0,00 INR

No products in the cart.

சித்தன்னவாசல் சிவனார்!

வாசகர் ஜமாய்க்கிறாங்க

எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசல். இதற்கு, ‘தென்னிந்தியாவின் அஜந்தா குகை’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

அன்னவாசல் என்ற ஊருக்கு முன்னதாக உள்ளது. இந்த ஊரிலுள்ள சித்தன்னவாசல் குடைவரைக் கோயில் அமைந்துள்ள பகுதிக்கு, பேருந்தை விட்டு இறங்கி 2 கி.மீ தூரம் சிரமம் பார்க்காமல் நடந்து சென்றால், இரண்டாயிரத்துக்கும் முற்பட்ட சமூகப் பதிவுகளை ஓவியங்களாகவும் குடைவரைக் கலைகளாகவும் தனக்குள் பொத்தி வைத்திருப்பதை ரசிக்கலாம்.

சித்தன்னவாசல் சமண மத மையமாக இருந்ததை, இங்குள்ள கல்வெட்டுகளும் இந்த ஊரைச் சுற்றியுள்ள பழைமையான சமணச் சின்னங்களும் வெளிப்படுத்துகின்றன.

இங்குள்ள மலையின் மேல் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மலை மேல் ஏறி கிழக்குப் பக்கமாக வந்தால், புகழ் பெற்ற சமணர் படுக்கைகளைக் காணலாம்.

மொத்தம் ஏழு படுக்கைகள் இருக்கின்றன. தலை வைத்துக்கொள்ள தலையணை போல் மேடாகச் செதுக்கி வைத்துள்ளனர்.

இங்குள்ள பாறை ஆறு அங்குல ஆழத்துக்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது.

சங்க கால ஓவியம், சமணர் படுக்கைகள் என பல பொக்கிஷங்கள் இந்திய தொல்லியல் துறையால் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இங்கு ஒரு குகை இயற்கையில் அமைந்த தாழ்வாரம் போல் உள்ளது. 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னர் காலத்தில் இந்தக் குகை செப்பனிடப்பட்டுள்ளது.

இளங்கௌதமனார் என்னும் சமணத் துறவி, அவறீபசேகரன் ஸ்ரீவல்லப பாண்டியனுடைய உதவியைப் பெற்று இந்தக் குடைவரைக் கோயிலை (கி.பி.815 – 862) புதுப்பித்திருக்கிறார்.

ந்தக் குகைக் கோயிலும் ஓவியமும் உள்ள அறிவர் கோயில் மலை உச்சியில் நவாச்சுனை என்ற ஒரு சுனை உள்ளது. இந்த சுனையின் உள்ளே ஒரு மண்டபத்தில் சிவலிங்க திருமேனியாய் காட்சியளிக்கும் சிவபெருமானுக்கு, 28 வருடத்திற்கு ஒருமுறை, இறைவனின் உத்தரவின்படி ஒரு பூஜை நடத்தப்பட்டு வருகிறது

சமீபத்தில் இறைவனின் உத்தரவு பெற்று, சுற்றுலாத் துறையின் அனுமதியோடு இந்தச் சுனையில் இருந்த முழு கொள்ளளவு நீரையும் மின் மோட்டார் மூலம் வெளியேற்றி சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றன.

பூஜை ஆரம்பித்தவுடன் பாதாளத்தில் இருக்கும் இறைவனின் மீது சூரிய ஒளி பட ஆரம்பித்தது. பல நூற்றாண்டுகளாக அல்லது பல ஆயிரக்கணக்கான வருடங்கள் நீரினில் மூழ்கியிருக்கும் இந்த இறைவனின் சிவலிங்கத் திருமேனியானது துளி கூட பாசியடையாமல் இருந்தது பேரதிசயம். ஏனெனில், சுற்றிலும் இருக்கும் பாறை , மலை எல்லாம் பாசி படர்ந்துள்ள நிலையில், இந்தச் சுனையின் உள்ளே இருக்கும் இறைவனின் சிவலிங்கத் திருமேனி மட்டும் புதிதாய் காட்சியளிப்பது வியப்பினில் ஆழ்த்துகிறது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...

வீட்டுப் பணி – அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?

Ten Tips For Successful Work-Life Balance -உஷா ராம்கி அந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து...

ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி – மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!

 -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள். அது ஒரு காலம். இப்போது அங்கு கூட யாரும் காத்திருப்பது இல்லை. ஆனால்...

இனிதே நடந்தேறிய விக்கி- நயன் திருமணம்!

-ஜெனிபர் டேனியல் ***************************************************************** காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்! சுமார் ஏழு ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடிக்கு 09.06.2022 அன்று மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. துள்ளலில் விக்கி! திருமண தினத்தன்று...