0,00 INR

No products in the cart.

ஒரு பக்கக் கதைகள்!

படங்கள்:  பிள்ளை
எல்லாம் வல்ல தாயே!
-தேன்சிட்டு

‘சமயபுரம்’ என்று பச்சை நிறத்தில் பேருந்து ஜன்னல் மீது எழுதி ஒரு டவுன் பஸ் வந்தது. “பஸ் வந்திருச்சு, எல்லாரும் ஏறுங்க,” என்று ஒரு பெரியவர் குரல் கேட்க, பானு மற்றும் அவளது குடும்பம் பஸ்சில் ஏறியது.

ஏழு வயது பானுவிற்கு ஏறியது மட்டும்தான் தெரியும். ஒரு கரும்பை நசுக்கி சாரெடுப்பது போல பஸ்சின் நெரிசலில் சிக்கினாள் பானு. அனைவரும் அவளுக்கு மேல் உயரமாக இருக்க, வியர்வை நாற்றம், சாப்பாடு, பூ, பழங்கள் வாடைக்கு நடுவில் யாரோ அவள் கையை பிடிக்க நின்றிருந்தாள்.

சமயபுரம் வந்தாச்சு, என கண்டக்டர் சொல்ல, அலையலையாய் மக்கள் பஸ்சிலிருந்து இறங்கினர். சரி, இறங்கிவிட்டோம், இனிமேல் நிம்மதியாக இருக்கும் என்று நினைத்த பானுவிற்கு வேறு ஒரு உலகம் காத்திருந்தது. திரள்திரளாய் பக்தர்கள் அணிவகுத்துக் கொண்டிருக்க, குறிப்பாக பெண்கள், பெரிய குங்கும பொட்டு, மஞ்சள் அல்லது சிவப்பு நிற புடைவை அணிந்தபடி கோயிலை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்தனர்.

கோயில் வாசலிற்கு முன் ஒரு பெரிய மண்டபம் இருக்க, அங்கு இரு பக்கங்களிலும் உயர்ந்த தூண்களிற்கு நடுவில் நிறைய கடைகள். ஜெ ஜெவென ஒவ்வொரு கடைக்கு முன்பும் இருந்த மக்களும், கூவி கூவி அழைக்கும் கடைக்காரர்களையும் பார்க்க, பார்க்க வியப்பாக இருந்தது பானுவிற்கு.

ஆங்காங்கே இருக்கும் விந்தைகள், சாமியாடும் பக்தர்கள், பணநோட்டு மாலை அணிந்திருக்கும் அம்மன் சிலைகளை பார்த்து பானு வாயை திறந்து நின்று விடுவாள் . பிறகு அவளது கரத்தை  பற்றியிருக்கும் அந்த கை இழுத்துச்செல்ல பின்தொடருவாள் பானு.

கண்ணெதிரே கடலென மக்கள் கூட்டம் இருக்க, அந்த கையின் வலிமையும், அது தரும் நம்பிக்கையும் பானுவிற்கு அந்த கை இழுத்த இழுப்பிற்கு நடக்க உதவியாக இருந்தது. அந்த ஜனத்திரளில் ஒருவேளை தன்னை அந்த கருமாரி தாய் தான் பத்திரமாக அழைத்துச் செல்கிறாளோ என்ற உள்ளுணர்வு பானுவிற்கு ஏற்பட்டது. அருகே ‘கற்பூர நாயகியே கனக வல்லி …’ என பாடல் ஒலிக்க ஏதோ ஒரு சக்தியின் ஈர்ப்பால் பானு நடந்தாள்.

தரிசனம் முடிந்து மீண்டும் பேருந்து ஏறுமிடத்தில்… இறங்கும் மக்களை இறங்க விடாது ஏறும் கூட்டம் எற, பானுவிற்கு கால்கள் தவறியது, மூச்சு முட்டியது… அவளை கீழே விழும் தருணத்தில் சட்டென முதுகில் ஒரு கை தாங்கியது. அந்த கைகளின் ஸ்பரிசம் அவளுக்கு பழக்கமான அந்த ஸ்பரிசம் நம்பிக்கையை தர, தன்னை காக்கும் அந்த காவல் தெய்வத்தைப் பார்க்க திரும்பினாள் பானு… அவளது அம்மா பின்னாடியிருந்தார். ” அம்மா நீயா?,” என்ற பானு, தனது அருகிலேயே தனது காவல் தெய்வம் நின்றிருக்க கவலை ஏதுமின்றி அந்த நெரிசலான பேருந்தில் ஏறினாள்.

**************************

நெத்தியடி!

– வி.ஜி. ஜெயஸ்ரீ

நாத்தனார் பெண்ணின் நிச்சயதார்த்ததிற்கு கிளம்பிக் கொண்டிருந்த லயா,
முகிலாவின் வாட்ஸ்ஆப்  செய்தியை பார்த்து துள்ளி குதித்தாள். ஆம், அவள் தாயாக போகிறாள் என்ற பரிசோதனை முடிவு அது. திருமணமாகி இந்த 3 வருடத்தில், முதலிலெல்லாம் நாள் தள்ளிப் போனால், சந்தோஷமாக கணவன் மனைவி இருவரும் லேப்க்கு போவார்கள். இப்போதோ பக்கத்து வீட்டு முகிலாவின் லேப்பில் லயா சிறுநீர் மாதிரியைக் கொடுத்து விட்டு வர, இதோ நல்ல ரிசல்ட் வந்து விட்டது.

சூரியாவிடம் சொல்ல, லயாவை தட்டாமாலை சுற்றியவன், “எங்கே போனாலும், ஒரே கேள்வியை கேட்டு உயிரை எடுத்துக்கிட்டிருந்தாங்க, இனி தொல்லையில்லை” என்றான்.

விசேஷ வீட்டில் நாத்தனார் கணவன், “என்ன மச்சான், கல்யாணம் ஆகி மூணு வருஷமாச்சு. இன்னும் ஒன்னும் வேலைக்காகலையா? குழந்தை இல்லாதவங்க இறந்தப் பின் ‘புத்’ என்னும் நரகத்துக்குதான் போவாங்களாம்,” கிண்டலாக சிரிக்க, சூர்யா பதிலளிப்பதற்குள் லயா, “அண்ணா, விண்ணுலகுக்கு போனதற்குப் பின், ‘புத்’ என்னும் நரகத்துக்கு போக கூடாதுன்னு தானே உங்க அம்மா கூட உங்களை பெத்திருப்பாங்க? ஆனா, அவங்க வாழும் போதே கொண்டு போய் முதியோர் இல்லத்துல விட்டுட்டு, மண்ணுலகத்துலியே அவங்களுக்கு நரக வேதனையை குடுத்துட்டீங்களே! உங்க மாதிரி நாக்கில் நரம்பில்லாம பேசற ஆளுங்க வாயில் அடிபடக் கூடாதுன்னு தான், கடவுள் எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை குடுத்துட்டான். இன்னிக்கு தான் லேப் முடிவு வந்தது” என்று லயா ‘நெத்தியடி’ யாக பேச, குன்றிப் போனான் லயாவின் நாத்தனார் கணவன்.

**************************

பேரம்!
– ச.மணிவண்ணன்

புது வீட்டுக்கு எலக்ட்ரிக்கல் சாமான் வாங்க நண்பன் கோகுலுடன் சென்றான் ரகு. சாமான் வாங்கிய ரகு பில்லைப் பார்த்தான். ஒரு லட்சத்து   ஏழாயிரம் இருந்தது.

பேரம் பேசினான். கடைசியாக கடைக்காரர் ஒரு லட்சத்து 5000 கொடுக்க  சம்மதித்தார்.  மீண்டும் மீண்டும் பேரம் பேசினான் ரகு.

கோகுலுக்கு எரிச்சலாக இருந்தது. முடிவில் 500 ரூபாய் குறைத்துக்கொண்டு ரகு கொடுத்தான்.

முகவரி கொடுத்து டோர் டெலிவரி செய்ய சொல்லிவிட்டு நண்பன் கோகுலை அழைத்து கொண்டு சலூனுக்குச் சென்றான்.

ரகு முடி வெட்டிக் கொண்டு, 200 ரூபாயை நீட்டினான். “சில்லறை இல்லை,” என முடித் திருத்தம் செய்பவர் சொல்ல,”பரவாயில்லை வச்சிக் கோங்க,”எனச் சொல்லிவிட்டு கடையை விட்டு வெளியேறினான் ரகு.

“என்னடா ரகு… அநியாயமா இருக்கு. எலக்ட்ரிகல் சாமான் கடைக்காரர் கிட்ட 500 ரூபாய் குறைத்து பேரம் பேச ஒரு மணி நேரம் எடுத்துகிட்ட… சலூன்ல என்னடான்னா 50 ரூபாய் சேர்த்து கொடுத்திட்டு  வர ஒன்னும் புரியல!”

“பாவம்டா கொரனோ காலம்! ஒரு மாசமா லாக்டெளன்ல கடை மூடி இருந்தது. இப்பதான் கடை திறந்து இருக்காங்க. எலக்ட்ரிக் கடைக்காரன் பணக்காரன் ஒன்னும் பிரச்னை இல்லை “என்றான்  ரகு.  நண்பனின் பேச்சில் நியாயம் இருப்பதை உணர்ந்தான் கோகுல்.

1 COMMENT

  1. மூன்று ஒரு பக்கக் கதைகளும் முக்கனிகளாக இனித்தன. எழுதியவர்களுக்கு பாராட்டுகள்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

டைரி!

1
கதை: தேன்சிட்டு ஓவியம்: தமிழ்   6/8/2000 இன்னிக்கு காலேஜ்ல ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துச்சு. கீதா, அவளோட பிரண்ட்ஸோட பேய் கிட்ட பேசினேன்னு சொன்னா . "பேயா? ரொம்ப ரீல் விடாதேன்னு," அவளை ஓட்டினேன். ஆனா,  முகத்த சீரியஸா...

ஒரு பக்கக் கதைகள்!

ஓவியம்: பிள்ளை கதை: ச. மணிவண்ணன்  வாடகை ராமமூர்த்தி ஈசி சேரில் படுத்துக் கொண்டு நியூஸ் பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தார். "சார் வணக்கம்!" என்ற குரல் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தார். சங்கர் நின்றிருந்தான். மாடி வீட்டில் குடியிருப்பவன். "சொல்லுப்பா...

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!

சிரிகதை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை...