0,00 INR

No products in the cart.

இந்திய அணியின் அபார சாதனை!

தாமஸ் கோப்பை – 2022
-மஞ்சுளா சுவாமிநாதன்

மே 15, 2022, இந்திய பேட்மின்டன் விளையாட்டு வீரர்களுக்கும், இந்தியர்களுக்கும் மறக்க முடியாத நாள். காரணம், அன்றுதான் உலக பிரசித்தி பெற்ற தாமஸ் கோப்பையை  முதன் முதலில் இந்திய ஆடவர் பேட்மின்டன் அணி வென்றது.

இது என்ன அவ்வளவு பெரிய சாதனையா?

தாமஸ் கோப்பைக்கு 70 வருட சரித்திரம் உள்ளது. எப்படி கிரிக்கெட்க்கும், கால் பந்திற்க்கும் ஒரு உலகக் கோப்பையோ, டென்னிஸ்ஸுக்கு ஒரு டேவிஸ் கோப்பையோ, அதுபோல பேட்மின்டனுக்கு தாமஸ் கோப்பை என்றால் மிகையாகாது. இந்திய வீரர்கள் பேட்மின்டன்  விளையாட்டில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் மற்றும்  காமன் வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் ஜெயித்திருந்தாலும், ஒரு அணியாக தாமஸ் கோப்பையை வென்றிருப்பது இதுவே முதல் முறை.

தாமஸ் கோப்பை, சர்வதேச பேட்மின்டன் ஃபெடரேடன் இன் நிறுவனர் சார் ஜார்ஜ் தாமஸ் நினைவாக, 1948- 49 இலிருந்து விளையாடப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இப்போட்டியானது ஆண்களுக்கான பிரத்யேக பேட்மின்டன் போட்டியாக துவங்கப்பட்டது.

1984 ஆம் ஆண்டிலிருந்து பெண்களுக்காக தனியாக நடத்தப்படும் உபேர் கோப்பை போட்டிகளும், தாமஸ் கோப்பை போட்டிகளும் சேர்ந்து ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகள் ‘தாமஸ் மற்றும் உபேர் கோப்பை போட்டிகள்’ என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன.

தாமஸ் கோப்பை போட்டிகளில்  இந்தோனேசியாவும், சீனாவும் பல ஆண்டுகளாக சர்வாதிகாரம் செய்துவந்தனர். இந்தோனேசியா 14 முறையும், சீனா 10 முறையும் இந்த கோப்பையை வென்றுள்ளனர். இந்த நிலையில், இந்திய ஆண்கள் கூட்டணி, நடப்பு சாம்பியன்ஸான இந்தோனேசியாவை, 3 – 0 என்ற கணக்கில் வென்று, செய்த சாதனை பெரிய விஷயம் தானே!

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை 2022

மே மாதம் எட்டாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை  பேங்காக் நகரம், தாய்லாந்தில் நடந்த இந்தப் போட்டிகளில் இந்தியாவிலிருந்து பேட்மின்டன் வீரர்களும், வீராங்கனைகளும் லக்ஷயா சென் மற்றும் பி.வி. சிந்து தலைமையில் தாமஸ் மற்றும் உபேர் போட்டிகளில் கலந்துக்கொள்ள சென்றனர். உபேர் கோப்பை போட்டிகளில் பெண்கள் அணி கால் இறுதியில் தோற்க, ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டிகளில் இந்தியர்களின் கவனம் திரும்பியது.

ஆண்கள் அணி: லக்ஷயா சென், கிடம்பி ஶ்ரீகாந்த், HS பிரனாய், பிரியன்ஷு ரஜாவத். இரட்டையர் பிரிவில்: சத்விக் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி , M.R .அர்ஜுன், துருவ் கபிலா , கிருஷ்ண பிரசாத் கர்கா,  விஷ்ணுவர்தன் கவுட் பஞ்சலா, என பத்து வீரர்கள் இந்தியா சார்பாக பங்கேற்றனர்.

மொத்தம் பதினாறு தேசங்கள் (அணிகள்) பங்கேற்ற இந்த 32வது தாமஸ் கோப்பை போட்டியில், இந்திய அணி தொடக்கத்திலிருந்தே நல்ல பார்மில் இருந்தனர். ஒவ்வொரு அணியுடனும் 3 ஒற்றையர் ஆட்டங்கள், 2 இரட்டையர் ஆட்டங்கள் என மொத்தம் 5 ஆட்டங்கள் விளையாடவேண்டும். பலம் மிக்க அணிகளான மலேசியா மற்றும் டென்மார்க்குடன் கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிகளில் 3 – 2 என்ற விகிதத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, நடப்பு சாம்பியன்ஸான இந்தோனேசியாவுடன் 3 – 0 என்ற விகிதத்தில் இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்றதன் மூலம், உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டனர். அதுவும் இறுதிச் சுற்றின் கடைசி ஆட்டத்தில்  இந்தியாவின் கிடம்பி ஶ்ரீகாந்த் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை நேர் செட்டுகளில் (21 – 15, 23 – 21) வென்ற தருணம், இந்தியாவின் எழுபது ஆண்டு கால தாமஸ் கோப்பைக்கான ஏக்கத்தை மட்டும் தீர்கவில்லை, உலக அரங்கில் இந்தியா வளர்ந்து வருகிறது என்ற செய்தியையும் நிலைநாட்டியுள்ளனர் இந்த இளம் வீரர்கள்.

பிரதம மந்திரியின் வாழ்த்துகள்! 

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவரது டுவிட்டர் பக்கத்தில் “இந்திய பேட்மின்டன் அணியானது வரலாறு படைத்துள்ளது! நாடு முழுவதும் அவர்களது தாமஸ் கோப்பை வெற்றியால் பெருமிதம் கொண்டுள்ளோம். இந்த திறமையான அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இதுபோல நீங்கள் மென்மேலும் வெற்றிகள் பல பெற வேண்டுகிறேன். இந்த வெற்றியானது நம் நாட்டைச் சேர்ந்த பல இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்.” என்று பதிவிட்டிருந்த்தார். அதோடு நிற்காமல், இந்திய வீரர்களிடம் உடனுக்குடன் தொலைபேசியில் கலந்துரையாடி அவரது வாழ்த்துகளை தெரிவித்து, தனது இல்லத்தில் அவர்களுக்கென சிறப்பு விருந்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

தாமஸ் கோப்பை வெற்றி இந்தியர்களுக்கு ஓர் “ஸ்வீட் எடு கொண்டாடு” தருணம்!

1 COMMENT

  1. தாமஸ் கோப்பை-2022 பேட்மின்டன் போட்டியில் இந்திய ஆண்கள் அணி முதன் முதலாக வெற்றி பெற்றது சரித்திர சாதனை! வெற்றியின் மகத்துவத்தை கட்டுரை மூலம் முதன் முதலாக படித்து தெரிந்து கொண்டேன். நன்றி கலந்த பாராட்டுக்கள்.
    எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன்,
    லால்குடி.

மஞ்சுளா சுவாமிநாதன்http://www.joyousassortment.com
மஞ்சுளா சுவாமிநாதன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். பெரும்பாலும் ஆங்கில பத்திரிகைகளில் எழுதிய இவர், இப்பொழுது தமிழிலும் சமூகம் சார்ந்த கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். சரித்திரத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

டைரி!

1
கதை: தேன்சிட்டு ஓவியம்: தமிழ்   6/8/2000 இன்னிக்கு காலேஜ்ல ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துச்சு. கீதா, அவளோட பிரண்ட்ஸோட பேய் கிட்ட பேசினேன்னு சொன்னா . "பேயா? ரொம்ப ரீல் விடாதேன்னு," அவளை ஓட்டினேன். ஆனா,  முகத்த சீரியஸா...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

கவிதைத் தூறல்!

-எஸ்.பவானி, திருச்சி   உன்னதம் பாலின் உன்னதம் அருந்தும் கன்றுக்கு மட்டுமே தெரியும் கறக்கும் வியாபாரிக்கு தெரியாது! __________________________________ அர்த்தம்  வாடி என்று கணவர் செல்லமாய் அழைத்தால் கனிவு! உரத்துச் சொன்னால் கட்டளை! ஒரே சொல்லின் உச்சரிப்பு தருகிறது மாறுபட்ட அர்த்தம். __________________________________ குறட்டை அவர் அதை செலவழிக்கவில்லை பிறருக்கு கொடுக்கவும் மனமில்லை நாய் உருட்டும் தேங்காய் என பணம் பாதாளத்தில் குறட்டை விடுகிறது. __________________________________ அழுகையும் சிரிப்பும் உயிரிழந்த...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...