0,00 INR

No products in the cart.

நம்பிக்கைகள்

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

நவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள்!

 • சூரிய பகவான் – சனிக்கிழமை அன்று ஏழு வகையான தானியங்களை ஊறவைத்து, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும். இதை ஏழு ஞாயிற்றுக்கிழமைகள் செய்து வர, சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.
 • சந்திர பகவான் – வளர்பிறை திங்கட்கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி, அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும். இதனால் சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.
 • செவ்வாய் பகவான் – தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய, செவ்வாய் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.

 • புத பகவான் – பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால், புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.
 • குரு பகவான் – வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வர, குரு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
 • சுக்ர பகவான் – சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை மலர் வைத்து முடிந்து, அதை ஓடும் நீரில் விட்டு விட, சுக்ரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
 • சனி பகவான் – ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து, நெருப்பில் போட்டு எரிக்க, சனி பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
 • கேது பகவான் – இரண்டு போர்வைகளை வேறு வேறு நிறத்தில் வாங்கி, பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க, கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
 • ராகு பகவான் – பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கி, அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட, ராகு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும். இதை நாக பஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி) அன்று செய்யவும்.

தான பலன்கள்!

 • அன்ன தானம் – தரித்திரமும் கடனும் நீங்கும்.
 • வஸ்திர தானம் – ஆயுளை விருத்தி செய்யும்.
 • பூமி தானம் – பிரம்ம லோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.
 • கோதுமை தானம் – ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.
 • தீப தானம் – கண் பார்வை தீர்க்கமாகும்.
 • நெய், எண்ணை தானம் – நோய் தீர்க்கும்.
 • தங்கம் தானம் – குடும்ப தோஷம் நீங்கும்.
 • வெள்ளி தானம் – மனக்கவலை நீங்கும்.
 • தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாகும்.
 • நெல்லிக்கனி தானம் – ஞானம் உண்டாகும்.
 • அரிசி தானம் – பாவங்களைப் போக்கும்.
 • பால் தானம் – துக்கம் நீங்கும்.
 • தயிர் தானம் – இந்திரிய விருத்தி ஏற்படும்.
 • தேங்காய் தானம் – நினைத்த காரியம் நிறைவேறும்.
 • பழங்கள் தானம் – புத்தியும் சித்தியும் கிட்டும்.
  – எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

அர்க்க புஷ்பம்

எருக்கன் செடிகளில் பல வகைகள் உண்டு. எருக்கம் பூ, செடி என அனைத்தின் பாகங்களிலும் ஏதேனும் மருத்துவப் பயன்பாடு நிச்சயம் உள்ளது. மருத்துவப் பயன்கள் மட்டுமின்றி, இறை வழிபாட்டிற்கும் சிறந்த மலராக எருக்கன் பூ திகழ்கின்றது.

‘அர்க்க புஷ்பம்’ என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் எருக்கம் பூ, விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர். சூரியனுக்கு, ‘அர்க்கன்’ என்று பெயருண்டு. சூரியனுக்கு உகந்த எருக்கம் பூவை விநாயகருக்கு அணிவித்து வணங்கும்போது, விக்னங்கள் நீங்குவதுடன் சூரியனின் அருளால் ஆத்ம பலமும், ஆரோக்கியமும் உண்டாகும். அனைவரும் எளிதாய் வணங்கும் விநாயகரை சாதாரணமாய் பூத்துக் கிடக்கும் எருக்கம் மலரில் வழிபட்டாலே அனைத்து அருளையும் வழங்குவார்.
– பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி

தீக்குச்சி வழிபாடு!

சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டியில் உள்ள, ‘சுட்ட விநாயகர்’ கோயிலில் தீப்பெட்டி தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய்து, எரிந்த தீக்குச்சியை வீட்டில் சேமித்து வைக்கிறார்கள். காரணம், விபத்து நேராமல் இந்த விநாயகர் காப்பார் என்பது அவர்களது நம்பிக்கை.
– ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம்

1 COMMENT

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...