவர்களும் சீதையாக சாந்தா தனஞ்செயன் அவர்களும் நடித்தது என்றுமே மறக்க முடியாது. எனது ஐந்து வருட நடனப் பள்ளி காலத்தில் அங்கு நான் கண்ட பல நாட்டிய நாடகங்கள் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளன. ருக்மணி தேவி அவர்களை நாங்கள் அனைவரும்,அத்தை என்று தான் அழைப்போம். பள்ளி விடுதியில் தங்கி இருந்தபோதும், வீட்டு ஞாபகம் இல்லாமல் சந்தோஷமாக இருந்த சூழல், அங்கு கலாக்ஷேத்ராவில் இருந்தது. அங்கு இருந்த காலம் பொற்காலம்.
செல்வி மந்தீஸ்வரன்.

நான் படிக்கும் காலத்தில்,முகமது பின் துக்ளக் சோ நாடகம் மறக்க முடியாது. மனோகரின்,இலங்கேஸ்வரன் நாடகம். செட்டிங் எல்லாம் மிக அருமையாக இருக்கும். ‘சாக்லேட் கிருஷ்ணா (கிரேஸி மோகன்) பார்த்திருக்கேன். சிரிப்பு தாங்க முடியாது. அவ்வளவு அருமை.
பாம்பே ஞானம் நாடகம் இரண்டு மூன்று பார்த்து இருக்கேன். ஆதிசங்கரர் அருமையான பக்தி நாடகம். தத்ரூபமாக இருக்கும். பெண்கள் மட்டுமே நடிக்கும் நாடகக் குழு, பாம்பே ஞானத்தின் சிறப்பு. அவர்களுடைய யதார்த்தமான நடிப்பு எனக்குப் பிடிக்கும்.
சந்திரிகா சண்முகம்

னக்கு cinemavai விட, நாடகம் ரொம்பப் பிடிக்கும். Manohar drama விரும்பிப் பார்ப்பேன். Appodhe brahmanda set pottu asathuvar. Avarukku நிகர் அவர்தான்.

Crazy, S.V.Shekar combination comedykku. Kathadi ராமமூர்த்தி, டெல்லி கணேஷ் Combவில்,அய்யா அம்மா,ammamma drama semmaya இருக்கும்.
விஜயலக்ஷ்மி பத்மநாபன்.

கே.எஸ்.மனோகர் அவர்களின் நாடகம்,சகுந்தலா. நான் மிகச் சிறிய வயதில் ஒரு பத்து வயது இருக்கும் (60களின் பிற்பகுதி) பார்த்த நாடகம். ஆனால், பிரம்மாண்டமான மேடையில் அவருடைய அழகிய, அழுத்தமான வசன உச்சரிப்புகள் போக்கஸ் லைட்டுகள் கலர் கலராக மாறுவதுசீன்கள் டக்கென மாறுவது என அந்த பிரம்மிப்பிலிருந்து வெளிவரவே பல நாட்கள் ஆயிற்று. சரித்திர கதை என்பதால் இன்னும் கூடுதல் சிறப்பு. மன்னர் கதாபாத்திரத்திற்கு அவரைப் போல் வசனம் பேசவும், நடிக்கவும் யாராலும் முடியாது.
வள்ளி சுப்பையா

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...