0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

து ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சி…!

பாரதிராஜாவின், புதுமைப்பெண்’ படம் ரிலீஸ் ஆன சமயம்! பெத்தவங்க ஊருக்குப் போயிருந்தாங்க. நானும், என் தங்கையும் என் அண்ணனுடன், மார்னிங் ஷோ’வுக்குப் பிளான் போட்டாச்சு! சினிமா பார்க்கும் ஆவலில், சாப்பிடக்கூட இல்லை. சமைத்து வைத்துவிட்டு, மதியானம் வந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று போய்விட்டோம். சினிமா முடிந்ததும், அண்ணா செகன்ட் ஷிஃப்ட் வேலைக்குப் போய்விட்டான்.

ஒரு தென்றல் புயலாகி வருதே!’ன்னு பாடிக்கிட்டே வீட்டுக்குத் திரும்பினால்அட ராமா…! கையில வீட்டுச் சாவி இல்லை! அண்ணா, தெரியாமல் கொண்டு சென்றுவிட்டான். நாங்களும், சாவி’யை மறந்துவிட்டோம்.

இந்தக் காலம் போல ஃபோன் வசதி இல்லை. எங்கள் கையிலோ காலணா இல்லை.

பசி! பசி! பசி! வெறும் வயிறோட மாலை வரை தள்ளியாச்சு!

அன்னிக்குன்னு பார்த்து, அண்ணனுக்கு ஓவர் டைம்!

யாராவது எதையாவது சாப்பிடக் கொடுப்பாங்களான்னு எதிர்பார்த்தோம்நாங்களாகப் போய், பசிக்குது’ன்னு கேட்கவும் தயக்கம், வெட்கம், கௌரவம்!

யாரிடமாவது பணம் வாங்கி, பிஸ்கெட், வாழைப்பழம்னு சாப்பிட்டிருக்கலாமே? பசியில மூளையே வேலை செய்யலை போல.

பசி! பசி! இரவு பத்து மணி அளவில் வந்த அண்ணன், நாங்கள் மாடிப் படியில் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்த பின்புதான்,சாவி?’னு பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்து நொந்து போனான்.

அன்றைக்குத்தான் பட்டினியின் கொடுமை என்ன என்பதைத் தெரிந்துகொண்டேன்.

ஒரு நாள், பசி’யே இவ்வளவு ஆழமானத் தழும்பாக இருக்குமானால், இவ்வுலகில் தினமும் சோறின்றித் தவிக்கும் உயிர்களின் கொடூர நிலைமையைக் கற்பனைக்கூட செய்ய முடியவில்லை!

துக்கு இப்ப பழைய ரீலை ஓட்டறன்னு கேட்கறீங்களா இனிய நட்புகளேமேட்டர் இருக்கே!

மீப காலமா சில, பல யூட்யூப் வீடியோக்கள் கண்ணில் படுகின்றன. கண்டிப்பா நீங்களும் பார்த்திருப்பீங்கபுது மாப்பிள்ளைக்கு 101 விதமான உணவு வகைகளைச் செய்து விருந்து பரிமாறினார் பாசக்கார ஆந்திர மாமியார் ஒருவர். அதில் ஒரு கொழுக்கட்டையில் பூரணத்துக்குப் பதிலாக தங்கக்காசு வைத்திருந்தார்! (அது கொழுக்கட்டை அல்ல; ‘பணக் கொழுப்பு’க் கட்டை.)

தனது அன்புக் கணவருக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததைக் கொண்டாடும் வகையில், இனிப்பு, காரம், சாலட், சிற்றுண்டி என 60 விதமான டிஷ்ஸஸ் செய்து அசத்தினார் மங்கல மனைமாட்டி ஒருவர்!

ஷுகர், பி.பி., கொலஸ்ட்ரால் என அந்த சீனியர் சிட்டிஸன்க்கு என்ன பிரச்னையோ, சர்ப்பரைஸ் சிக்ஸ்ட்டி விருந்து மேஜையைப் பார்த்து, சிக்’ ஆகி ஒரு கணம் நின்றுவிட்டார்.

சாப்பாட்டு ராமன்’ என்ற காணொளியிலோ, முழு ஆடு, முழு கோழிகள், கிலோ கணக்கில் பிரியாணி என வெட்டு வெட்டு என வெட்டுகிறார் ஒருவர்.

பாஹுபலி லஞ்ச்’ என்ற பெயரில் கலர் கலராக, தட்டுத் தட்டாக உணவுகள்இனிப்புகள்சூப்புகள்நாலு பேர் மட்டுமே சாப்பிடணும் என்பதால் அத்தனையும் வீண்!

ரு நபருக்கான உணவை, இருவர் பகிர்ந்து கூட சாப்பிடலாம்தப்பில்லை. ஆனால், பத்து பேருக்கான உணவை ஒருவர், ஒருவேளை சாப்பிட வற்புறுத்துவது, அதையும், பெருமைக்குரிய உபசாரமாக’ காட்டிக்கொள்வது முட்டாள்தனம், துரோகம் மட்டுமல்ல; வருந்தற்குரிய குற்றம்!

வீண் விரயம் செய்வதிலேயே மோசமானது, உணவுப் பொருட்களை விரயம் செய்வதுதான்!

சாப்பிடும் பண்டத்தில் உங்கள் பெயர் இருக்கிறதோ இல்லையோ, நீங்க வீணாக்குற உணவில் நிச்சயம் அடுத்தவர் பசி இருக்குங்குறத புரிஞ்சுக்குங்க பெண்களே…!

நாம்ப ஹோட்டல்ல, வீட்டுல, விருந்துகள்ல மிச்சம் வைக்குற உணவின் அளவு, எங்கோ ஓர் ஏழையின் உயிர் மிச்சம் இருக்கத் தேவைப்படும். அதை மனசுல வெச்சு சமைக்கவும்.

ப்ளீஸ்உணவை வீணாக்காதீங்க…!

மாறாக, பகிருங்க! அன்பையும் கூடவே சேர்த்து!

 

2 COMMENTS

 1. உணவை வீணடிப்பது பெரும்பாவம். ஒவ்வொரு உணவுக்கு பின்னும் விவசாயியின் உழைப்பு, வேர்வை இருக்கிறது. பெருமைக்காக சமைத்து உணவை வீணடிப்பது பெரும் தவறு. உணவை வீணடிக்காமல் அளவாக சமைத்து உண்ணுவதே சிறந்தது.

 2. பசியின் வேதனை பசிப்பட்டவர்களால்தான் உணரமுடியும்.அந்த அகாே ரப் பசியினைப் பாே க்க வழி இல்லாத எத்தனை யாே பே ர்களின் .”பசி”
  அறிந்து மீந்து பாே னப் பாெ ருளை
  waste ஆக்காதீர் என்று ஒரு வார்த்தை
  தலையங்கம் மூலம் விழிப்புணர்வினை
  ஊட்டிய மங்கையர் மலருக்கு பாராட்டுகள்.
  து.சேரன்
  ஆலங்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

நான் படிச்ச காலத்துல, ஸ்கூல்ல, பசங்க எல்லாம் பேப்பர் ஏரோப்ளேன் செஞ்சு ‘சொய்ங்... சொய்ங்’னு பறக்கவிட்டு, விளையாடுவாங்க... அது கேர்ள்ஸ் பக்கமா வந்து விழுந்தா, எடுத்து டேபிள் மேல வெச்சுடுவோம். நாம்பளும் அதைத்...

ஒருவார்த்தை!

சில சமயங்கள்ல, தமிழ் சினிமாவை மிஞ்சும்படியான சம்பவங்கள் நடக்கிறப்போ, அதை உங்களோட பகிர்ந்துக்கத் தோணுது நட்புகளே! அது ஒரு ரொம்பவே நடுத்தரக் குடும்பம். கணவன் – மனைவி இரண்டு பேருமே கஷ்டப்பட்டு இன்னிக்கு ஒரு...

ஒரு வார்த்தை!

இந்த வார ‘ஒரு வார்த்தை’க்கு சிந்தனை வித்திட்ட ஆர்யா ராஜேந்திரன் மற்றும் ராஜராஜேஸ்வரிக்கு நன்றி.... ஒருவர் கோபத்தில்... அடுத்தவர் ஆபத்தில்...! திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யாவைப் பற்றி நமக்குத் தெரியும். 22 வயதான இவர்,...

ஒரு வார்த்தை!

பெங்களூருவின் பிஷப் காட்டன் பெண்கள் பள்ளி மிகவும் பிரபலமானது மட்டுமல்ல; பாரம்பரியமானதும் கூட! ஒழுக்கம் மற்றும் கல்விக்குப் பெயர் போனது. வசதியான, பிரமுகர்களின் செல்லப் பிள்ளைகளுக்குத்தான் பெரும்பாலும் அட்மிஷன் கிடைக்கும். அந்தப் பள்ளி, ஸாரி......

ஒரு வார்த்தை!

எட்டு ஆண்டுகளாக ஏங்கித் தவித்துப் பிறந்த குழந்தை அவள்! ப்ரீத்திக்கு மூன்று வயசாக இருக்கும்போது, அவளது அப்பா ஸ்ரீநிவாசன், அவளை நீச்சல் குளத்தில் தள்ளிவிட, தானே முயன்று நீந்தி மேலே வந்ததோடு, பயமில்லாமல்...