
– வெங்கடராமன் ராமசுப்ரமணியன்
பழக்கங்கள் எப்படி உருவாகின்றன;
பழக்கங்கள் ஒரு மனிதனை எழவைக்கவோ, விழவைக்கவோ எப்படி செய்கின்றன; எவ்வாறு நல்ல பழக்கங்களைக் கட்டமைப்பது; எவ்வாறு கெட்டப் பழக்கங்களை விட்டொழிப்பது என்பதை மிகவும் அழகாக தனது 'அடாமிக் ஹாபிட்ஸ்' (Atomic Habits) என்ற புத்தகத்தில் ஜேம்ஸ் க்ளியர்(james clear) விளக்குகிறார். இந்தப் புத்தகம் லட்சக்கணக்கில் விற்று, சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இது தமிழிலும் நாகலட்சுமி சண்முகம் அவர்களால் 'சின்னஞ்சிறு பழக்கங்கள்' என்று அருமையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பழக்கங்களின் கூட்டு விளைவே மனிதன்;
சின்னஞ்சிறிய பழக்கங்கள் ஒன்றுசேர்ந்து கூட்டு விளைவில் தனி மனித வாழ்க்கையில் பிரம்மாண்ட விளைவைக் கொடுக்கின்றன. நல்ல பழக்கங்கள் நேரத்தை மனிதனுக்கு நண்பனாக்குகின்றன. கெட்டப் பழக்கங்கள் நேரத்தை மனிதனுக்கு எதிரியாக்குகின்றன.
பழக்கங்கள் நான்கு படிகளைக் கொண்ட பின்னூட்ட சுழற்சியை (feedback loop) கொண்டுள்ளன:
1.அறிகுறி (cue),
2. விருப்பம்(desire),
3. பதில்வினை(respond),
4. வெகுமதி (reward)
உதாரணமாக, ஒருவருக்கு பசிக்கிறது என்றால், வயிற்றில் பசி உணர்வு ஏற்படுகிறது. இது பசிக்கான அறிகுறி. உணவை உண்ணவேண்டும் என்கிற விருப்பம் உண்டாகிறது. உணவை உண்டு, அந்த விருப்பத்தை பூர்த்தி செய்கிறார். வயிற்றுப் பசி ஆறுவதால், அமைதியான உணர்வைப் பெறுகிறார். இது அவருக்கு கிடைத்த வெகுமதி. இவ்வாறு பழக்கம் தொடர்கிறது.
உதாரணமாக, ஒருவர், தினமும் சரியாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று எண்ணுகிறார் என்று கொள்வோம். அவருக்குச் சரியாக தண்ணீர் குடிக்கும் பழக்கமில்லை. இந்த நல்லப் பழக்கத்தினைக் கட்டமைக்க நினைக்கிறார். படிப்படியாகப் பார்ப்போம்.
இந்த விதிகள், நல்லப் பழக்கத்தினை உருவாக்கும் விதிகளுக்கு, முற்றிலும் எதிர்புறத்தில்(inverse) அமைந்துள்ளன.
அந்தப் பழக்கம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கவேண்டும் (make it invisible)
அந்தப் பழக்கம் வசீகரமற்றதாக இருக்கவேண்டும்.(make it unattractive)
அந்தப் பழக்கம் கடினமானதாக இருக்கவேண்டும். (make it difficult)
அந்தப் பழக்கம் மனதிற்கு நிறைவு அளிக்காததாக இருக்கவேண்டும். (make it unsatisfying)
உதாரணமாக, ஒருவர் அடிக்கடி கைப்பேசியைப் பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார். சமூக வளைதளங்களுக்குச் செல்வது, பல்வேறு செயலிகளைப் பயன்படுத்துவது என்று அவரது நேரம் வீணாகிறது. அவர் இந்தக் கெட்டப் பழக்கத்தினை ஒழிக்க எண்ணுகிறார். படிப்படியாகப் பார்ப்போம்.
ஒருவருக்குப் பாட்டு கேட்பது பிடித்த விஷயமாக இருந்தால், நடைபயிற்சி செய்தால்தான், பாட்டு கேட்பேன் என்று நடைப்பயிற்சி பழக்கத்தினை, பாட்டு கேட்கும் பழக்கத்துடன் இணைத்தால், நடைப்பயிற்சி என்ற நல்ல பழக்கத்தினை உருவாக்க முடியும்.
ஒரு நல்ல பழக்கத்தினைத் தனியாக செய்வதைவிட, அதனைச் செய்யும் ஒரு குழுவுடன் இணையும்போது, எல்லாருடனும் சேர்ந்து செய்யும்போது, அது எளிதாகிறது. உடற்பயிற்சி தனியாகச் செய்வதைவிட, உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று, அங்கு பலருடன் செய்யும்போது, அது இன்னும் எளிதாகிறது.
நல்ல பழக்கத்தினைச் செய்தபின்னர், அதை செய்ததற்காக, நமக்கு வெகுமதி உடனே அளித்துக் கொள்வது. தினமும் செய்தித்தாள் படிப்பது பிடித்த விஷயமாக இருக்கலாம். நடைப்பயிற்சி முடித்தால்தான், செய்தித்தாள் படிக்க வேண்டும் என்ற வெகுமதியைக் கொண்டுவந்தால், நடைப்பயிற்சி செய்வது எளிதாகிவிடும்.
ஒரு நல்ல பழக்கத்தினைத் தொடங்குவதைக் கடினமாக வைக்காமல், முதல்
2 நிமிடத்தை எளிதாக்குவது, அதனைத் தொடர்ந்து செய்வதை எளிதாக்குகிறது. நடைப்பயிற்சி செய்ய, ஷூ அணிந்துகொண்டு, நடக்கத் தொடங்குவது. ஷூ அணிவது என்பது 2 நிமிடத்தில் செய்து முடித்தவுடன், நடைப்பயிற்சியினைச் செய்வது எளிதாகிறது.