0,00 INR

No products in the cart.

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்

 

“உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?”

“இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!”

-ஆர். மகாதேவன், திருநெல்வேலி

===================

“வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?”

“ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு பதிவாகிடுச்சாம்.”

-எஸ். மோகன், கோவில்பட்டி

===================

“வோட்டுப் போட்ட அடையாள மையை நெற்றியில் வைத்தால் நல்லது.”

“ஏன்?”

“ஆமாம், கொஞ்ச நாளைக்கு பொட்டு வைக்க வேண்டியதில்லை.”

-எஸ். மோகன், கோவில்பட்டி

===================

“அபராதம் 118 ரூபாயா…அதென்ன கணக்கு?”

“18 ரூபாய் ஜி.எஸ்.டி.”

-எஸ். மோகன், கோவில்பட்டி

===================

“பின், ஒடிபி நம்பர் இதை எல்லாம் யாரிடமும் சொல்ல மாட்டேன்.”

“சொல்ல வேண்டாம். ஒரு பேப்பரில் எழுதி கொடு.”

-எஸ். மோகன், கோவில்பட்டி

===================

“உங்க புத்தகம் இல்லாமல் எனக்கு தூக்கம் வராது.”

“அப்படியா?””

“ஆமாம். அதை தலைக்கு வச்சாத்தான் எனக்கு தூக்கமே வருது.”

-எஸ். மோகன், கோவில்பட்டி

===================

“கமலா டீச்சர் தன்னையே உரித்து மென்றார்.”

“என்னடா சொல்றே?”

“கமலா பழம் திங்கறாங்கடா.”

-ஆர். யோகமித்ரா

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

2
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

1
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

1
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...