0,00 INR

No products in the cart.

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன்

ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள் ப்ளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் என்ற சிறப்பான நாளாக முன்னெடுக்கிறது. உலக நன்மைக்காக நாம் அனைவரும்  இதில் கலந்துக் கொண்டு நடைமுறைப்படுத்துவது இன்றியமையாதது.
குறிப்பாக பெண்கள் இந்த சவாலை ஏற்கிறீர்களா?

நாம் அன்றாடம் காலை எழுந்ததும் துலக்கும் பல் துலப்பான்கள் முதல் இரவு படுத்துறங்தும் பாய்கள் வரை ப்ளாஸ்டிக் நம் வாழ்வியலோடு கலந்து விட்டது எனில் அது சற்றுமே மிகையில்லை. இன்னும் சொல்லவேண்டுமானால் ப்ளாஸ்டிக் நம் அனைவருடைய ரத்தத்திலேயே கலந்து இருக்கிறது என பயமுறுத்துகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பொதுவாக  நெகிழி  பொருட்கள் செய்ய பயன்படும் வேதியல் மூலக்கூறுகள் உடலுக்கும், ஏன் உலகிற்குமே தீங்கு விளைவிக்கக்கூடியவை தான். அதிலும் குறிப்பாக Use and Throw என சொல்லப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத் தகுதியுள்ள நெகிழி பயன்பாட்டு பொருட்கள் கொடூரமான பல்வேறு தீங்குகளை விளைவிக்கக்கூடியவை.

நாம் தினமும் பயன்படுத்தும் கேரிபேகுகள் நமது சுற்றுச்சூழலுக்கு சற்றுமே உகந்தவை அல்ல. நாம் பயன்படுத்திய பின் தூக்கி எறியும் இந்த வகை நெகிழிப் பைகள் கழிவுநீர் கால்வாய்களை அடைத்துக்கொண்டு அவை வெளியேறாமல் தடுத்து சுகாதார சீர்கேட்டை அளிக்கின்றன. தற்போது நம்மால் எறியப்படும்  நெகிழிக் குப்பைகள் கடலில் கலந்து  கடல்நீரையே மாசுப்படுத்தி வருகின்றன எனில் அது சற்றுமே மிகையில்லை.

நம்மால் தூக்கி எறியப்படும் disposable  நெகிழிக் கப்புகள், குடிநீர் பாட்டில்கள் போன்றவை எவ்வளவு வருடங்களானாலும் மக்கிப்போகாத வகையைச் சேர்ந்தவை. அவை சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி சுகாதார சீர்கேட்டை நமக்கு வழங்கி வருகின்றன.

பெயரென்னவோ  நெகிழி,  ஆனால் அது மண்ணில் மக்காமல் அதன் நெகிழும் தன்மையைக் களவாடிக் கொள்கின்றன. மண்ணை மலடாக்கும் வேலையை சத்தமின்றி செய்துவருகின்றன. நெகிழிப் பொருட்களால் மண்வளம் பாதிக்கப்பட்டு விவசாயமும் பெருமளவில் பாதிக்கும் அபாயங்களுமுண்டு. மனிதர்களை போலவே நிலமும் மூச்சுத்திணறல் கொள்கிறது மக்காத நெகிழிப் பொருட்களால். மழைவளம் சிறந்தாலும், மண்ணில் நீர் உறிஞ்சும் தன்மை வெகுவாக பாதிக்கப்படுகிறது. நெகிழிகள் நிலத்தடி நீரையும் வற்றச்செய்பவை.

நெகிழிப் பொருட்கள் மண்ணில் தான் மக்கவில்லையே எரித்து விடலாம் என நினைப்பது அதனினும் முட்டாள் தனமே. நெகிழிப் பொருட்கள் எரியும் போது வெளியேறும் வேதியியல் பொருட்களும், வாயுக்களும் காற்றை மாசுப்படுத்துவதில் முதலிடத்தை பெறுபவை.  மூச்சுத் திணறல், நுரையீரல் அழற்சி என பல்வேறு சுவாசக்கோளாறுகளை உண்டாக்கவல்லது இந்த நெகிழிக் குப்பைகள்.

நாம் பயன்படுத்தி தெருவோரங்களில் எரியும் நெகிழிக் குப்பைகளை ஆடு, மாடு, கோழி போன்ற அப்பாவி உயிரினங்கள் தெரியாமல் விழுங்கி பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாவதோடு உயிரிழக்கவும் நேரிடுகிறது.

நாம் நாட்டைத் தான்  விட்டுவைக்கவில்லை என்றால் காடு, மலை, நீர்நிலைகள் என இயற்கையின் எதனையும் விட்டுவைப்பதில்லை. அங்கே சுற்றித் திரியும் மனிதர்கள் வீசியெறிந்த நெகிழிக் குப்பைகள் காட்டு விலங்குகளையும் பதம்பார்க்கத் தவறுவதில்லை. எத்தனையோ காட்டு விலங்குகள் அந்த நெகிழிக் குப்பைகளை உண்டு பல்வேறு உடல் உபாதைகளோடு போராடி உயிரையும் இழந்து வருகின்றன. இந்த வாயில்லா ஜீவன்கள் பல பல்வேறு வயிற்று உபாதைகளில் துடிப்பதை பலரும் அறிய வழியில்லை.

ஒவ்வொரு நாளும் கடலில் சேரும் நெகிழிக் குப்பைகளால் பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன.

ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் டன் நெகிழிக் கழிவுகள் உலகை மாசுப்படுத்தி வருகின்றன. ஒரு நெகிழி பை அழிய 15 முதல் 1000 ஆண்டுகள் ஆகும் என தரவுகள் சொல்கின்றன.  நெகிழிப் பொருளில் நல்லது கெட்டது என்பதே கிடையாது. மிக மோசமானவை, மிகமிக மோசமானவை என்பதே வழக்கில் உண்டு.  நெகிழிகள் புதைத்தாலும், எரித்தாலும், உடைத்தாலும், தனது நச்சுகளை வெளியேற்றி க்கொண்டே தான் இருக்கும்..

உணவுப் பொருட்களில் நெகிழிப் பயன்பாடு என்பது இன்னமும் கொடூரமானது. சூடான பொருட்களை நெகிழி பைகளிலோ, டப்பாக்களிலோ வாங்கி பயன்படுத்துவது புற்று நோயை உண்டாக்கும். நாம் தொடர்ந்து பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் புற்று நோயை உருவாக்கவல்லவை.

நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்துவரும் இல்லத்தரசி ப்ரியா தனது அனுபவங்களை இங்கே நம்மோடு  பகிர்கிறார்….

நான் வீட்டில் பலவருடங்களாக நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து  வருகிறேன். வீட்டில் கண்ணாடி பாட்டில்களையும், மண்பாண்டங்களையும் மரக்கரண்டிகளையும் உபயோகத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன். வெளியில் கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளை கையோடு கொண்டு போகிறேன். அதே போன்று வீட்டிற்கு வாங்கும் சூடான உணவுகளை வாழையிலையிலோ, மந்தார இலையிலோ கட்டித் தரச் சொல்கிறேன். சூடான குழம்புகளை ஊற்றித் தர டிபன் பாக்ஸ்களை கையோடு  கொண்டு செல்கிறேன். விழா நிகழ்வுகளில் பனையோலை தட்டுகளையும், பேப்பர் கப்புகளையும் மட்டுமே பயன்படுத்திவருகிறேன். ப்ளாஸ்டிக்கால் ஆன பொருட்களை முற்றிலுமாக தவிர்த்து வருகிறேன். வீட்டில் இரண்டு குப்பைத்தொட்டிகளை வைத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்துப் போட்டு வருகிறேன்,” என்கிறார் ப்ரியா.

எந்த ஒரு நல்ல விஷயத்தையும் முன்னெடுப்பதில் பெண்களே முதலிடம் பெறுவார்கள். நெகிழிப் பொருட்கள் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்த்து குடும்ப நலனோடு சமூகம் மற்றும் உலக நலனையும் காக்க பெண்கள் முன்வர வேண்டும்.

ப்ளாஸ்டிக்கை தவிர்ப்போம்! சுற்றுச்சூழல் காப்போம்!
உலகைக் காப்போம்!

1 COMMENT

  1. நெகிழியை தவிர்ப்போம் என்று பல வருடங்களாக எத்தனையோ பேர் பலமாக கத்தி கூச்சல் செய்தும் எவர் காதிலும் விழவில்லை.
    நெகிழி தயாரிப்பை நிறுத்துவது மட்டுமே ONLY solution.
    KRS. சம்பத்

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

2
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

1
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

1
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...