0,00 INR

No products in the cart.

காதல் முகவரி

தொடர்கதை
அத்தியாயம் – 2

– சுசீலா அரவிந்தன்
ஓவியம்: தமிழ்

பேருந்திலிருந்து இறங்கி நடந்து வந்தான் ஆதவன். அந்த கிராமத்துக்கே அன்னியமான உருவம். நல்ல கம்பீரம். பார்வையில் தீட்சண்யம்.

ஓடிவந்து அம்மாவை கட்டிக்கொண்டான். வெட்கத்துடன் முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொள்ளும் அம்மாவைப் பார்த்துச் சிரித்தான்.

எப்படிம்மா இருக்கே…? அப்பா எங்க?” தேடினான்.

கண்ணம்மாவுக்கு சொல்லொண்ணா பெருமை. ‘தனது வயிற்றில் பிறந்த பிள்ளையா இவன்? ராசாவாட்டம் இருக்கானேஊர் கண்ணு பட்டுடும். சாய்காலமா சுத்தி போடணும்.’ மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

சற்று நேரத்தில் மாடசாமியும் வந்துவிட்டான். அம்மா பரிமாற ஆசையாய் சாப்பிட ஆரம்பித்த ஆதவன், ‘‘நீயும் எங்களோட உக்காந்து சாப்பிடும்மா.’’ ஆசையுடன் அம்மாவை அருகில் இருத்திக் கொண்டான்.

நீ சாப்பிடுடா ராசாரொம்ப நாள் கழிச்சி வந்திருக்க. நல்லா சாப்பிடுப்பா” என்ற கண்ணம்மாவிடம்

ம்ஹும்நீயும் சாப்பிட்டாத்தான் நான் சாப்பிடுவேன்என ஆதவன் அடம் பிடிக்க

உக்காரு கண்ணம்மா. புள்ள ஆசையா சொல்லுதில்ல” என மாடசாமியும் கூற, மலரும் நினைவுகளாய் பழைய நினைவுகளைப் பேசிச் சிரித்தபடியே சாப்பிட்டார்கள்.

தவா, வாப்பா. நம்ப நாட்டாம ஐயாகிட்ட போயி ஆசீர்வாதம் வாங்கிட்டு வந்துடலாம்’’ என்றபடியே எழுந்த மாடசாமியை பின்தொடர்ந்தான் ஆதவன்.

பத்து பன்னிரெண்டு படிகள் கடந்து மேலே உயர்ந்த பெரிய மச்சு வீடு. வந்தவர்கள் அமர்ந்து பேச பெரிய திண்ணை. அதில் உயர் ரக சோபா செட்டுகள், அலங்கார விளக்குகள் என தன் வீட்டை மிக நவீனமாக்கியிருந்தார் நாட்டாமை ராஜசேகரன்.

, நம்ம ஊர்கூட நாகரிகமாயிருச்சே” என்றபடியே அப்பாவை பின் தொடர்ந்த ஆதவனை வரவேற்றார் ராஜசேகரன்.

யாரது? மாடசாமி பையனா? அடையாளமே தெரியலை. நல்லா இருக்கியா? இப்ப என்ன படிக்கிற?” அக்கறையாக விசாரித்தார்.

தம்பி, பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கப்பாஎன மாடசாமி சொல்லவும்

அடடேஎன்ன இது? என்னோட ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டு” என்றவர் வீட்டினுள் பார்த்து, “ஏம்மா ரெண்டு தம்ளர் மோர் கொண்டாம்மா.”

முற்றத்தில் கவிழ்க்கப்பட்டிருந்த இரண்டு பெரிய பித்தளை தம்ளர்களில் மோர் வந்தது. இந்த தம்ளர்கள் எப்போதும் வீட்டுக்குள் போகாது என்பதைப் புரிந்துகொண்ட ஆதவன், புன்னகைத்துக் கொண்டான்.

சரி ஐயாநாங்க உத்தரவு வாங்கிக்கிறோம்” என மாடசாமி புறப்பட எத்தனித்தான்.

அப்போது தனது தோழி கோமதியின் கைகளைப் பிடித்தவாறே உள்ளே நுழைந்த தனது மகளை ஆதவனுக்கு அறிமுகப்படுத்தினார் நாட்டாமை.

ஓவியம்: தமிழ்

தம்பி, இவதான் எம் மக வெண்ணிலா. பிறவியிலேயே பார்வை குறைபாடு இருந்துச்சு. வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக பார்வை பறி போயி, இப்ப ஏதோ நிழலா தெரியுதுன்னு சொல்றா. ஏதோ எட்டாங்கிளாஸ் வரைக்கும் படிக்க வைச்சேன். இந்த கிராமத்துல இருந்துகிட்டு அதுக்கு மேல் முடியல. ஏழெட்டு வருசம் ஓடிப் போச்சு. எனக்கு எல்லாத்தையும் கொடுத்த ஆண்டவர், எம் மக பார்வைய மட்டும் பறிச்சுட்டான்” பெருமூச்சு விட்டவாறே பேசினார் நாட்டாமை.

வணக்கங்க” கைகூப்பினான் ஆதவன்.

அவன் குரல் கேட்ட திசையையே பார்த்து விக்கித்து நின்றாள் வெண்ணிலா.

டீவெண்ணிலா” என தோழி உசுப்ப, சுய நினைவுக்கு வந்தவள் பதில் வணக்கம் சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றார்கள்.

என்னவோ தெரியலடி. அவர் குரல் கேட்ட உடனயே மனசுக்குள்ள ஓர் சிலிர்ப்பு. ரொம்ப வருசம் பழகினாற்போல ஓர் நெருக்கம் தெரிந்ததடி” என்ற வெண்ணிலாவை ஆச்சரியமாய் பார்த்தாள் கோமதி.

சரிசரிபார்த்து பேசு. அவகளுக்கும் நமக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. நாகரிகம் வளர போயிதான் நம்ம தெருவுக்குள்ள எல்லாம் அவுக வராக. இந்தப் பேச்ச இத்தோட விடு” என்ற தோழியின் கரங்களை தேடி ஆறுதலாய் பிடித்துக் கொண்டாள் வெண்ணிலா.

கோமதியிடம் அவர் வராறா? அவுங்க எங்காவது நிற்கிறாரா? அவர்கிட்ட பேசணும்போல இருக்குடி” என அரற்றினாள் வெண்ணிலா.

இதென்ன வம்பா போச்சி. அப்பாவுக்கு மட்டும் நீ இப்படிப் பேசுறது தெரிஞ்சது, நம்ம தோல உரிச்சி உப்பு கண்டம் போட்டுடுவார். அது தெரிஞ்சுமா நீ ஆதவன்கூட பேச நெனைக்கிறே?”

ஐயோஎன்ன கொஞ்சம் புரிஞ்சுக்கோ கோமு. இவ்வளவு நாள் உங்கிட்ட ஏதாவது நான் கேட்டிருக்கேனா? அவர் குரல கேக்கும்போது, மனசுக்குள்ள ஏதோ ஓர் அமைதி. ஏய்ப்ளீஸ்அவர் ஊருக்குப் போறதுக்குள்ள ஒரே தரம் பேச ஏற்பாடு செய்டி” என கெஞ்சியவளின் கண்களில் கண்ணீர் ஆறாய்ப் பெருகியதைப் பார்த்த கோமதிக்கு சற்றே மனமிரங்கியது.

இருந்தாலும் அது எப்படிடீ முடியும்?” எனக் கேட்டுக்கொண்டே எதேச்சையாக வாசல் பக்கம் பார்க்க

டீ வெண்ணிஉன் நம்பிக்கை வீண் போகல. அதோ ஆதவன் வறார்” என்றதுதான் தாமதம் துள்ளி எழுந்து நின்றுவிட்டாள் வெண்ணிலா.

ஐயா, நான் ஊருக்குப் புறப்படுகிறேன். சொல்லிட்டுப் போக வந்தேன்” என்றவன், தயங்கியபடி நிற்கவும்

என்ன?’ என்பதுபோல பார்த்தார் நாட்டாமை.

எனக்கு டவுன்ல நிறைய டாக்டர்களைத் தெரியும். வெண்ணிலாவுக்கு கண் பார்வை வர ஏதாவது வழி இருக்கான்னு விசாரிக்கிறேன். டவுன்ல சும்மா இருக்கும் நேரமெல்லாம் நானும் என் நண்பர்களும் அங்க இருக்கிற, ‘விழி ஒளி இழந்தோர்’ பள்ளிக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுப்போம். ஐயா, கண் பார்வை இல்லாதது எவ்வளவு பெரிய வேதனைன்னு உணர்ந்தவன் நான்” என்றான்.

ம்ம்ம்நாங்களும் ஏறாத கோயிலில்லை. பாக்காத வைத்தியமில்லை. ஏதோ உன்னால நல்லது நடக்குனும்னு இருந்தா நடக்கட்டும்பா.”

வெவரத்த தெரிஞ்சுக்கிட்டு அடுத்த வாரம் வரேன்யா” என்றவாறு விடைபெற்றுச் சென்றான் ஆதவன்.

(தொடரும்)

சுசீலா மாணிக்கம்
-சுசீலா மாணிக்கம் பாண்டிய நாடு (திருநெல்வேலி) பூர்வீகமாய் கொண்டிருந்தாலும் - சேரநாடு (தர்மபுரி) பிறந்து வளர்ந்து - சோழநாடு (திருச்சி) திருமணம் செய்துகொண்ட தமிழ் பற்று மிக்க எழுத்தாளர். தன் கல்லூரிக் காலத்து முதலே தமிழ்த்தாயின் செல்ல மகளாய் வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க, எழுதுவதை சற்றே மறந்திருந்த இவரை, மங்கையர் மலர் மீண்டும் கண்டெடுத்து ஊக்கப்படுத்தியது. சமுதாய உயர்வு கண்டு மகிழ்ச்சியில் சுழல்வதும், இழிவுகளைக் கண்டு சாட்டையை சுற்றுவதுமாய் நடைபோடுகிறது இவர் பேனா.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

0
‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். பகுதி - 7 ரஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லக்...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி... பகுதி -10 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல்... 1964 ஆம் ஆண்டு வந்த தேவர் பிலிம்ஸின் "வேட்டைக்காரன் "படத்தில் கேவி மகாதேவன் இசையில் கவியரசு...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

 பாகம் - 4   -சுசீலா மாணிக்கம்   திருக்குறளின் நான்காம் அதிகாரம் 'அறன் வலியுறுத்தல்' "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது  பொன்றுங்கால் பொன்றாத் துணை" பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப்...

இனியில்லை கடன்!

0
சென்ற வார தொடர்ச்சி... சிறுகதை: நாமக்கல் எம்.வேலு ஓவியம்: தமிழ் அதற்கப்புறம் ராமசாமியிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை.  எப்போது பணம் கொடுப்பாய் என்று எப்போவும் போல சோமசுந்தரமும் போன் போட்டு கேட்கவுமில்லை.  ஆபரேசன் நல்லபடியாய் நடந்ததா,...

குரு அருள் திரு அருள்!

பகுதி -2 -நளினி சம்பத்குமார் ஓவியம்; வேதா அனைத்தையும் அருளிடும் குருவின் பார்வை சமஸ்க்ருதத்தில் சுபாஷிதம் அதாவது நல்ல அர்த்தங்கள் பொருந்திய வாக்கியம் ஒன்று உண்டு. குருவின் பார்வை என்பது 1011 பார்வைக்குக் கூட ஈடாகாது, அதற்கும்...