0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

ன்னிக்கு கல்யாண மார்க்கெட்டுல இருக்குற எல்லா பெண்களும் சொல்லி வெச்சா மாதிரி கேக்குற விஷயம், “என்னோட ஹப்பி, என்னை ‘caring’ஆ பார்த்துக்கணும்… எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அப்படியே துடிச்சுப் போயிடணும்… என் மேல பாசமா இருக்கணும்…!”… இந்த டயலாக் யூனிவர்ஸா போச்சு!

(“அப்ப… அந்த இரண்டு லட்ச ரூபாய் சம்பளம், ஆறடி இரண்டு அங்குலம், சொந்த வீடு, கார் வேணாமா?” “நோ… நோ… அதுவும்தான்!!”)

னக்குத் தெரிஞ்ச ஒரு தம்பதி… அப்படி ஒண்ணும் வயசு இல்ல; எழுபதுக்குள்ளதான்! மனைவியோட பிறந்தநாள் தெரியாது; ஆனா கணவனோட பிறந்த நாள் மனைவிக்குத் தெரியும். அது ஆருத்ரா தரிசன நாள்! அதனால மறக்காம மனைவி ஒரு பாயசம், வடை செஞ்சுத் தருவாங்க. கோயிலுக்குப் போயிட்டு வருவாங்க… ஆனா அந்தக் கணவர் ஒருநாள் கூட “உன் பர்த்டே என்னிக்கு?” என்று கேட்டது இல்ல.

கணவனும் மனைவியும் அதிகமா பேசிக்கூட நான் பார்த்தது இல்ல. ஜோடியாக வெளியே போவதும் கிடையாது. மனைவியின் பேரைச் சொல்லிக்கூட கூப்பிட மாட்டார். மனைவிதான் வார்த்தைக்கு வார்த்தை, “லோகேஷ் அப்பா” என்று சொல்வார். மனைவி ரோட்டில் நடந்து வந்து கொண்டிருப்பார். லோகேஷ் அப்பா அப்படியே டி.வி.எஸ். 50 இல் விரைந்து காணாதது போல போய்விடுவார்.

எதிர்பாராதவிதமாக, அந்தப் பெண்மணி, ஒரு நாலு நாள் ஜுரத்தில் இறந்துவிட்டார். சாவு வீட்டில்கூட லோகேஷ் அப்பா சாதாரணமாகத்தான் காணப்பட்டார். ஆனால் அந்தப் பெண்மணி, இறந்து மூன்றாவது வாரம், மாரடைப்பு ஏற்பட்டு கணவரும் இறந்துவிட்டார். நல்ல ஆரோக்கியமானவர்!

“அம்மாவின் சாவு, அப்பாவை உலுக்கிவிட்டது. அவருக்கு மென்டல் ஷாக் ஆகிவிட்டது. சாப்பாட்டை வைத்தால் மலங்க மலங்க, “அம்மா எங்க?” என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்” என்றனர் பிள்ளைகள்.

இவர்களுடைய கதையக் கேட்டபோது, எனக்கு ‘Zoo’ கதை ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது கண்மணீஸ்…

ஒரு கணவனும் மனைவியும் மிருகக் காட்சிச் சாலைக்குப் போனாங்க. அங்கே ஒரு குரங்கு, தனது பெண் குரங்குடன் லவ்மூடில் விளையாடிக்கிட்டு இருந்தது. அதைப் பார்த்த மனைவி சொன்னா: “வாவ்… வாட்…எ ரொமான்டிக் அனிமல்?” என்னமா காதலிக்குது பாருங்க!” கணவன் பதிலே சொல்லவில்லை.

இரண்டு பேரும் அதை ரசிச்சுட்டு, அடுத்தப் பகுதிக்குப் போனாங்க. அது ஒரு சிங்கத்தின் இருப்பிடம். பெண் சிங்கம் ஒரு மூலையில் அமைதியா படுத்திருக்க, ஆண் சிங்கம், அந்த பெண் சிங்கத்தைக் கொஞ்சம்கூட கண்டுக் கொள்ளாமல் உலவிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த மனைவி காமென்ட் அடித்தாள்.

“காதல் இல்லாமல்… what a sad scene?’

கணவன் சொன்னான். “ஒரு கல்லை பெண் சிங்கத்தின் மீது எறிந்து பார்.”

அவளும் விளையாட்டாக ஒரு சிறிய கல்லை, பெண் சிங்கத்தின் மீது தூக்கிப் போட, ஆண் சிங்கம் கோபத்துடன் கர்ஜித்து ஓடி வந்தது.

“இதையே குரங்கின் மீது செய்து பார்.”

ஆண் குரங்கு பயந்து, மரக்கிளையில் தாவி ஓடிவிட, தனித்து விடப்பட்ட பெண் குரங்கு ‘அம்போ’ என விழித்தது.

உடனே கணவன் சொன்னான்.

“எங்காவது ஆணும் பெண்ணும் நெருக்கமாகக் கொஞ்சிக் கொண்டிருந்தால், ‘அது காதல்’னு நினைச்சுடாதே. அது பெரும்பாலும் இதயத்தில் இருக்கும் பொய்மையை மறைக்கப் போடும் வெளிவேஷமாக இருக்கக்கூடும். அதற்கு நேர்மாறாக சில ஆண்கள் ரிலாக்ஸ்ட் ஆக இருப்பார்கள். ஆனால் அவங்க இதயம் தூய்மையான அன்பினால் நிரம்பியிருக்கும்.”

தையே சாக்கா வெச்சுக்கிட்டு, “மனசுக்குள்ள பாசம் இருக்கு… ஆனா காட்டத் தெரியல..”ன்னு பழைய பல்லவிய பாடாம, மனைவிக்குப் பிடிச்ச மாதிரியும் வாழ முயற்சி பண்ணுங்க ஆண்களே! கணவன் தன்னிடம் நாலு வார்த்தை அன்பாகப் பேசிப் பாராட்டினாலே, உச்சி மகுடம் வைத்த குஷியாகிவிடும் நல்ல பெண்களும் நாட்டுல இருக்காங்க! அவங்கள் சார்பாக இந்த வார ‘ஒரு வார்த்தை!…’ பாசமா இருங்க; ஆசையா பேசுங்க… பாசாங்கு இல்லாம உண்மையா இருங்க! தேவைப்படும் சமயத்தில் தூய அன்பை வெளிப்படுத்துவதும் நல்ல ஆணுக்கு அழகுதான்!

3 COMMENTS

  1. மனைவியிடம் தோற்பது என்பது வாழ்க்கையின் வெற்றிக்கு அடையாளம். நமக்காக நம் குடும்பத்திற்காக தன் சொந்த பந்தங்களையெல்லாம் விட்டு வந்த மனைவி என்னும் தியாகியிடம் தினமும் பாராட்டி ஆசையாக நான்கு வார்த்தை பேசுவதில் ஒன்றும் தவறில்லை.
    எம்.இராஜேந்திரன், லால்குடி.

  2. ‘ஒருவார்த்தை’ அறிவுரை அருமை. ‘ லோகேஷ் அப்பா கதையும் சிந்திக்க வைத்து விட்டது.

  3. மனைவியை மதித்தால் பெற்றோர்கள் மற்றும் சகோதரிகள் பொண்டாட்டி தாசன் என்று தவறாக நினைத்துக்கொள்வார்கள் என்று பயந்து மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ள தயங்கும் மனப்பான்மை கொண்ட ஆண்கள் அதிகம்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

“டர்ர..டர்ர்... டர்ர...” டெலிப்ரின்டரில் செய்திகள் மடிந்து மடிந்து சீராக விழும். அதை வாகாகக் கிழித்து, எடிட்டோரியல் டெஸ்க்கில் உள்ளவர்களுக்குப் பங்கிட்டுத் தருவார்கள். ஆங்கிலத்தில் இருக்கும். அந்தச் செய்திகளைத் தமிழ்ப்படுத்திச் சுடச்சுட முந்தித் தருவது எங்கள்...

ஒரு வார்த்தை!

என்னுடைய உறவினர் ஒருவர் மும்பையிலிருந்து எங்க வீட்டுக்கு வந்திருந்தார். எழுபத்தைந்து வயதைக் கடந்திருந்த அவருக்கு இலேசாகத் தலைச்சுற்றல் வரவே, “ரத்த அழுத்தப் பரிசோதனை செஞ்சுக்கறேன்” என்றார். நானும் அவசரத்துக்கு அருகில் இருந்த எம்.பி.பி.எஸ்....

ஒரு வார்த்தை!

கேரளா, தமிழ்நாடு, ஆந்திரான்னு... (லாட்டரிச் சீட்டு இல்லீங்க.... இது வேற மேட்டர். கொஞ்சம் சீரியஸ்!) தினசரி நம்பப் பொண்ணுங்க தில்லா, எப்படியோ நியூஸைப் பிடிச்சுடறாங்கப்பா! ************** கேரளாவில் சமீபத்துல நடந்த கூத்து இது. கல்யாண...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

2
 ஆன்மிகம்! ஆண்கள் மட்டுமே வழிபடும் அம்மன்! கரூரிலிருந்து சின்னதாராபுரம் வழியாக 40 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய திருமங்கலம் அருங்கரை அம்மன் கோயிலில் பெண்களுக்கு அனுமதியில்லை. ஆண்கள் மட்டுமே செல்ல முடியும். இங்கு விநாயகருக்கு மட்டுமே...

கவிதைத் தூறல்!

1
கொரானா போனது,  கோவில்கள்  திறந்தது! ஏலேலோ ஐலசா … ஏலேவோ ஐலசா… ஏலேலோ  ஐலசா… ஏலேலோ ஐலசா … கோவில் நடை திறந்தாச்சு, சக்தியம்மன் வந்தாச்சு, சன்னதியில்  கூட்டம்  நிறைஞ்சாச்சு, சந்தோசமாய் மக்கள் கும்பிட்டாச்சு. ஏலேலோ ஐலசா… ஏலேலோ  ஐலசா… - கிரிஜா ராகவன் —---------------------------- வெறுப்பு  ஜொலிக்கும் முழு...