0,00 INR

No products in the cart.

அருணை ஜோதியும் அருணாசல கிரிவலமும்!

சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஜெயந்தி – 23.01.22
– ரேவதி பாலு

த்குரு என்பவர் மானிடப் பிறவி எடுத்த போதிலும் தன்னுடைய உத்தமமான வாழ்க்கை முறையாலும் செயல்களாலும் தெய்வீகத்தன்மை அடையப் பெற்றவர். மனித உருவத்திற்குள் இருக்கும் களங்கங்களையெல்லாம் உதறித் தள்ளி தெய்வத்துடன் ஒன்றாகும் நிலைக்காகவே எப்போதும் ஏங்கி, தான் பிறப்பெடுத்ததைப் பற்றிய விழிப்புணர்வுடன் வாழ்பவர். ஐம்புலன்களையும் கட்டுக்குள் வைத்து தன் உடலை தெய்வீக நிலை அடையும் ஒரு கருவியாகப் பயன்படுத்துபவர். தன் உடலைக் கோவிலாகக் கருதி அதில் தன் ஆத்மாவை குடியிருக்கும் தெய்வமாக மாற்றியவர். ஆத்மஞானம் கிடைக்கப் பெற்றவரும் தன்னை உணர்ந்து கொண்டவருமான  குரு, தனக்குக் கிடைத்த அத்தனை சக்திகளையும் மனித குலத்தின் மேம்பாட்டிற்காகவே பயன்படுத்துவார். அத்தகைய சத்குருக்களில் முக்கியமானவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து சித்தியடைந்த அருணை ஜோதி ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்.

பூமியின் இதயமாக விளங்கி வரும் திருவண்ணாமலை திருத்தலத்தில் இந்த மலையே சிவனின் அருவ ஸ்வரூபம் என்று கூறப்படுகிறது. இந்த மலையை தரிசிப்பதும், கிரிவலம் செய்வதும் மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. இதில் ஸ்ரீ ரமண மகரிஷியும், ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளும் சமகாலத்தில் திருவண்ணாமலையில் வசித்து அருள் பாலித்தவர்கள். ரமண மகரிஷிகளை அவர் பாதாளலிங்கக் கோவிலில் தவம் இருந்தபோது உலகிற்கு அடையாளம் காட்டியவரும் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்தான்.

ஒரு பித்தனைப் போல திருவண்ணாமலையில் சுற்றித் திரிந்த ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளை வணங்கியவர்களுக்கும், தொழுதவர்களுக்கும் அவரின் பார்வையே பல வியாதிகளை, பாதிப்புகளை அவர்களிடமிருந்து விரட்டியது. வறுமையில் உழன்றவர்களை செல்வ செழிப்பில் திளைக்க வைத்தார். தங்கக்கை சுவாமிகள் என்று பெயர் பெற்ற அவர் எந்த கடைக்குள் நுழைந்தாலும் அங்கே வியாபாரம் செழித்தோங்கியது. அவர் கை பட்ட இடமெல்லாம் செல்வ வளம் தழைத்தது.

திருவண்ணாமலையில் வாழ்ந்த அவரே கிரிவலத்தின் சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர். அவர் தன்னிடம் தரிசனத்திற்காக வந்த எல்லோரையும் கிரிவலம் செய்யத் தூண்டினார். கிரிவலம் செய்பவர்கள் இந்த மலையையே பார்வதி பரமேஸ்வர ஸ்வரூபமாகக் கருதி மிகுந்த பக்தி சிரத்தையுடன் வலம் வருவார்கள். நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகிய திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய வேண்டும் என்று சொன்னாலே போதுமாம்; பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விடுமாம். கிரிவலம் வருபவர்களின் காலடி தூசு ஒருவர் மேல் பட்டாலே போதுமாம் அவரைப் பிடித்த அத்தனை தோஷங்களும் நீங்கி விடும் என்று அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரிவலத்தில் ஓரடி எடுத்து வைத்தால் யாகம் செய்த பலன் கிடைக்குமாம். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜயோகம் தரக்கூடிய யாகம் செய்த பலன் கிடைக்குமாம். மூன்றடி எடுத்து வைத்தால் தானம் செய்த பலன் கிடைக்குமாம். நான்காவது அடி எடுத்து வைத்தால் அஷ்டாங்க யோகப் பலன்கள் கிடைக்குமாம். உலகின் உன்னதமான மலையாகிய இதை சுற்றி வந்தால் பிறவிப் பிணிகள் அனைத்தும் தீரும் என்று சேஷாத்ரி சுவாமிகள் மக்களுக்கு அறிவுறுத்தினார். இவர் காலத்திலேயே திருவண்ணாமலை கிரிவலம் செய்யும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. கிரிவலம் வருவதென்பது பல சூட்சுமமான நன்மைகளை நமக்கு அளிக்கும் என்றார் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். அது மட்டுமல்ல. கிரிவலப்பாதையில் அருவமாக மலையை வலம் வரும் ஏராளமான சித்தர் பெருமக்கள் நல்லாசிகளும் நமக்குக் கிடைக்கும் என்றார். “அருணாசல சிவ, அருணாசல சிவ, அருணாசல சிவ, அருணசிவோம்” என்று பயபக்தியுடன் சிவநாமத்தை உச்சரித்தபடி, பார்வதி பரமேஸ்வர ஸ்வரூபமாகவே விளங்கும் மலையை தரிசித்தபடி பக்தர்கள் கிரிவலம் செய்கிறார்கள்.

சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்  சுவாமிகளின் ஜெயந்தி 23.01.22 (ஹஸ்த நட்சத்திரம்) அன்று வருகிறது. சுவாமிகள் பிறந்த ஊரான வழூரில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி தினமான 23.01.22 அன்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் மணிமண்டபம் திறந்து வைக்கப்பபடுகிறது.

 

1 COMMENT

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை காப்பாற்றிய ஓர் மன்னிப்பு!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் அரசனின் ஓர் மன்னிப்பு அவனது சாம்ராஜ்யத்தையே காப்பாற்றியது. அவனது சாம்ராஜ்யம் மட்டுமன்றி, இந்தியாவின் வரலாற்றிலேயே, அந்த மன்னனின் மன்னிப்பு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொன்னால், அது மிகையாகாது. என்ன பீடிகை போடுகிறீர்கள்....

  சிஸேரியனுக்கு ஒரு செக்!

-ஜி.எஸ்.எஸ். ஒரு அறுவை சிகிச்சையைத் தடுக்க முடியும் என்றால் அதைத் தவிர்ப்பதுதானே இயல்பு, புத்திசாலித்தனம்.   ஆனால் இதற்கு விதிவிலக்காக இருக்கிறது சிசேரியன் அறுவை சிகிச்சை. 'டாக்டர், என் பெண் பிரசவ வலியை தாங்க மாட்டா. ...

ஒரு தீர்ப்பும் இரண்டு கருத்துக்களும்

0
 பார்வை - ரமணன்   அண்மையில் உச்ச நீதிமன்றம்  ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும்  பேரறிவளானை விடுதலை செய்திருக்கிறது. இதில் சிலர் மகிழ்ச்சியடைகிறார்கள், சிலர்  வெறுப்படைகிறார்கள். மகிழ்ச்சியடைகிறவர்கள் “தாமதமாகவேனும் நீதி வென்றது”  என்ற கருத்தையும், வெறுப்புற்றவர்கள்  “முன்னாள் பிரதமரை...

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

-ஜி.எஸ்.எஸ். டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம்,...

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான...