
ஆலமரம் பெரிதும் மருத்துவப் பயனுடைய மரம். தனித்தும் மருந்துகளோடு இணைந்தும் செயல்படும். இலை, பூ, பால், பழம், மர பட்டை, விழுது, வேர் என முழு மரமும் மருத்துவப் பயனுடையது.
மூன்று இலைகளை வாயில்
போட்டு மெல்லவும். வாய்ப்புண்,
வாய் நாற்றம் மாற்றம் அடையும்.
ஆலை இலையைப் பற்பொடியில் சேர்க்கலாம்.
இலையை அரைத்து, உடல்
முழுவதும் தடவிக் குளித்தால்
உடல்எரிவும், அரிப்பும் நீங்கும்.
தேமல் நோயும் குணமாகும்.
ஆல இலையை லேசாக வதக்கி
கட்டிகளின் மேல் வைத்துக்கட்ட
கட்டிகள் உடைந்து குணமாகும்.
மூன்று நாட்கள் கட்ட வேண்டும்.
ஆலம் பழுப்பை கரி அடுப்பில் சுட்டுப் பொடியாக்கி, நல்லெண்ணெயில் குழைத்து, உடல் முழுவதும் தடவி பத்து நிமிடங்கள் கழித்து, அரப்பு தேய்த்துக் குளிக்கவும். இதனால் கரப்பான் நோய் குணமாகும்.
ஆலம்பாலை காலைப் பொழுதில் எழுந்து ஆடும் பற்களின் இடையில் வைக்கலாம். வாயில் போட்டு அடக்கி வைக்க பல்லாட்டம் நிற்கும். ஆலம்பாலை வெயிலில் உலர்த்தி பற்பொடியில் சேர்க்கலாம்.
ஆலம்பால் ஒரு ஸ்பூன் ஒரு தம்ளர் பாலுடன் கலந்து காய்ச்சி சிறிது தேன் விட்டு அருந்தி வர உடல் வலுவடையும். தொடர்ந்து 40 நாட்களுக்கு அருந்த வேண்டும். வயதானவர்கள்கூட அருந்தி வரலாம். வெள்ளை நோயால் பாதிக்கப்பட்டு இளைத்த பெண்களும் அருந்தி வரலாம். மாலை 6 மணி அளவில் அருந்தி வருவதே நல்லதாகும். இரவு உணவுக்குப் பிறகு அருந்துவது பலருக்கு ஒத்துக்கொள்ளாது பேதி ஆவதுண்டு.
ஆலம் விதையை நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவேண்டும். பாலைக் காய்ச்சி இறக்கி ஒரு தேக்கரண்டி தூளைப் போட்டு மூடி வைத்திருந்து ஆறியபின் அருந்த வேண்டும். இரவு உணவுக்குப் பின்னர் அருந்துவதே முறையாகும். ஒரு சிலருக்கு பேதி கூடுதலாக ஏற்பட்டால், பாலில் கலக்கும் இடித்த விதையின் அளவைக் குறைத்துக்கொள்ளவும். மலக்கட்டுள்ள நாட்களில் மட்டும் பயன்படுத்துவது நல்லது.
பற்பொடியிலும், லேகியங்களிலும் தைலங்களிலும் சேர்க்கப்படுகிறது. பட்டையை இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, இறக்கி ஆறவிட்டு, வாய் கொப்பளித்து வர, வாய்ப்புண் குணமடையும்.
ஆலம் பட்டையைப் பச்சையாக இடித்து சிறிதளவு எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்டவைத்து, ஆறவிட்டு காலை உணவுக்கு முன் அருந்தவும். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு அருந்தி வர நீரிழிவு நோய் குணமாகும்.
ஆலவேரின் பட்டையைப் பச்சையாக எடுத்து, பஞ்சு போல் தட்டி அந்தத் தூளை சிறிதளவு எடுத்து, ஒரு தம்ளர் கொதிக்கவைத்த பாலில் போட்டு மூடி வைத்திருந்து ஆறியதும் அருந்தவும். தொடர்ந்து இருபது நாட்கள் அருந்தி வர நாட்பட்ட வெள்ளை நோய் குணமாகும். உடல் வலுவடையும்.
பாலில் அவித்து பாலை நீக்கி உண்ண வயிறு சுத்தமாகும். உடல் எரிவும், பித்தமும் தணியும். காலைப் பொழுதில் மூன்று ஆலம் பழமும், சிறிது தேனும் கலந்து உண்டு வர உடல் வலுவடையும்.
பற்பொடியிலும், லேகிய மருந்து, தேங்காய் எண்ணெய், மற்றும் தைல மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது.
வாவியுரை நீரும் வடநிழலும் பாகி வகழும்
ஏவனைய கண்ணார் இள முவையும்
மென் செய்த காலத்து வெம்மை தரும்
வெம்மை தனில் இன்பாரும் சீதள மாமே.
என்பது பழைய பாடல். ஆலின் நிழல், மழை, பனி நாட்களில் சூடாகவும், வெயில் காலத்தில் குளிராகவும் இருக்குமாம். ஆலமரம் கற்ப மரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆலின் நிழல் தலைச்சூட்டையும், உடம்புச் சூட்டையும் தணிக்க வல்லது.