0,00 INR

No products in the cart.

விழித்திடுங்கள் தாய்மார்களே!

– சுசீலா அரவிந்தன்

மீப காலமாக குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. சில நாட்களுக்கு முன் தமிழக மக்களைக் கொந்தளிக்க வைத்தது ஒரு நிகழ்வு. 17 வயது மாணவி, தனது இன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்,  ‘‘இவர்களை சும்மா விடக்கூடாது என மூன்று பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார். ஓடி விளையாடும் பருவத்தில், பற்பல கனவுகளிலும் தனது குறிக்கோள்களிலும் கவனம் செலுத்த வேண்டிய வயதை அடைவதற்குள் மூன்று மனித மிருகங்களை சந்தித்திருக்கும் அக்குழந்தையை நினைக்கும் போது…


பள்ளி என்பது குழந்தைகளுக்கு இரண்டாம் தாய் வீடு. ‘கற்றலும் கற்பித்தலும்’ என்பது ஒரு தெய்வீக பந்தம். குருகுல காலத்திலிருந்தே உணர்த்தப்பட்டும், உணரப்பட்டும் வந்த இணையில்லா உறவு.

ஆம்…

இன்றைய காலகட்டத்தில் சூழ்நிலை மற்றும் வயது காரணமாக மாணவர்கள் இதை உணரத் தவறி விட்டாலும், கற்பிக்கும் பெரும் பொறுப்பிலுள்ள ஆசிரியப் பெருமக்கள் இந்த தெய்வீக பந்தத்தை உணர்ந்து செயல்படும்போது புத்துணர்வையும், புத்தம் புது பார்வைகளையும், நேர்மறை எண்ணங்களையும் பிரதிபலிக்க முடியும். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ‘சிற்பங்கள் சிற்பியை’ செதுக்கும் அதிசய நிகழ்வையும், அதனால் பெறப்படும் ஆத்ம திருப்தியையும் உணர முடியும்.

இப்படிப்பட்ட மிகு உயர் நிலையை இக்காலகட்டத்தில் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மனிதம் மற்றும் மனிதத்துவமான அடிப்படை சூழ்நிலையை மட்டுமே எதிர்பார்க்கிறோம். கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக தொடர் பாலியல் சீண்டல்கள்… மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள். மறக்கவும் முடியாமல் வெளியில் சொல்லவும் முடியாமல் ஓர் சின்னஞ்சிறிய இதயம் எப்படித் துடித்திருக்கும்?!

பள்ளி நிர்வாகத்தின் கதவைத் தட்டினால் அவர்களும் உதவவில்லை. ‘எனது குழந்தைகளுக்கு நாங்கள் நண்பர்கள்’ எனக் கூறும் பெற்றோரிடம் கூட இம்மாதிரியான விஷயங்களை குழந்தைகள் பகிர்ந்து கொள்வார்களா? என்பது சந்தேகமே. நம் சமூக கட்டமைப்பு மற்றும் நமக்குக் கற்பிக்கப்பட்ட குழந்தை வளர்ப்பு முறைகளும் அப்படி.
பள்ளிகளில் இப்படி சிக்கிக்கொள்ளும் குழந்தைகள் தனது பெற்றோரிடம் தெரிவிக்காமலிருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். தனது படிப்பு தொடருமா? ஆசிரியரிடம் மனஸ்தாபம் ஆகிவிட்டால் பள்ளியில் தனது நிலை என்ன? படிக்காத பெற்றோர் சிரமப்பட்டு தன்னைப் படிக்க வைக்கும்போது அவர்கள் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? இப்படிப் பல்வேறு வழிகளில் குழப்பங்கள் இருக்கும்.

பள்ளி நிர்வாகத்தின் மாறான நடவடிக்கைகள் அதீத மன அழுத்தத்தைத் தந்திருக்கும். தனது நட்பு வட்டத்தில் சொல்லும்போது அவர்களின் அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்றாற் போலத்தானே வழிகாட்டுதலும் இருந்திருக்கும். குழப்பத்தின் உச்சநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பாள். அந்த சின்னஞ்சிறு இதயம் எத்தனை துரோகங்களைத்தான் தாங்கும்? ஒரு பள்ளிக்குப் பெண் குழந்தைகளை நம்பி அனுப்ப முடியவில்லை என்றால் நாம் எந்த வகை சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமுதாயத்தின் ஒவ்வொரு கட்டமும் சீரமைக்கப்பட வேண்டியது அவசியமாயிருக்கிறது.

குடும்ப ரீதியாகப் பார்க்கும்பொழுது, பெற்றோர் குழந்தைகளுக்கிடையேயான புரிதல்… பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி, நட்பு ரீதியான புரிதலை மேம்படுத்திக்கொள்வது அவசியம். யார் என்ன சொன்னாலும், ‘எனது மகள், எனது மகன் என்னிடம் வந்து சொல்லி விடுவார்கள்’ என்ற மிக உன்னதமான உறவை ஏற்படுத்திக் கொள்வது நமது கடமையாகிறது. குழந்தைகளின் அன்றாட செயல்பாட்டில் மாறுதல் ஏற்பட்டால், ‘ஏதோ தவறு நடக்கிறது’ என்ற விழிப்புணர்வு ஒவ்வொரு பெற்றோருக்கும் அவசியம் தேவை. நடந்தவற்றை நம்மிடம் குழந்தைகள் சொல்லத் தயங்கும்பொழுது அவர்களுக்குப் பிடித்த உறவுகளிடமோ, நட்பு வட்டத்திலோ பேச வைத்தல், குழந்தைகளின் நண்பர்களை விசாரித்தல், குழந்தைகளின் மனம் நோகாமல் பேசுதல் என பல்வேறு செயல்பாடுகள் செயல்படவேண்டும். கவுன்சிலிங் தேவை எனும் பட்சத்தில் தயக்கம் காட்டாமல் அழைத்துச் செல்வதும் அவசியம்.

பள்ளி ரீதியாகப் பார்க்கும்போது, ஒரு மாணாக்கரின் செயலில் வேறுபாடுகள் தெரிந்தால் அந்த வகுப்புக்குச் செல்லும் ஏதாவது ஒரு ஆசிரியருக்காவது கண்டிப்பாய் தெரிய வாய்ப்புகள் அதிகம். பெற்றோர்கள் அடிக்கடி பள்ளி சென்று ஆசிரியர்களைச் சந்திப்பது அவசியம். பள்ளிகளில் Trained Counselor குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதில் வயது முதிர்ந்த, அனுபவம் வாய்ந்த பெண்களும் பணிபுரிவது வரவேற்கத்தக்கது. அவர்கள் மாணவர் – ஆசிரியர் – பெற்றோர் இடையே பாலமாய்ச் செயல்பட வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு, தங்களின் பாதுகாப்புக்கான சட்டங்கள் பற்றிய அடிப்படை அறிவு அவசியம். ஒவ்வொரு குழந்தைக்கும், ‘சைல்ட் ஹெல்ப் லைன் எண் : 1098’ மனப்பாடமாய் தெரிந்திருப்பது மிக மிக அவசியம்.

சட்டரீதியாக…
இதற்குச் சட்டத்தைக் கரைத்துக் குடித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தங்களின் முக்கியத்துவம், தங்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது சட்டங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் புரியவைக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும்.

பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்ய முற்படுவதைத் தடுக்க இருக்கும் (தவறான பயன்பாட்டை தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் ) சட்டத்தில் ஆரம்பித்து, குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான நீதி முறை (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ) சட்டம்…
இப்படிப் பல்வேறு சட்டதிட்டங்கள் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பாலியல் ரீதியான தொல்லைகளுக்கென தனியாக இயற்றப்பட்டதுதான் போக்சோ சட்டம்.
(POCSO – THE PROTECTION OF CHILDREN FROM SEXUAL OFFENCES) இச்சட்டம், மாநிலங்களவையில் 2012 மே மாதம் 10ஆம் தேதியும், மக்களவையில் மே மாதம் 22ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டு, இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு அரசிதழில் (GAZETTE OF INDIA) வெளியிடப்பட்டு, நவம்பர் 14 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க முக்கியமாக இயற்றப்பட்டதுதான் இந்த போக்சோ சட்டம். போக்சோ சட்டம் இயற்றுவதற்கு முன், இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 354 (A)ன் கீழ், ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது குற்றவாளிக்கு ஒன்று முதல் மூன்று வருடங்கள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும்.

பாலியல் தாக்குதலுக்கு உட்படும் ஆண் குழந்தைகளுக்கு இச்சட்டம் பொருந்தாது. ஆனால், பாலின பாகுபாடின்றி அனைத்துச் சிறார்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் தாக்குதல், துன்புறுத்தல், வன்கொடுமை, வன்புணர்வு ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் போக்சோ சட்டம் 2012. 18 வயது பூர்த்தியடையாத குழந்தைகளுக்கு இச்சட்டம் பொருந்தும். இச்சட்டத்தில் 9 பகுதிகள் மற்றும் 46 சட்டப் பிரிவுகள் உள்ளன.

ஒரு குழந்தை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகிறது என அறியும் பட்சத்தில், சட்டென நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் அல்லது இருக்கும் இடத்திலிருந்தே, ‘சைல்ட் ஹெல்ப் லைன் எண் : 1098’க்கு ஒரே ஒரு போன் கால். அதன்பிறகு அக்குழந்தையை போக்சோ சட்டம் பாதுகாத்துக்கொள்ளும்.

அப்படிப் புகாரளித்த பின்…

 • மற்ற வழக்குகளைப் போல FIR பதிவு செய்த பின்தான் விசாரணையைத் துவக்க வேண்டும் என்பது இல்லை. புகார் பெறப்பட்ட உடனேயே விசாரணையைத் துவக்க வேண்டும்.
 • விசாரணை வெளிப்படையாக நடத்தப்படுவதில்லை. குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி ரகசியமாக நடத்தப்படும்.
 • விசாரிக்க வரும்பொழுது கண்டிப்பாகப் போலீஸ் உடையில் வரக்கூடாது.
 • குறைந்தபட்சம் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் உடன் வருவார்.
 • பாதிக்கப்பட்ட குழந்தை தனது வாக்குமூலத்தை எங்கு சொல்ல விரும்புகிறதோ, அங்கே அழைத்துச் செல்லப்படுவர். ஒருவேளை பாதிப்புக்கு உள்ளாக்கியது அவர்கள் வீட்டில் உள்ளவர்களாகக் கூட இருக்கலாம்.
 • காவல்துறை, நீதித்துறை ஆணைகளுக்காகக் காத்திருக்காமல் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட வேண்டும்.
 • குழந்தையின் வாக்குமூலமும் மருத்துவப் பரிசோதனை அறிக்கையும்தான் விசாரணைக்கு மிக முக்கிய ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
 • பாதிக்கப்பட்டது பெண் குழந்தையாக இருப்பின், ஆண் மருத்துவர் சோதனை செய்யக் கூடாது. (Under section 21.)இத்தனை சட்ட திட்டங்கள் இருந்தாலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டேதான் போகின்றன. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 2019ல் சில சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகளின் வயதை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
 • 12 வயதுக்குக் கீழ்.
 • 13லிருந்து 16 வயது வரை.
 • 17 மற்றும் 18 வயது.
 • 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளுக்குக் குறைந்தபட்சமாக இருபது வருட சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனையும், அதிகபட்சமாக மரண தண்டனை வரை வழங்கப்பட வேண்டும்.
 • 13 லிருந்து 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளுக்குக் குறைந்தபட்சமாக இருபது வருட சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.
 • 17, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் ஏழு ஆண்டுகள் சிறையும், அதிகபட்சம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும்.
  இம்மாதிரியான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை வழங்கலாம். குற்றச்செயல் கூட்டு பலாத்காரமாக இருந்தால் குழந்தை எந்த வயதினராக இருந்தாலும் குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கலாம். இச்சட்டத்துக்கு உட்பட்ட வழக்கை விரைந்து மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

 

 

நன்றி :
தி.தீபாமதி, வழக்கறிஞர்,
மதுரை உயர்நீதிமன்றம்
.

வ்வளவு சட்ட திட்டங்கள் இருந்தாலும் ஏதோ ஓரிடத்தில், ஏதோ ஓர் உருவத்தில் ஓநாய்கள் தங்கள் வலைகளை விரித்துக்கொண்டு காத்துக்கிடக்கின்றனவே.
எனவே, பெற்றோர்கள் விழிப்புடன் இருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
போக்சோ சட்டம் இப்படிப்பட்ட வழக்குகளில் எவ்வளவு வேகமாய், வீரியமாய் பாய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

சுசீலா மாணிக்கம்
-சுசீலா மாணிக்கம் பாண்டிய நாடு (திருநெல்வேலி) பூர்வீகமாய் கொண்டிருந்தாலும் - சேரநாடு (தர்மபுரி) பிறந்து வளர்ந்து - சோழநாடு (திருச்சி) திருமணம் செய்துகொண்ட தமிழ் பற்று மிக்க எழுத்தாளர். தன் கல்லூரிக் காலத்து முதலே தமிழ்த்தாயின் செல்ல மகளாய் வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க, எழுதுவதை சற்றே மறந்திருந்த இவரை, மங்கையர் மலர் மீண்டும் கண்டெடுத்து ஊக்கப்படுத்தியது. சமுதாய உயர்வு கண்டு மகிழ்ச்சியில் சுழல்வதும், இழிவுகளைக் கண்டு சாட்டையை சுற்றுவதுமாய் நடைபோடுகிறது இவர் பேனா.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...

வீட்டுப் பணி – அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?

Ten Tips For Successful Work-Life Balance -உஷா ராம்கி அந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து...

ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி – மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!

 -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள். அது ஒரு காலம். இப்போது அங்கு கூட யாரும் காத்திருப்பது இல்லை. ஆனால்...

இனிதே நடந்தேறிய விக்கி- நயன் திருமணம்!

-ஜெனிபர் டேனியல் ***************************************************************** காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்! சுமார் ஏழு ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடிக்கு 09.06.2022 அன்று மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. துள்ளலில் விக்கி! திருமண தினத்தன்று...