
"ஜோக் எழுதுபவரைக் கட்டிக்கிட்டு அவஸ்தைப்படுறேண்டி."
"என்னாச்சு?"
"நான் திட்டுவதைக்கூட சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் சிரிக்கிறார்டி!"
– எஸ்.பவானி, திருச்சி
………………..
"இந்தக் காட்சியில நீங்க பேயா நடிக்கணும்…"
"மேக்கப் போட்டுக்கிட்டு வரட்டுமா?"
"மேக்கப் கலைச்சுட்டு வாங்க!"
– நிலா, திருச்சி
………………..
"புலவர் பாடுகிறார் என்கிறீர்கள்… சத்தமே வரலையே…?"
"இது மௌன ராகம் மன்னா!"
………………..
"தலைவர் என்ன ரொம்ப யோசனையில் இருக்கார்?"
"நோட்டாவை ஜெயிப்பது எப்படி என்பது குறித்துதான்!"
………………..
"தேர்தல் நேரத்தில், 'நான் உங்க வீட்டுப்பிள்ளை'ன்னு
சொன்னது தப்பா போச்சு!"
"ஏன்?"
"மளிகைக் கடைக்குப் போய்
தக்காளி வாங்கிட்டு வரச் சொல்லுறாங்க!"
………………..
"என் மகனை தலைவலிக்கு டாக்டரை போய்ப் பாருன்னு
சொன்னது தப்பா போச்சு…"
"ஏன்?"
"தியேட்டரில் டாக்டர் படம் பார்க்கப் போயிட்டான்!"
– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்