0,00 INR

No products in the cart.

டைரி!

கதை: தேன்சிட்டு
ஓவியம்: தமிழ்

 

6/8/2000

ன்னிக்கு காலேஜ்ல ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துச்சு. கீதா, அவளோட பிரண்ட்ஸோட பேய் கிட்ட பேசினேன்னு சொன்னா . “பேயா? ரொம்ப ரீல் விடாதேன்னு,” அவளை ஓட்டினேன்.

ஆனா,  முகத்த சீரியஸா வெச்சுகிட்டு, நெஜமாத்தான் என்பது போல ஒரு கதை சொன்னா. ஒரு லாரி டிரைவரோட ஆவி கிட்ட அவ பேசினாளாம். அவரு அமெரிக்காவுல ஒரு கம்பெனில வண்டி ஒட்டிக்கிட்டு இருந்தாரு. விபத்துல ஒரு மாசம் முன்னால இறந்து போயிட்டாரு. அந்த கம்பெனி இணையத்தளத்துல அந்த செய்தி இருக்குன்னு அந்த ஆவி சொன்னதா கீதா சொன்னா.

இது என்ன நம்மூரு மாய மந்திர கதை மாதிரில்ல இருக்குன்னு நிறைய கேள்வி அவளை துருவி துருவி கேட்டேன். எல்லாத்துக்கும் பிசகாம பதில் சொன்னா. அவ சொன்னதை பார்த்தா உண்மை சொல்றா மாதிரியே இருந்துச்சு.

” நானும் என்னோட ஸ்கூல் பிரண்ட்ஸும் இந்த ‘ஒவ்ஜா  போர்டு‘ விளையாடினோம் . அதுல ஜேம்ஸ்னு ஒருத்தரோட ஆவி வந்து பேசிச்சு. ஜேம்ஸ் ஒரு லாரி டிரைவர் . அவர் கதையை எங்களால அந்த இணையத்தளத்துல ஒப்பீடு செஞ்சு சரி பார்க்க முடிஞ்சது,” அப்படீனு கீதா சொன்னா.

அந்த போர்டு எந்த கடையில விக்குதுன்னு கேட்டேன். அதுக்கு அவ ஒரு பேப்பரும், ஒரு காயினும் இருந்தா போதும் விளையாடலாம்னு சொல்லிட்டா.

ஒரு காகிதத்துல, ஆங்கில எழுத்துக்கள் எல்லாம் மேல பாதி, கீழ பாதின்னு எழுதணுமாம். நடுவுல காயின் வைக்க ஒரு வட்டம் போடணும். அந்த வட்டத்துக்கு பக்கத்துல Yes , No  இருபக்கமும் எழுதணும். அந்த பேப்பரோட மத்த இரண்டு பக்கத்துலயும் 0-9 எண்கள பிரிச்சு எழுதணும்.

சுடுகாடு, மெழுகுவத்தி, ராத்திரி நேரம் எதுவும் வேணாம். காலேஜ்லயே விளையாடலாம்னு கீதா சொல்லிட்டா. நாளைக்கு நாங்க கிளாஸ்ல விளையாடப் போறோம். ரொம்ப ஆர்வமா இருக்கு.

ஆனா, இங்கிலிஷ் தெரிஞ்ச ஆவியா வரணும். 26 எழுத்துக்கள் சுலபமா பேப்பர்ல எழுதிடலாம். தமிழ்னா 247 எழுத்துக்கள். ரொம்ப கஷ்டம். பிராக்டிகல் டிபிகல்ட்டி காரணமா ரெண்டு மொழிகளும் தெரிஞ்ச பேயா வந்தா நல்லாயிருக்கும்.

– சித்ரா

——————-— —-

7/8/2000

ன்னிக்கு பேயும் வரல, ஒண்ணும் வரல. கீதா பொய் சொல்றாளோன்னு எல்லாருக்கும் டௌட் வந்திடுச்சு. ஆனா, கீதா ரொம்ப நல்ல பொண்ணு . அவளுக்கு சிந்து மாதிரி பீலா விடறதெல்லாம் தெரியாது.

மதியம் ஒரு பீரியட் ப்ரீ . கீதா சொன்னா அந்த கேம் விளையாடறவங்க எல்லாம் நம்பிக்கையோட காயின்ல கை  வைக்கணும்னு. ஏதாவது ஆவி வந்தா அந்த காயினே நகருமாம். அப்புறம் நம்ம கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுமாம்.

நான், கீதா, சிந்து, பிரியா நாலு பேரும் விளையாடினோம். ஆனா, இன்னிக்கு ஆவி எதுவும் வரல. செம்ம ஜாலியா, த்ரில்லிங்கா இருந்துது. நாளைக்கும் ட்ரை பண்ணுவோம்.

– சித்ரா

——————-— —-

11/8/2000

டுடே இஸ் அவர் லக்கி டே. ஒரு ஆவி கிட்ட பேசிட்டோம். பிரேக்ல விளையாடினோம். காயின் லேசா நகர்ந்துச்சு. கீதா, ஏதாவது ஆவி வந்திருக்கியான்னு கேட்டா. உடனே காயின் மெல்ல நகர்ந்து Yes என்ற இடத்துக்கு போயிட்டு திரும்ப நடுவுல வந்துச்சு.

எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியமா போச்சு. பேய் பேரு விஜியாம். பொண்ணுவேற. இங்கிலிஷ், தமிழ் ரெண்டும் தெரியுமாம். நாங்க கேட்ட கேள்விக்கெல்லாம் அந்த காயின் நகர்ந்து நகர்ந்து பதில் சொல்லிச்சு. என்ன… ஒரு வார்த்தைல விடை சொல்றா மாதிரி கேள்வி கேட்கணும்.

அதுக்குள்ள அடுத்த பீரியட் வந்திடுச்சு. நாளைக்கு வரியா? ன்னு கேட்டோம் . சரின்னு சொல்லிட்டா விஜி.

– சித்ரா

——————-— —-

20/8/2000

நாங்க பெரிய தப்பு பண்ணிட்டோம். தினமும் பிரண்டு மாதிரி, ஒரு ஆவியோட கிட்ட தட்ட ஒரு வாரம் பேசிட்டோம்.  எனக்கு என்னவோ, எங்கள சுத்தியே விஜி இருக்கிறா மாதிரி இருக்கு.

இன்னிக்கு, “மேடம் வந்துட்டாங்க விஜி, நீ போ” ன்னு சொன்னதும் காயின் மெதுவா நகர்ந்து டெஸ்கோட சைட்ல, புவி ஈர்ப்பு திசைக்கு எதிரா, ஒரு எறும்பு மாதிரி, பல்லி மாதிரி, ஒரு உயிரில்லா காயின் ஊர்ந்து போச்சு. பயந்து போயிட்டோம்.

இதுலவேற லூசு மாதிரி ஒரு பேய்கிட்ட போயி ” எங்க நாலு பேருல யார உனக்கு ரொம்ப பிடிக்கும்?” ” நீ எப்படி செத்துப்போன? விபத்தா? தற்கொலையா?” இப்படி எல்லாம் வேற கேள்வி கேட்டிருக்கோம்.

இப்போவெல்லாம் ராத்திரி தூக்கமே வர மாட்டேங்குது. அம்மா, அப்பா நடுவுல குழந்தை மாதிரி படுத்துக்கறேன். சாமி படத்தை தலகாணிக்கு  அடியில வெச்சுக்கறேன். எத பார்த்தாலும் பயமா இருக்கு.

– சித்ரா

——————-— —-

30/8/2000

சிந்து ரெண்டு நாளா காலேஜ் வரல. அவ அம்மாகிட்ட பேசினோம்… அவங்க சிந்து ஏதோ பேய் பிடிச்சா மாதிரி நடந்துக்கறா, அம்மன் கோயிலுக்கு போய் மந்திரிச்சிட்டு வந்தோம்னு சொன்னாங்க.

எங்களுக்கெல்லாம் அல்லுகிளம்பிருச்சு. சிந்துவோட அம்மா வேற பயங்கர சண்டை போடுவாங்க. நாங்க தான் அதுக்கு காரணம்னு தெரிஞ்சா … வீட்டுக்கு வந்து சண்டை போட்டா… பயமா இருக்கு.

இன்னிக்கு இந்த விளையாட்டு பத்தி வீட்டுல சொல்லிடலாம்னு இருக்கேன்.

– சித்ரா

” டேய் ரவி! என்னடா படிச்சிட்டு இருக்க? வீட்டுக்கு இன்னிக்கு தான் வந்தோம்… எத்தனை வேலை இருக்கு… சோம்பேறி எழுந்து வாடா!,” என்று அதட்டினாள் ரவியின் அம்மா ஜெயா.

“அம்மா, சித்தி என்னிக்கு செத்து போனாங்க?” என்றான் ரவி.

” இப்ப எதுக்குடா அத கேக்குற?” என்ற ஜெயா… சற்றே யோசித்து…” இன்னிக்கு செப்டம்பர் ரெண்டுல்ல?  21 வருஷம் முன்னாடி சித்ரா இன்னிக்கு தாண்டா… ” என்று சொல்லி மின் விசிறியைப் பார்த்தாள் ஜெயா. அவள் முகமெல்லாம் வேர்த்து போயிற்று. கண்கள் கலங்கி போயிற்று.

“இத்தனை பூஜை செஞ்சு, வீட ரெனோவேட் பண்ணி, அப்பா காலத்துக்கு அப்புறம் இந்த வீட்டுக்கு வந்தா… ஏண்டா பழசெல்லாம் ஞாபகப்படுத்தற ரவி?”

” நான் என்ன செஞ்சேன்? இங்க ஷெல்ப்ல சித்தியோட  டைரி இருந்துச்சு, அத தான் படிச்சிட்டு இருந்தேன். ஆகஸ்ட் 30 க்கு மேல டைரி குறிப்பு இல்ல… அதான் உன்ன கேட்டேன். ”

“டைரியாவது? மண்ணாவது? அவ தற்கொலை பண்ணின அன்னிக்கே, அவ பிரண்ட்ஸும் அன்னிக்கு இறந்து போய்ட்டாங்கன்னு தெரிஞ்சவுடனே, சித்ராவோட திங்ஸ் எல்லாத்தையும், டைரி உட்பட அப்பா எரிச்சிட்டாரு. அப்படியிருக்க எங்கேயிருந்து வந்தது டைரி? கொடு பார்ப்போம் ,” என ரவியிடமிருந்து புத்தகத்தை பிடுங்கினாள் ஜெயா.

டைரியில் எழுத்துக்கள் மறைந்து, காலியாக இருந்தது… ஜெயாவும், ரவியும் வாயடைத்துப் போனார்கள்.

1 COMMENT

  1. எதிர்பார்க்காத முடிவு ! ஆவிகளை கேரக்டர்களாகக்
    கொண்டு புனையப்பட்ட வித்தியாசமான கதை !

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...

ஐக்கியம்! 

2
எழுதியவர்:   அன்னக்கிளி வேலு ஓவியம்: தமிழ் பகுதி - 2 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அம்மா போன் பண்ணியிருந்தாள். அவனுக்கு கல்யாணம் பண்ணவேண்டுமாம். ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு அவன் இளைத்தே போய்விட்டானாம். மதுரையிலிருந்து திருச்சிக்கு போன் பண்ணினால்...

பாசமழை

3
கொட்டும் மழையில் நடுங்கியபடி செல்லும் அந்த ஆம்புலன்ஸ் வண்டியில்  வடிந்து கொண்டிருக்கும் உயிரோடு போராடிக் கொண்டிருப்பவர் பரமசிவம். தீபாவளி மிகவும் மகிழ்ச்சியாகத்தான் கழிந்தது.பேரன் அருணோடு  பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தவர் தான்.  அடுத்த இரண்டு...

தேய்(ப்)பவர்கள்   

2
      “துணி வாங்கிட்டீங்களா…?” – சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான். பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்துவிடக் கூடாது. அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ் பண்ணிய...