0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்!

பெண்கள், பல துறைகளில் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள் என்று பெருமையுடன் பேசிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், குடும்பத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பெண்களின் நிலைமை என்னவென்று சொல்வது?
-வத்சலா சதாசிவன், சென்னை

‘அதிசயப் பிறவிகள்’ என்றுதான் சொல்லணும் வத்சலா மேடம்! ‘கவிக்குயி’லாக இருக்கின்ற ‘அவர்கள்’, ’16 வயதினிலே’ கூட ‘மூன்று முடிச்சு’ போட்டதும், ‘ஆடு புலி ஆட்டத்து’க்குத் தயாராகிவிடுகிறார்கள். புகுந்த வீட்டுல யார் என்ன ‘தில்லு முல்லு’ செய்தாலும் ‘நெற்றிக்கண் திறக்காமல், ‘தளபதி’யாக உறுதியாக நிற்கிறார்கள். தாலி கட்டிய கணவன் “முள்ளோ மலரோ’, “குசேலனோ’, “மன்னனாக’ நினைத்துக் காப்பாற்றுகிறார்கள். ‘உழைப்பாளி’யாக ‘ஆறிலிருந்து அறுபது’வரை பிள்ளைகளுக்காகவே வாழ்கிறார்கள். ‘நினைத்தாலே இனிக்கும் அந்த ‘அபூர்வராக’ப் பெண்களை, ‘கபாலி’யும், ‘ஸ்ரீராகவேந்திரரும்’ ‘முத்து’ போல பிரகாசிக்க வைக்கட்டும்.

(“ரத்தத்துல நாடி நரம்புல, ரஜினியிஸம் ஓடுற ஒருத்தராலதான் இப்படியெல்லாம் பதில் எழுத முடியும்! அனுஷ்ஷா….!” – எடிட்டர் “நற நற”!)

…………………………………..

விஜய் டீ.வி.யின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடும் குழந்தைகளின் அசத்தல்களுக்கு அனு மேடத்தின் மார்க் என்னவோ?
-நா. சரவணன், செம்பனார்கோவில்

மார்க்காவது… ஒண்ணாவது… ஆளுக்கொரு தங்கக் கோப்பையைக் கொடுத்துட்டுக் கிளம்ப வேண்டியதுதான்! அதிலும் இந்த சீஸனில் எல்லாருமே க்யூட்டோ க்யூட்! ஸ்வீட்டோ ஸ்வீட்!

ஆத்யாவின் துள்ளலான குரல், அட்ரா சக்கை ரகம்…!

(‘லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி”, ‘கொடுவா மீசை…’)

எப்படி இந்தக் குட்டிப் பெண்ணால் எல்லா வரியையும் ஞாபகம் வெச்சுக்க முடியுது?

(“மணி அண்ணா… ஸ்டார்ட் பண்ணுங்க… வேற!”)

ரஹானா மட்டும் என்ன லேசா? என்ன ஒரு கான்ஃபிடென்ஸ்? அதுவும் அந்த ‘கிளிமாஞ்சாரோ’ பாட்டில் தெறி பேபியேதான்! ரசனையின் உச்சம்!

எல்லா குரல்களையும் மீறி, கிருஷ்ஷாங்கின் வாய்ஸில் ஏதோ ஒரு மேஜிக் இருக்கிறது. “என் ஜோடி மஞ்சக் குருவி’ பாடலில் வரும் எல்லா குரல் களையும் மாற்றி மாற்றி தானே பாடியது ரியல்லி கிரேட்! குழந்தைகள் பாடறதக் கேட்டு ஜட்ஜஸே துள்ளி எழுந்து சிலிர்க்கிறார்கள்! ஆச்சரியமான திறமைசாலிகள்! வாழ்க! வளர்க!

…………………………………..

அந்தக் காலத்து மளிகைக்கடை; இந்தக் காலத்து சூப்பர் மார்க்கெட். என்ன வித்தியாசம்?
-து.சேரன், ஆலங்குளம்

முன்ன எல்லாம் கடையில ‘Customer is God’னு  கொட்டை எழுத்துல எழதி வெச்சுருப்பாங்க. அதைப் பார்த்ததும், நமக்கு ‘கடவுள்’ மாதிரி ஒரு ஃபீலிங் வரும்.

ஆனா, இப்ப சூப்பர் மார்க்கெட்டுல நுழையும்போதே ‘நீங்க சர்வேயலன்ஸ் காமிரா கண்காணிப்புக்குள்ள இருக்கீங்க’ன்னு எழுதி வெச்சுருக்கறதப் பார்த்ததும் நமக்கு ‘திருடன்’ போன்றதொரு ஃபீலிங் வருதே! அதுதான் வித்யாசம்! ஹி…ஹி…!

…………………………………..

இரவில் கண் விழித்து ஐ.பி.எல். ஆட்டம் பார்க்கும் பழக்கம் உண்டா?
-எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

மொதல்ல, உங்கக் கையைக் கொடுங்க கெஜலட்சுமி மேடம்!… நீங்க தலைமை ஆசிரியை ஆகப் பதவி உயர்வு பெற்றதுக்கு ‘மங்கையர் மலர்’ சார்பாக, வாழ்த்தும் பாராட்டும்… உங்கள் அறிவும், ஆற்றலும் மாணவர்களின் நலனுக்குப் பெரிதும் உதவட்டும்!

பெரும்பாலும் நான் தூங்கப் போவதே இரவு பதினொரு மணிக்கு மேல்தான். ஐ.பி.எல் மேட்ச்கள் 11.30 மணிக்கே முடிந்துவிடும். எனவே, தங்கள் கேள்விக்கு அவுட் ஆஃப் சிலபஸில் பதில் சொல்கிறேன்.

1983 – உலகக் கோப்பை – கபில்தேவ் கேப்டன். இந்தியா முதன்முதலாக கோப்பையை வென்ற தருணம். எங்க ஏரியாவில் எங்க வீட்டில் மட்டுமே கலர் டீ.வி. இருந்தது. அக்கம்பக்கத்தில் ஏழெட்டு சிறுவர்கள், கிரிக்கெட் ரசிக சிகாமணிகள் இருந்தனர். என்னுடைய அண்ணன் கிரிக்கெட்டின் படு  தீவிர விசிறி. (இப்போதும்தான்!) மேட்ச் பெரும்பாலும் அதிகாலை
4.30 மணிக்குத் துவங்கும் என்பதால், நாலு மணிக்கே அலாரம் வைச்சு எழுந்து கதவைத் திறந்தால், அத்தனை சிறுவர்களும் திபு…திபு…!

அப்புறம் மேட்ச் களை கட்டும்! ஒவ்வொரு பந்துக்கும் மட்டை விளாசலுக்கும் ஒரு உச்! ஒரு நச்! ஆரவாரம்! சந்தோஷக் கூச்சல்!

இப்போதும் என் சகோதரன் வீட்டில், வளர்ந்த ரசிகர்கள் பலரும் கூடி, இரவெல்லாம் சத்தம் போட்டு, விஸில் அடித்து ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் வரவழைத்துச் சாப்பிட்டபடி மேட்ச் பார்க்கின்றனர். ஒருவேளை, அந்தச் சிறுவர்கள்தான் தங்களது கிரிக்கெட் கனவை, எல்லா மைதானங்களிலும் யார் உருவிலாவது இன்றைக்கும் தேடுகிறார்களோ என்னவோ!

நான்:- “அடேய், தூங்க விடுங்கடா!”

1 COMMENT

  1. டியர் மேடம்,
    எனது தலைமை ஆசிரியை பதவி உயர்வுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
    என்றும் அன்புடன்,
    எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன்,
    லால்குடி.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

‘டான்’ பார்த்தீங்களா அனு மேம்? -ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில் சமீபகாலமா, எந்தப் படத்து வசனத்துக்கும் நான் இமோஷனல் ஆனதில்ல. எந்தப் படத்துக் காமெடியையும் கைதட்டி ரசிச்சதில்ல. இரண்டையும் ‘டான்’ படத்துல செஞ்சுட்டேன்! சூரியை அப்பாவாக ‘செட்-அப்’...

அன்புவட்டம்!

அன்னையர் தினத்தை சிறப்பித்து வந்த சலுகைகளில் தங்களைக் கவர்ந்தது எதுவோ? -ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம் “சிக்குபுக்கு, சிக்குபுக்கு ரயிலே’ ஆஃபர்தான்! சிறு குழந்தைகளுடன் இரவு ரயிலில் பிரயாணிக்கும்போது, அவர்களைத் தூங்கவைக்க போதிய இடம் இல்லாமல் அவஸ்தைப்படுவோம் இல்லையா? தனியாகப் படுக்கவைத்தால்...

அன்புவட்டம்!

டி.வி.யில் வரும் சமையல் குறிப்புகளுக்கும், பத்திரிகையில் வரும் சமையல் குறிப்புகளுக்கும் என்ன வித்தியாசம்? -கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி டி.வி. ல பார்த்து சமைக்கும்போது (அதுவும் ஏகப்பட்ட கமர்ஷியல் பிரேக்குப் பிறகு...!) கவனமா பார்த்து, எல்லாத்தையும் ஞாபகத்துல...

அன்புவட்டம்!

காலம் காலமாய் கச்சேரி கேட்டாலும், கல்யாணி, காம்போதி அலுக்கவில்லையே... எப்படி? -சீனு சந்திரா, சென்னை கல்யாணி, காம்போதி இரண்டுமே கனமான ராகங்கள்... ஐ மீன் ஹை க்ளாசிக்கல். அதனால் அவை தரும் நேர்வள அதிர்வலைகளின் வீர்யமும் மகத்தானவையாம்....

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

2
 ஆன்மிகம்! ஆண்கள் மட்டுமே வழிபடும் அம்மன்! கரூரிலிருந்து சின்னதாராபுரம் வழியாக 40 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய திருமங்கலம் அருங்கரை அம்மன் கோயிலில் பெண்களுக்கு அனுமதியில்லை. ஆண்கள் மட்டுமே செல்ல முடியும். இங்கு விநாயகருக்கு மட்டுமே...