0,00 INR

No products in the cart.

எங்களைக்  கவர்ந்த உலக பாரம்பரியச் சின்னம்!

– FB  வாசகீஸ் பதிவுகள்!

 

ஸ்ஸாமில் உள்ள ‘காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்கா,’ என்னை ஈர்த்த இடமாகும். இங்கு உலகின் அரிய வகை ஒற்றைக்கொம்பு காண்டா மிருகங்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒருபங்கு காணப்படுவது இதன் சிறப்புக்கு காரணம். மேலும் இங்கு ராயல் வங்கப்புலி, ஆசிய யானை, சதுப்பு நில மான்கள் போன்ற பல அரிய உயிரினங்களைப் கண்டு களித்தேன். இங்கு பிரம்மபுத்திரா உட்பட முக்கிய ஆறுகள் மற்றும், பல சிறிய நீர்நிலைகள் ஓடுகின்றன. இங்கு உயரமான யானைப்புல், சதுப்பு நில ஈரக்காடுகள் காணப்படுவதால் உலகப் பாரம்பரிய சின்னமாக கருதப்படுகிறது. இவைகளை போற்றிப் பாதுகாப்பது நமது கடமை.
– ராதிகா ரவீந்திரன்

ன்னை பெரிதும் ஈர்த்த உலகப் பாரம்பரிய சின்னம், மாமல்லபுரம். இங்கு பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கலை எழில் கொஞ்சும் கோவில்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கும். திறந்த வெளி சிற்பங்களாக இந்த நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. இது 1984 ஆம் ஆண்டு  UNESCO  வால் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
-கலைமதி  சிவகுரு

ண்முன்னே நிற்கும் பிரம்மாண்டமான கலைச்சின்னம் தஞ்சைப் பெருவுடையார் கோயில். சோழமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. மலைகளே இல்லாத சோழநாட்டில் பிரம்மாண்டமான கற்கோயில்! சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாய் கற்சிற்பங்கள், பிரம்மாண்டமான ஒரே கல்லிலான நந்தி, கோபுரத்தின் நிழல் கீழே விழாதவாறு அமைக்கப்பட்ட கட்டடக்கலை நுட்பம், கோயிலிலிருந்து அரண்மனை, சிவகங்கை பூந்தோட்டம், ஆகிய இடங்களுக்கு செல்ல சுரங்கப்பாதைகள்… என இன்னும் வியக்கவைக்கும் எத்தனையோ நுட்பங்களை உள்ளடக்கிய கலைக்கோயில் அது.

பிரம்மாண்டமான சிலைவடிவில் பெருவுடையாரும்,பிரஹன்நாயகியாரும் அருள்பாலிக்கும் தஞ்சை பெரிய கோயிலே என் மனம் கவர்ந்த பாரம்பரிய கலை சின்னம்.
-தி. வள்ளி

தாராசுரம் நகரில் அமைந்துள்ள ஐராவதேசுவரர் கோயில் தான் என்னை மிகவும் கவர்ந்த உலக பாரம்பரிய சின்னம். அங்குள்ள சிற்பங்களின் அழகு சொல்லவொண்ணாது. இந்தத் திருத்தலம் தஞ்சாவூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. மூலவராக சிவபெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் . மகாமகம் பண்டிகைக்கு இக்கோவில் பெயர் பெற்றது.
-சுதா திருநாராயணன்

லக அளவில் என் மனம் கவா்ந்த புராதன சின்னமாய் அமைந்ததாக தாஜ்மஹாலைத்தான் சொல்லுவேன்! பளிங்கு கற்களால் … எவ்வளவு அழகு ? கொட்டிக்கிடக்கும் அழகையும் , அதன் அமைப்பையும் பாா்க்கும்போது , தன் காதலி மீது எவ்வளவு மையல்  கொண்டிருந்தால் உலகமே வியக்கும் அளவிற்கு ஷாஜகானால் தாஜ்மகால் உருவாக்கப்பட்டிருக்கும்! காலத்தால் அழியாதது காதல் என்றால், அதை பறைசாற்றும் விதமாய் அமைந்த தாஜ்மகால் எவ்வளவு புனிதம் வாய்ந்தது?

மும்தாஜ் கொடுத்து வைத்த பெண்மனி. என்ன அழகு, எத்தனை அழகு, கோடி கோடி கொள்ளை அழகு , அத்தனையும் ஒருங்கே அமைந்ததே தாஜ்மஹால் ! அதனால் தான் உலக அதிசயங்களில் ஒன்றானதோ என வியக்கிறேன்!
-நா. புவனா நாகராஜன் 

கும்பகோணத்துக்கு அருகே உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், நான் பார்த்து வியந்த பாரம்பரிய கலைப்பொக்கிஷம். தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாட்டினை உலகிற்கு பறை சாற்றும் அற்புதமான கலைப்படைப்பு. ஏராளமான கல்வெட்டுகள், தூண்களில் அமைக்கப்பட்ட சிற்பங்கள், தேர் வடிவில் அமைந்த மண்டபம் என பல அரிய சிற்பக் கட்டமைப்புகளை இங்கு காணலாம். கோயில் பலிபீடத்தின் படிகள் இசையில் எழுப்புவதை பார்க்க பார்க்க ஆச்சர்யம் மேலோங்கும். யானை ரிஷப சிற்பம், குழலூதும் சிவன் சிற்பம், போன்ற பல அரிய சிற்பங்களும், சிலைகளும் வியப்பில் ஆழ்த்தும். நம் முன்னோர்களின் கட்டிட கலைக்கு சான்றாக நிற்கும் இவ்விடத்திற்கு வந்தால் செல்லவே மனம் வராது. பல முறை சென்றிருந்தாலும் அலுக்காத அழகிய இடம்.
– மஹாலக்ஷ்மி சுப்பிரமணியன்

ன்னை மிகவும் ஈர்த்த இடம் ஹம்பி( Hampi) தான் . கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள உலகப் பாரம்பரிய களம் இது. விஜயநகர பேரரசின் சிறப்பு வாய்ந்த இடம். இங்கு விஜயநகர அரசர்களின் குலதெய்வமான விருபாட்சர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது விஜய நகரத்தோடு தொடர்புடைய மேலும் பல நினைவு சின்னங்களைக் கொண்டது.

அருகில் ஹோஸ்பேட் வரை ரயிலில் சென்று, பின் பரிசலிலோ, அல்லது ஆட்டோ, கார் பிடித்தோ செல்லலாம். மிகவும் அருமையான இடம்.  துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில் ஹம்பி உள்ளது. ராமாயணத்தில் வரும் கிஷ்கிந்தையுடன் ஹம்பியில் உள்ள பல இடங்கள் அடையாளம் காணப்படுவது உண்டு. இங்குள்ள அஞ்சனாத்திரி குன்று அனுமன் பிறந்த மலையாக குறிப்பிடப்படுகிறது. பார்க்க வேண்டிய இடம். நாங்கள் இரண்டு முறை சென்று அந்த இடத்தை ரசித்து பார்த்தோம்.
-கிருஷ்ணவேணி

லக பாரம்பரிய சின்னம் எனும்போது என்னை மிகவும் ஈர்த்தது பாரிஸ் நகரத்தில் உள்ள ஈஃபில் டவரே ஆகும். அதன் கம்பீரமும் பிரமாண்டமும் அளப்பரியது!
-ஜெயகாந்தி  மகாதேவன்

ஞ்சை பெரிய கோயிலின் சிற்பங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தும். வெளி மாநிலம் என்றால் பேளூர் சிற்பக்கோயில் மிகவும் சிறப்பாக இருக்கும்.
-அருணா சந்திரசேகரன்

நான்கு பக்கமும் சிங்க முகங்களைக் கொண்ட அசோகர் தூண் எனப்படும் அந்த சின்னம் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அசோகர் சரித்திரத்தில் கூறப்பட்ட இந்த சின்னத்தை நான் மிகவும் ரசித்துப் படிப்பேன்.  நம் தேசியக் கொடிக்கு நடுநடுவே உள்ள அசோக சக்கரம் என்ற படும் அந்த சின்னமும் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் ராஜாக்கள் கட்டிய பல அரிய கோவில்களில் உள்ள அழகான சிற்பங்களைப் பார்க்கும் போது, அவையும் நம் பாரம்பரிய சின்னம் என்று மனதிற்கு உற்சாகமாக இருக்கும் .அவற்றை பராமரிக்க வேண்டும் என்ற ஆவலும் ஏற்படும்.
உஷா முத்துராமன்

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன. இங்கே தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.
-லட்சுமி சூரியகுமார்

ஞ்சாவூர் பெரிய கோவில்! மலைகளே இல்லாத இடத்தில், பெரிய பெரிய கற்களை கொண்டு பெரிய கோவில்கட்டியது மிக பெரிய செயல் என்றே கருதுகிறேன்!
-சாந்தி ஶ்ரீனிவாசன்

தஞ்சை பெரிய கோவில்! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எந்த நவீன உபகரணங்களும் இன்றி கட்டி முடிக்கப்பட்ட கோவில்.
-அன்பு பாலா

ன்னை மிகவும் ஈர்த்த, ஆச்சரியப் படுத்திய பாரம்பரிய சின்னம், ” மகாபலிபுரம் கடற்கரை கோவில்” தான். பல்லவ மன்னர்கள் சிற்பக்கலையை எப்படிப் போற்றி ஆராதித்தனர் என்பதை இன்றளவும் உலகுக்கு எடுத்துக்கூறும் இந்த பொக்கிஷங்களை காணும் போதெல்லாம் மனதில் உற்சாகம் பொங்குவதோடு, கல்லிலே கலைவண்ணம் கண்டான்! என்ற பெருமிதமும் எட்டிப்பார்க்கும்.
-பானு பெரியதம்பி

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...