0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்!

‘டான்’ பார்த்தீங்களா அனு மேம்?

-ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்

மீபகாலமா, எந்தப் படத்து வசனத்துக்கும் நான் இமோஷனல் ஆனதில்ல. எந்தப் படத்துக் காமெடியையும் கைதட்டி ரசிச்சதில்ல. இரண்டையும் ‘டான்’ படத்துல செஞ்சுட்டேன்! சூரியை அப்பாவாக ‘செட்-அப்’ செஞ்சு, அழைச்சுக்கிட்டு வரும் காட்சிக்கு நீங்க வாய் விட்டுச் சிரிக்கலைன்னாலோ, சிவகார்த்திகேயனின் அம்மாவாக வரும் பாண்டிலட்சுமி பேசும் க்ளைமேக்ஸ் வசனத்துக்கு நீங்க கண்கள் கசியலைன்னாலோ சம்திங் ராங்னு அர்த்தம்! உங்கக் குடும்ப டாக்டரை அவசியம் கன்சல்ட் பண்ணுங்க ப்ளீஸ்!

படத்தைப் பொறுத்தவரை முதல் பாதி கலகலப்பு… சிறப்பான தியேட்டர் மொமன்ட்ஸ்! பிற்பாதி உணர்ச்சிகரமான வெரைட்டி பேக்கேஜ்!

சந்தோஷ் சுப்ரமணியம், நண்பன், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களை நியாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. என்றாலும் பீஸ்ட், வலிமை போன்ற படங்களைப் பார்க்கும் போது இது எவ்வளவோ பரவாயில்லை.

துள்ளல் நடிப்புக்குப் பிரசித்தமான எஸ்.கே, அப்பாவாகவே வாழ்ந்திருக்கும் சமுத்திரக்கனி, கல்லூரி வாழ்க்கையை ரசித்துப் படமெடுத்திருக்கும் இயக்குநர் சி.பி.சக்ரவர்த்தி… எல்லோருக்குமே ஹாட்ஸ் ஆஃப்!

இன்னியத் தேதிக்கு, குடும்பத்தோட போய் ரசிக்கலாம்னா  ‘டான்’ படத்தை சிபாரிசு செய்யலாம்!

**********************

வாக்கிங் சென்றாலும் எடை குறையலைன்னு சிலர் வருத்தப்படறாங்களே?

-எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

ந்தப் பதிலை எழுதறதுக்கு முன்னாடி வந்த ‘பிரேக்கிங் நியூஸ்! ‘பெங்களூரில் உடல் கொழுப்பைக் குறைத்து, தன் அழகை மேம்படுத்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்த கன்னட நடிகை (வயது 21) மேக்னா ராஜ், மாலையில் உயிரிழப்பு!’

நம்முடைய பெற்றோரின் பழைய ஃபோட்டோவைப் பாருங்க. அந்த வயசுல அவங்க எப்படி இருந்தாங்களோ, நாம்பளும் அப்படித்தான் இருப்போம். ஏறக்குறைய! பாரம்பரியமாகவே, குள்ளமாக, பருமனாக, அகலமாக இருக்கும். பெற்றோருக்குப் பிறக்கும் பெண்கள் த்ரிஷா பொல நூலிழை நங்கையாக இருக்க ஆசைப்படுவது தப்பில்லை; ஆனால் அது கொஞ்சம் கஷ்டம்! ஏன்னா… உள்ளே பூந்து நடப்பது டி.என்.ஏ. திருவிளையாடல் ஆச்சே!

மூச்சிறைக்க வாக்கிங் போகணும்; காய்கறி, கீரை, தானியங்களை மட்டுமே சிறு அளவில் சாப்பிடணும்; அதுவும் டயட்டீஷியன் துணையுடன்… தீவிர உடற்பயிற்சி மஸ்ட்! தியானம், யோகா செஞ்சா வெரி எஃபெக்டிவ்! இப்படியெல்லாம் ஒரு இரண்டு வருஷமாவது தொடர்ந்து செஞ்சா, உடல் எடை கண்டிப்பாகக் குறையும்!

மனமிருந்தால் மார்க பந்து! (தாங்க்யூ கிரேஸி ஸார்!)

**********************

ஒரு தலைமுறை முன்புவரை, மிடில்கிளாஸ் குடும்பங்கள் உட்பட, பலரும் எட்டு, பத்து குழந்தைகள் பெறுவது சகஜமா இருந்தது. அவர்களும் வளர்ந்தனர்; வாழ்ந்தனர். ஆனா, இப்ப ஒரு பெற்றோர் “மகனுக்குத் திருமணம் செய்து வைத்து ஆறு வருடமாச்சு, இன்னும் நாங்க தாத்தா – பாட்டி ஆகல”ன்னு கோர்ட்டுல கேஸ் போடறாங்க; இன்னொரு பெற்றோர் மீது பிள்ளை, “என்னை ஏன் பெத்தீங்க?”ன்னு கேஸ் போடுது. எங்கே போகுது நம் சமூகம்?

-ஜெயந்தி மகாதேவன், பாலவாக்கம்

(அம்மாடியோவ்! எம்மாம் பெரிய கேள்வி!)

ஏன் நிறுத்திட்டீங்க?

  • 12 வயசுல ஒரு சிறுமி தாயாகிறாள்.
  • கள்ளக் காதலனை வெட்டிக் கூறு போடுகிறாள் ஒரு பெண்!
  • ‘பிறந்தநாள் பார்ட்டி‘னு அழைச்சுக்கிட்டுப் போய் பள்ளி மாணவனைக் கொலை செய்கிறார்கள்.
  • பாட்டியை பேத்திகள் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரிக்கிறார்கள். பேப்பரைப் பிரிச்சாலே பி.பி. எகிறது.
  • மேலை நாடுகளைப் போலவே இங்கேயும் குடும்ப உறவுகள் கேள்விக்குறியாகவும், கேலிப் பொருளாகவும் மாறிவிட்டதே காரணம்!
  • அங்கே சகிப்புத்தன்மை இன்மையால், குடும்பங்கள் உடைவதும், அதனால் பிள்ளைகள் பாதிக்கப்பட்டு மனநலம் குன்றுவதும் சகஜம்! இங்கேயும் அது பரவிவிட்டது.

எங்கே போகுது சமூகம்னு கேட்டீங்க இல்லியா? நஞ்சுமிக்க நவீனப் பாதையை நோக்கி! டாக்ஸிக் ரூட்!

**********************

‘ஒருவருக்கு ஒரு பதவி, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு’ – காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் பற்றி

-வாணி வெங்கடேஷ், சென்னை

ல்ல தீர்மானம்… ஆனா கிட்டத்தட்ட 50 வருஷ லேட்டாயிடுச்சேம்மா! இத்தனை வருஷத்துல இதுவே இப்பதான் மேலிடத்துக்குத் தோணிச்சாமா? நம்ப கார்ப்பரேட் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஓப்பனிங் ஸ்க்ரீன் ஐடியா போல இருக்கே?… ஏதோ நல்லது நடந்தா சரி! பை தி வே… 2023- தெலுங்கானா ராஷ்ட்ர சமித்தி கட்சிக்கும் இவர்தான் ஸ்ட்ராடஜி ப்ளானராம்! இவரோட ‘ஐ.பேக்’ கம்பெனியோட ஃபீஸ் 70 கோடின்னு பேசிக்கிட்டாலும், நம்ப தமிழ்நாட்டுல மாற்றம் வர்றதுக்கு 350 கோடி குரு தட்சிணையா வாங்கிட்டாராம்! பேசிக்கிட்டாங்க! ஆமா… கோடிக்கு எத்தனை சைபர்? நமக்கு அதுவே தெரியலை!

1 COMMENT

  1. அரசியல் கேள்விக்கும் அட்டகாச பதில். மேடம்….நீங்களும் ஜமாய்க்கிறீங்க………. !!
    KRS.சம்பத்

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

மேடம், ‘அக்னிபாத் திட்டம்’ என்றால் என்ன? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? - வி. கலைமதி சிவகுரு, நாகர்கோவில் அது ‘அக்னிபாத்’ அல்ல! அக்னிபத்! ‘அக்னிப்பாதை’ என்று பொருள், கலைமதி! “17.5 முதல் 23 வயதுக்கு...

அன்புவட்டம்!

இடைவிடாமல் வேலை செய்யும் எமதர்மன் இரண்டு நாட்கள் லீவில் சென்றால்...! - வாசுதேவன், பெங்களூரு ‘வென்டிலேட்டர் எடுத்தால் முடிஞ்சுடும்’ என்ற கேஸ்கள் கூட வென்டிலேட்டர் எடுத்த பின்னும் இரண்டு நாட்கள் சுவாசிப்பார்கள். - மெடிக்கல் மிராக்கிள்! கூலிப்படையை வெச்சு...

அன்புவட்டம்!

மாம்பழ சீஸனாச்சே? நீங்க விரும்பியப்படி ஒரு பழமாவது நசுக்கி, கசக்கி, ஜூஸாக்கி, ஓட்டைப் போட்டு உறிஞ்சினீங்களா? நேரம் இருந்ததா? இல்ல வாசகர்களுக்கு பதில் சொன்னதோடு சரியா? -ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம் இவ்ளோ பழகியும் என்னைப் புரிஞ்சுக்கிட்டது...

ஒரு வார்த்தை!

அந்த விளையாட்டுக்கு உங்க ஊருல என்ன பேர்னு தெரியல... நாங்க வெச்ச பேரு ‘தோசை! சீட்டுக் கட்டில் உள்ள அத்தனை சீட்டுக்களையும் குப்புற பரப்பி வெச்சுடணும். ஆளுக்கு இரண்டு சீட்டுக்களைக் குருட்டாம் போக்கில் எடுக்கணும்....

அன்புவட்டம்!

நடிகை நயன்தாரா திருமணப் பத்திரிகை வந்தால் போவீர்களா? (ஸாரி, ‘குமுதம்” – அரசு பதில்களில் கேட்க வேண்டியக் கேள்வி... ஒரு ஆர்வக் கோளாறில்...?!) -ஆர். நாகராஜன், செம்பனார்கோவில் ‘தவறான கேள்விக்குப் பதில் எழுத முயற்சி செஞ்சாலே, முழு...