ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on

ஓவியம் : பிள்ளை

"கடைக்காரரே, பத்து ரூபாய்க்கு தக்காளியும் முருங்கைக்காயும் கொடுங்க!"
"இந்தாங்கம்மா… கால் தக்காளியும், ஒரு துண்டு முருங்கைக்காயும்!"
– ஆர்.மகாதேவன், திருநெல்வேலி
……………………………………………………………………………

"என்ன சார்… சிலிண்டரோட என்னைப் பார்க்க வந்திருக்கீங்க… என்ன பிராப்ளம்?"
"கேஸ் பிராப்ளம் வந்தா உங்களைப் பார்க்க வரச் சொன்னீங்களே டாக்டர்…?"
– ஆர்.மகாதேவன், திருநெல்வேலி
……………………………………………………………………………

"மன்னா… அண்டை நாட்டிலிருந்து புறா ஓலை கொண்டு வந்திருக்கு!"
"அது இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கிட்டிருக்கான்னு பாரும் தளபதியாரே?"
– ஆர்.மகாதேவன், திருநெல்வேலி
……………………………………………………………………………

"இவர் போலி டாக்டர்ன்னு எப்படிச் சொல்ற?"
"பின்ன… ஆபரேஷனுக்கு பூஜை செய்ய பழம், தேங்காய் வாங்கிட்டு வரச் சொல்றாரே!"
– வெ.விஜயகுமாரி, திண்டுக்கல்
……………………………………………………………………………

"எதுக்குடா லைட்டை ஆப் பண்ணச் சொல்லுற?"
"அப்பா, 'நான் கூட லைட் இல்லாமல் படிச்சுதான் பெரிய ஆளான்னேன்னு' சொன்னாரு. அதான் மம்மி!"
– வெ.விஜயகுமாரி, திண்டுக்கல்
……………………………………………………………………………

"இந்த டாக்டருக்கு இதுக்கு முன்னாடி ரியல் எஸ்டேட் தொழில்னு எப்படிக் கண்டுபிடிச்ச?"
"அதான் மாவுக்கட்டுக்கு சதுர அடி கணக்கில் பில் போடுறாருலா!"
– வெ.விஜயகுமாரி, திண்டுக்கல்
……………………………………………………………………………

"எந்தத் தகுதிய வச்சு, நைட் வாட்ச்மேன் வேலை கேக்குற?"
"நான் கண்ணைத் திறந்துக்கிட்டே நல்லா தூங்குவேன்!"
– நிலா, திருச்சி
……………………………………………………………………………

"இந்த அலுவலகத்தில் இவர்தான் ரொம்ப ரொம்ப சுறுசுறுப்பானவர்!"
"எப்படி…?"
"வருகை பதிவேட்டில் கையெழுத்துப் போட்டதும், உடனே தூங்கிடுவாரு!"
– ஜி.பாபு, திருச்சி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com