0,00 INR

No products in the cart.

யானைகளை மனிதர்களிடமிருந்து காப்பதுதான் எனது நோக்கம்! 

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன்
ஓவியம்; தமிழ்

யானைகளின் ராணி என்றழைக்கப்படும் பார்பதி பருவா, உலகின் ஒரே யானைப் பாகி ஆக அறியப்படுகிறார். யானைப் பாகன்கள் நிறைந்த உலகில், ஒரே ஒரு யானைப் பாகி இவர்தான். வடகிழக்கு மாநிலங்கள், வங்காளம், ஒரிஸா, ஜார்க்கண்டு, பீகார் என்ற எந்த வட மாநிலத்திலும், மனிதர்கள் மற்றும் யானைகள் இடையேயான பிரச்சனை என்றால், பார்பதி பருவா உடனே, அரசாங்கத்தால் அழைக்கப்பட்டு, பிரச்னையை தீர்க்குமாறு வேண்டப்படுகிறார். சுடப்படவோ, அல்லது நஞ்சருந்தி கொல்லப்படவோ இருக்கும் யானைகளை இவர் காக்கிறார். அத்தகைய 400க்கும் மேற்பட்ட காட்டு யானைகளைப் பழக்கப்படுத்தியுள்ளார்.

அஸ்ஸாமின் கவுகாத்தியில் வசிக்கும் இவர், அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று, மனிதர்கள் வசிப்பிடத்தில் புகுந்த யானைகளைக் காக்க, தனது சக ஊழியர்கள் மற்றும் கும்கி யானைகளுடன், தனது மாநிலம் மட்டுமன்றி, மற்ற மாநிலங்களுக்கும் பயணித்து, யானைகளை மறுபடி காட்டுக்குள் விரட்டுவது, அடிபட்ட யானைகளின் உடல் நலத்தை மீட்பது, யானைகள் பிடித்து கட்டுப்படுத்தி பழக்கப்படுத்துவது, மேலும் யானைப் பாகர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற காரியங்களை செய்து யானைகளின் வாழ்வாதாரத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்.

மேலும், யானை மேலாண்மை கொள்கைகள், யானை பாதுகாப்பு சங்கம், ஆசிய யானை நிபுணர் குழு, யானை திட்டம் (Elephant project) போன்றவற்றிலும், தனது கணிசமான பங்கினை ஆற்றி வருகிறார்.

ஐந்து அடிக்கும் குறைவான சிறிய உருவமுள்ள பார்பதி பருவா, எப்படி இவ்வளவு பெரிய யானைகளை கண்ணசைவில் இயக்கும் யானைப் பாகியாக உயர்ந்தார் என்பதைப் பார்ப்போம். 

பார்பதி பருவா, அஸ்ஸாம் மாநிலத்தில், துப்ரி மாவட்டத்திலுள்ள, கௌரிபூர் சமஸ்தான ராஜவம்சத்தை சேர்ந்த பெண். அவர் 1954ம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை ப்ரக்ருதி சந்திர பருவா ராஜாவாக இருந்தபோது, அவரது யானை லாயத்தில், கிட்டத்தட்ட 40 யானைகள் இருந்தன. அவரது தந்தை தனது 4 மனைவிகள், 9 குழந்தைகள் (பார்பதி பருவா உட்பட), சமையல் காரர்கள், அரசாங்க ஊழியர்கள், குழந்தைகளின் பிரத்யேக ஆசிரியர்கள், நாவிதர், தையல்காரர், மருத்துவர், யானைகள் என கிட்டத்தட்ட 70 பேர் கொண்ட பெரும் பட்டாளத்தைக் கூட்டிக் கொண்டு, நீண்ட நாட்கள் காட்டில் தங்கி, வேட்டையில் ஈடுபடுவார். காட்டில் பல காலம் வாழ்ந்த பார்பதிக்கு சிறுவயது முதல் யானைகளுடன் நெருக்கமாக பழக வாய்ப்பு கிடைத்தது. பார்பதிக்கு யானைகளின் மீது ஆர்வமும், புரிதலும் ஏற்பட்டது.

யானைகளை வளர்ப்பதில் அவரது தந்தை மிகவும் ஆர்வம் காட்டினார். அவற்றிற்கு உணவளிப்பது, குளிப்பாட்டுவது, உடலை தேய்த்து விடுவது என்று ஒவ்வொரு சிறிய விஷயங்களிலும் ஈடுபாடு காட்டினார். எந்த தானியம், எவ்வளவு வெல்லம், பிற தானியங்கள் எந்த விகிதத்தில் கொடுக்க வேண்டுமென்று பார்த்துப் பார்த்து யானைகளை வளர்த்தார். 1970ம் ஆண்டு, அரசக் குடும்பங்களின் மானியம் நிறுத்தப்பட்ட போது, அது கௌரிபூர் ராஜ குடும்பத்தின் நிதி நிலைமைக்கு பெரும் பங்கம் விளைவித்தது. ஒரு நாளைக்கு ஒரு யானை கிட்டத்தட் 113 கிலோ உணவை உண்ணும். எனவே, அவற்றைக் கூட்டிக் கொண்டு, ராஜா காட்டிற்கு சென்றார்.

காட்டில் காட்டு யானைகளை பிடித்து, சோன்பூர் சந்தைகளில் விற்கத் தொடங்கினார். யானைகளைப் பிடித்து, பழக்கப்படுத்தும் திறமை ‘மேல் ஷிகார்’ என்ற வகையைச் சார்ந்தது. ஒரு கும்கி யானையின் மீது அமர்ந்து, ஒரு சுருக்கு கயிற்றை யானை மீது வீசி, மற்ற கும்கி யானைகளின் துணையுடன், அடங்காத காட்டு யானையை, பிடித்து, அதற்கு தொடர்ந்து மாதக் கணக்கில் பயிற்சி அளித்து, பழக்கப்படுத்துவது.

இதற்கு அசாத்திய பொறுமை, தைரியம் வேண்டும். இதற்கு மேலாக, மர வியாபாரத்தில் மரக்கட்டைகளைக் கையாள, யானைகளை அனுப்பி, பணம் ஈட்டினார். இங்குதான் பார்பதி தனது தந்தையிடமிருந்து, ‘மேல் ஷிகார்’ கலையைக் கற்றார். 1972ம் ஆண்டு, தனது 14வது வயதில், பார்பதி பருவா முதன் முதலில், ஒரு காட்டு யானையைப் பிடித்தார். அப்போது, அவரது தந்தை ‘சபாஷ் பேட்டி’ (அருமை பெண்ணே) என்று கூறியது, பார்பதிக்கு மிகவும் ஊக்கமாக இருந்தது.

1977ம் ஆண்டு, வனவிலங்கு சட்டப்படி, யானைகளை சந்தைகளில் விற்பது சட்டப்படி குற்றம் என்பது முடிவானது. 1979ம் ஆண்டு, வங்கி அதிகாரியைத் திருமணம் செய்த பார்பதிக்கு சாதாரண வாழ்க்கைப் பிடிக்காமல், காட்டிற்கு திரும்பி, யானைகளுடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட்டார். அப்போது, அவருக்கு வாழ்க்கையின் புதிய நோக்கம் உதித்தது. அதாவது, உலகில் மீத மிருக்கும் 9000 யானைகளை மனிதர்களிடமிருந்து காப்பதுதான் அது. 

ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான யானைகள் தந்தக் கடத்தல் காரர்கள், விவசாயிகள் போன்றவர்களால் கொல்லப்படுகின்றன. மனிதர்களிடமிருந்து யானைகளைக் காப்பதை தனது வாழ்வின் நோக்கமாக கொண்டார். “ஒரு மனிதன் இறந்தால், லட்சக்கணக்கில் உருவாகுவார்கள். ஒரு யானை இறந்தால், அந்த இனம் அழிவை நோக்கி செல்கிறது என்று அர்த்தம்,” என்கிறார்.

மனிதர்கள் யானைகளின் வழிப்பாதைகளை, தேயிலைத் தோட்டம், விவசாயம், கிராமம் என்று ஆக்கிரமிப்பதால், யானைகள் காலம் காலமாக சென்ற பாதைகள் மறைகின்றன. யானைகள் செல்வதற்கு வழியின்றி, ஊருக்குள் புகுகின்றன. வயல்வெளிகளை சேதப்படுத்துகின்றன. இவ்வாறு ஊருக்குள் புகும் காட்டுயானைகளினால் வீடு, பயிர் மேலும் உயிர் சேதமும் ஏற்படுகிறது. இது மனிதர்கள் மற்றும் யானைகளுக்கிடையே மோதலை ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் மனிதர்கள் யானைகளை கொல்ல நினைக்கின்றனர். இங்குதான் பார்பதி யானைகளுக்கு உதவுகிறார். எங்கெல்லாம், யானைகள் தேயிலைத் தோட்டத்தில் நுழை கின்றனவோ, விவசாய நிலங்கள் சேதமாகின்றவோ, அங்கெல்லாம் பார்பதி அழைக்கப்பட்டு, மறுபடி யானைகளை காட்டிற்கு விரட்டுமாறு வேண்டப்படுகிறார். இதன் மூலம், யானைகள் கொல்லப்படுவது தவிர்க்கப்படுகிறது.

ஓவியம்; தமிழ்

அவர் இதற்காக, பல்வேறு மாநிலங்கள் கூட கடக்க நேர்கிறது. சிறுத்தைகள் போன்றவற்றை கூட, தனது கும்கி யானைகளைக் கொண்டு விரட்டுகிறார். பார்பதி காட்டில் வசிக்கிறார். சாம்பலால் பல் தேய்த்து, கூடாரத்தில் வசித்து, கட்டாந்தரையில் படுத்து, தனது கும்கி யானைகளுடன் வாழ்ந்து வருகிறார். யானைகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார். சாதாரணமாக, ஒரு யானைப் பாகனுக்கு உட்காரு, படுத்துக்கொள், புரளு போன்ற 30 யானை உடற்கூறு மொழிகள் தெரியும். பார்பதி 43க்கும் மேற்பட்ட உடற்கூறு மொழிகளை அறிந்துவைத்துள்ளார். உதாரணமாக, ஒரு தபாலினை, அடுத்த காட்டிலுள்ள அலுவலகத்தில் சென்று பைசல் செய்வது போன்ற கடினமாக செய்திகளைக் கூட, பார்பதியால் ஒரு யானைக்கு அளிக்க முடியும். “ஒரு பெரிய பேனா கொடுத்தால், என்னால் யானையை எழுத வைக்கமுடியும்,” என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

“யானைகளைப் பிடிப்பது என்பது ஆபத்தானது. ஒவ்வொரு முறை காட்டிற்கு பயணிக்கும் போது, அது தனது கடைசி பயணமாக இருக்கலாம்,” என்று எண்ணியே செல்வதாக சொல்கிறார். பார்பதியின் யானைகளைப் பழக்கப்படுத்தும் திறன் கண்டு, பிபிசியில் மார்க் ஷாண்ட் ‘யானைகளின் ராணி’ என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளார். அதே பெயரில் ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். இவர் இளவரசர் சார்லஸின் மனைவி கமீலாவின் சகோதரர்.

வனவிலங்குகளை காத்தமைக்காக, கொல்கத்தா வனம் மற்றும் சுற்றுசூழல் உலக நிறுவனம் இவருக்கு வாழ்க்கை சாதனையாளர் விருது வழங்கியுள்ளது. மை ஹாப் ஆப் த ஸ்கை (My Half of the Sky) என்ற பெண் சாதனையாளர்கள் புத்தகத்தில், இவரைப் பற்றி இந்திராணி ரைமேதி (Indrani Raimedhi) விரிவாக எழுதியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, காசிரங்கா சரணாலயத்தில், ஒரு யானை கொல்லப்படுவதை தவிர்க்க, பார்பதி தனது சுருக்கு கயிறால் அதனைப் பிடித்து, அதனைப் பழக்கப்படுத்தி, அதன் வாழ்க்கையை காத்தார். மேலும், அஸ்ஸாமில் அரசியிலில் இறங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக, யானைகளை காப்பதை தனது பணியாக கொண்டு இயங்கும், பார்பதி பருவா பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துவோம்.

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்
வெங்கடராமன் ராமசுப்ரமணியன் மென்பொருள் துறையில் மூத்த கட்டமைப்பு நிபுணராக வேலை செய்து வருகிறார். மின்னணுவியல் பொறியியலில் இளங்கலையும், வணிக மேலாண்மையில் முதுகலையும் மற்றும் மனித மேம்பாட்டிற்கான யோகாவில் முதுகலையும் பயின்றவர். தனிமனித நிதி ஆர்வலர். கதைகள், தனிமனித நிதியில் கட்டுரைகள், எழுதியுள்ளார். தமிழார்வம் காரணமாக நிரல் மொழியில் டுவிட்டரில் திருக்குறளை பதிவிட்டுள்ளார்(https://twitter.com/thirukuralfull). பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளார். உலகளாவிய தமிழ் கோராவில் தொடர் பங்களிப்பு காரணமாக சான்றாண்மை விருது பெற்ற நான்காவது நபர் இவர்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...

வீட்டுப் பணி – அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?

Ten Tips For Successful Work-Life Balance -உஷா ராம்கி அந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து...

ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி – மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!

 -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள். அது ஒரு காலம். இப்போது அங்கு கூட யாரும் காத்திருப்பது இல்லை. ஆனால்...

இனிதே நடந்தேறிய விக்கி- நயன் திருமணம்!

-ஜெனிபர் டேனியல் ***************************************************************** காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்! சுமார் ஏழு ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடிக்கு 09.06.2022 அன்று மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. துள்ளலில் விக்கி! திருமண தினத்தன்று...