0,00 INR

No products in the cart.

ஏழாவது படை வீடு!

ஆர். மீனலதா, மும்பை

“வெற்றிவேல் முருகனுக்கு அர கரோ கரா!” ஏழாவது படை வீடாக மும்பை செம்பூர் செட்டாநகரில் முருகப் பெருமான் குடியமர்ந்துள்ள சுவாரசியமான விபரம் பின்வருமாறு:-

1945 ஆம் ஆண்டு மாட்டுங்கா பகுதியில், சுப்பிரமணிய சமாஜம் என்கிற அமைப்பினை முருக பக்தி கொண்ட சில மும்பை வாழ்த் தமிழர்கள் ஆரம்பித்து முருகன் படம், வேல் வைத்து பூஜை செய்து வழிபட்டு வந்தனர். மூர்த்தி சிறிதெனினும், கீர்த்தி பெரிதென்பது போல, தைப்பூசம், கந்தசஷ்டி விழா, திரு கிருபானந்த வாரியார் உபந்நியாசமென அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன. தமிழ்க்கடவுள் முருகனுக்கு தனிக்கோவில் அமைக்க, பல வருடங்களாக இடம் தேடியும் கிடைக்கவில்லை.

பின்னர், செம்பூர் செட்டா நகரில் காடு மாதிரியிருந்த ஒரு இடம் விலைக்கு வர, அதை வாங்கலாமென எண்ணி  ஆருடம் பார்க்கப்பட்டது.

அப்போது, ஒரு காலத்தில் வனாந்திரமாக இருந்த இந்த இடத்தில் மகரிஷிகள் பலர் சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவை பக்தியுடன் நினைத்து தவம் செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டு, நிதி திரட்டும் வேலையும் ஆரம்பமானது.

வீடுகள்தோறும் சிறு உண்டியலைக் கொடுத்து, மாதா மாதம் அதை திரும்ப வாங்கி வருவார்கள். ஒவ்வோரு உண்டியலிலும் ரூபாய்  20/- 30/- 50/-  என்று இருக்கும். போகப் போக நிதிகளும் உதவிகளும் கிடைக்க ஆரம்பித்தது. காஞ்சிபுரம், மகாபலிபுரம், வாலஜாபாத் போன்ற இடங்களிலிருந்து 800 டன் Blue Granite கற்கள் ஸ்பெஷலாக செதுக்கி வரவழைக்கப்பட்டன. குமரேச சாஸ்திரிகள் மேற்பார்வையில், பாரம்பரியம் மற்றும் மாடர்ன் கட்டடக்கலை நிபுணர்களைக் கொண்டு முதலில் “பாலாலயம்” பின்னர் “மூலாலயம்” கட்டப்பட்டன.

ஆகம விதிப்படி 51 அடி உயரத்திற்கு மேலே முருகன் ஸ்தலமும், அதற்கு மேல் 26 அடி உயரத்தில் ராஜகோபுரமும் அமைக்கப்பட்டு பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டது கோவில்.

இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில், கோயிலின்  ஆர்க்கிடெக்ட் கிறித்துவர் C.S.K. Raj  மற்றும் கட்டடத்தை அமைத்தவர் இஸ்லாமிய முகமதியரான அப்பாஸ் ஐஸ்டன் ஆகியோர் செயல்பட்டது இறையருளே.

108 படிகளின் வழியாக ஏறிச் செல்கையில், அதன் இருபக்கச் சுவர்களிலும், அஷ்டகணபதி, கந்தபுராணம் போன்ற புராணக் கதைகளைக் கூறும் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது கண்கொள்ளாக் காட்சியாகும்.

மேல்தளத்தை அடைந்தவுடன், கண்ணெதிரே உடலும், உள்ளமும் பக்திப் பெருக்கில் சிலிர்க்கச் செய்யும் வண்ணம், வள்ளி – தெய்வானையுடன் தம்பதி சமேதராக காட்சியளித்து அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான்.

145 அடி உயரத்தில் தகடதகவென மின்னும் தங்க ரதமும், 4 அடி உயரத்தில் 51 காரட் வைரம் பதித்த வேலும் இக்கோயிலில் இருப்பது போற்றுதற்குரிய விஷயமாகும்.

சமாஜத்தின் 75ஆவது வருடம் இது. செயலர் பதவியில் தொடர்ந்து, 60 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றி வரும் தி.பி.எஸ்,.சுப்பிரமணிய மாமாவின் சேவை மகத்தானது.

அபிஷேகம், ஆராதனை, விழாக்கள் பல்வேறு வகை பூஜைகள் என அனைத்தும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

கல்யாண மண்டபங்களும், கோயிலின் மறுபகுதியில் அருமையாக அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் முதல் மகா கும்பாபிஷேகம் 1980 ஜனவரி 24 அன்று காஞ்சிப் பெரியவர் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இதன் 5ஆவது மகா கும்பாபிஷேகம் ஏப்ரல் 6 ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இதற்கென அறுபடை வீடுகளிலிருந்து சிவாச்சாரி்யார்களும், கேரளத்தில் பிரசித்தி பெற்ற தாந்தீரிகர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். யாகசாலையில் ஆறுகால பூஜைகள் நடத்தப்பட்டன.

மாலையில் கலை நிகழ்வுகள் அருமையாக நடைபெற்றன.

மகா கும்பாபிஷேகத்தில் பங்கேற்று, இறைவனை தரிசித்தால், நூறு அஸ்வமேத யாகங்கள் செய்ததற்கு சமமென புராண நூல்கள் தெரிவிக்கின்றன.

கீழைக் கடற்கரையில் திருச்செந்தூர்!

மேலைக் கடற்கரையில் திருச்செம்பூர்!”

ஓம் சரவண பவ!

1 COMMENT

  1. மும்பை திருச்செம்பூர் முருகன் ஆலத்தின் சிறப்பைப் பற்றி படித்தது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. பேரழகும், பேராற்றலும் கொண்ட முருகனை மனதில் ஆவல் ததும்புகிறது. மும்பை சென்றால் செம்பூர் செந்தில்நாதனை தரிக்க அவசியம் செல்வேன். மிக்க நன்றி.
    ஆர்.வித்யா சதீஷ்குமார்,
    பள்ளிக்கரணை.

மீனலதா
ஆர். மீனலதா, தொலைபேசி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். விருதுகள் பல பெற்றவர். சிறந்த நாடக நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், சினிமா, இசை, கவிதை, சமையல், Ad.supervision, விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்கும் ஆல்ரவுண்டர். நிகழ்ச்சி அமைப்பாளரும்கூட.. பழகுவதற்கு இனிமையான பண்பாளர். பலருக்கும் முன்னோடியாக விளங்குபவர். மங்கையர் மலரின் மும்பை நிருபர். உற்சாக ஊற்று.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...