0,00 INR

No products in the cart.

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்
அறிவியல் சூத்திரங்களை வைத்து உலக சாதனை!

டலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் ஜோதிகா. புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு 50X80 அடி நீள அகலத்தில் அறிவியல் சூத்திரங்களை எழுதி, அதன் மூலம் அறிவியல் அறிஞர் சி.வி.ராமனின் உருவப்படத்தை உருவாக்கி புதிய உலக சாதனைப் படைத்துள்ளார்.

சிதம்பரத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டார். இவரது அம்மாதான் வீட்டு வேலை செய்து படிக்க வைத்திருக்கிறார்.

பள்ளி நாட்களில், ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தால் பேச்சுப் போட்டி, நடனப் போட்டி என்று கலந்து கொண்டிருக்கிறார்.

அம்மாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக சாதனை செய்ய வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். நமது விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்  அவர்கள் நோபல் பரிசு வாங்கிய தினம், தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப் படுகிறது. அதனை முன்னிட்டு, ராமன் அவர்களின் உருவப் படத்தை வரைந்து, அதற்குள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் சூத்திரங்களை எழுதியிருக்கிறார்.

விழிகள் அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் உதவியுடன் தொடர்ந்து 18 மணி நேரம் உழைத்து,  “கலாம் உலக சாதனைப் புத்தகத்தில்” இடம் பெற்று, விருது வாங்கியிருக்கிறார் ஜோதிகா. இந்த விருதை தன் தாய்க்கும் ஆசிரியைகளுக்கும் நண்பர்களுக்கும் சமர்ப்பிப்பதாக குறிப்பிடுகிறார்.

………………………………..

அறிவியல் கண்டுபிடிப்புக்களில் சாதனை!

கனடாவைச் சேர்ந்தவர் 24 வயது ஆன் மகோசின்ஸ்கி. சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட இவர், தன் 14 வயதில் மனித உடலின் வெப்பத்தின் மூலம் இயங்கக்கூடிய ‘ஹாலோ பிளாஷ் லைட்’ டைக் கண்டுபிடித்தார். இது கையிலிருக்கும் வெப்பத்தைக் கொண்டு  இயங்கக்கூடியது.

இந்த கண்டுபிடிப்பு,  பிரபலமாகி, கலிபோர்னியாவில் நடந்த ‘சர்வதேச கூகுள் அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசையும், 25 ஆயிரம் டாலரையும் வென்றுள்ளது.

சூடான காபி நிரம்பிய கோப்பையின் வெப்பத்தின் மூலம் கைப்பேசியை சார்ஜ் செய்யும் ‘இ-ட்ரிங்க்’ எனும் கருவியை கண்டுபிடித்திருக்கிறார்.  இயற்கை சார்ந்த, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத கண்டுபிடிப்புகளுக்காக கனடியன் அமைப்பில் இருந்து  50 ஆயிரம் டாலர் வென்றிருக்கிறார்.

எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என பன்முகத் திறமை பெற்றவறான ஆன், தற்போது கல்லூரியில் படித்துக்கொண்டே ‘மாகோட்ராநிக்ஸ்’ எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கூகுள் சயின்ஸ் கண்காட்சி,  இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளார்.

 G7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து பேரில் ஒருவராக இடம் பெற்றவர் இவர்.

………………………………..

புற்று நோய் விழிப்புணர்வில் சாதனை!

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரிப்பன்களைக் கொண்டு உலக சாதனை செய்துள்ளார் விழுப்புரம் மாவட்டம், சுந்தரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி வாணிஸ்ரீ.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு, மற்ற மாணவர்கள் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெறும் போது, தானும் ஏதாவது சாதனை செய்ய வேண்டும், அது விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுத்திருக்கிறது.

இதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி புதுவையில் உள்ள தனியார் கல்லூரியின் அரங்கத்தில், 10  மணி நேரத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரிப்பன்களைக்கொண்டு புற்றுநோய் விழிப்புணர்வுக்கான ரிப்பன் வடிவத்தை உருவாக்கி, கலாம் உலக சாதனை அங்கீகாரம் பெற்று விருது வென்றிருக்கிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, உணவு, மருந்து வகைகள், தடுப்பு வழிமுறைகள் இவற்றையெல்லாம் இதற்குள் குறிப்பிட்டிருக்கிறார். மருத்துவராகி தான் பிறந்த கிராமத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்புவதாக கூறுகிறார்.

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...