0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்!

மேடம், ‘அக்னிபாத் திட்டம்’ என்றால் என்ன? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

– வி. கலைமதி சிவகுரு, நாகர்கோவில்

து ‘அக்னிபாத்’ அல்ல! அக்னிபத்! ‘அக்னிப்பாதை’ என்று பொருள், கலைமதி!

“17.5 முதல் 23 வயதுக்கு உட்பட்ட முக்கியமான பருவத்தில், இந்தியப் பாதுகாப்புப் படைகளின் பயிற்சியை ஊதியத்துடன் பெறுவதற்கான அரிய வாய்ப்பு இது. தேசப்பற்றும் வீரமும் மிக்க ஒழுக்கமான தலைமுறையை உருவாக்கும் நல்ல திட்டம்” என்று மத்திய அரசு சொல்கிறது.

இராணுவச் செலவைக் குறைக்கவும், மேன்-பவரை அதிகரிக்கவும் உதவும் இந்தத் திட்டம் நல்ல யுக்திதான் என்று பலரும் பாராட்டுகிறார்கள்.

“இல்லை. பா.ஜனதாவுக்கென சொந்தமாக ஓர் ஆயுதப்படையை உருவாக்க முயற்சி நடக்கிறது. 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு ‘அக்னி வீரர்’கள் என்ன செய்வார்கள்?” என எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

என்னைப் பொறுத்தவரை, யாரும், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை!
10, 12 வகுப்புகளுக்குப் பிறகு மேற்படிப்பு படிக்க வசதியில்லாத, குடும்பத்துக்கு பாரமாக இருக்க விரும்பாத, துடிப்பான மாணவர்கள் இதில் சேரலாம்.

ஸோ, புடிச்சா போங்க! இல்லியா? மொபைல்ல வீடியோ, ‘டிக்டாக்’னு டைம்பாஸ் பண்ணுங்க! ஆனா, ப்ளீஸ் எதுவுமே தெரியாம, பஸ், ரயிலுன்னு எரிக்கப் போகாதீங்கடா தம்பிகளா? இங்க எல்லாமே அரசியல்! சூட்சமம் தெரிஞ்சுக்குங்க!”

———————————

“ரஜினியுடன் சேர்ந்து நடிக்க ரெடி” என்கிறாரே கமல்ஹாசன்?

– கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படம் வெளிவந்த சமயம், கமல், ரஜினியைச் சந்தித்தாராம்!

“உங்களுக்கு என தனி மார்க்கெட் வந்துவிட்டது; அதனால் இனி இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம்!” என்று கமல் அறிவுரை சொன்னதால், அதன்படியே தான் செயல்பட்டதாக பலமுறை, பல மேடைகளில் ரஜினிகாந்த்தே சொல்லியிருக்கிறார்.

இப்போது கமலே எதிர்பாராதபடி, ‘விக்ரம்’ தடபுடல் செய்து விட்டதால், அந்த உற்சாகத்தில் ரஜினியுடன் கை கோர்க்க விரும்புகிறார் போல… அதுகூட பரவாயில்லை… ஆனால், “தளபதி ஐயா, மனசு வெச்சா…” என்று நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்ததுதான் கடுப்ஸ் கலந்த எரிச்சல்!

நடிகர் விஜய் இவருக்குத் தளபதியாம்… அதுவும் ஐயாவாம்! அவ்ளோ குனியணுமா கமல் ஸார்?

———————————

ந்த உலகத்தில், இப்போது எல்லாமே தலைகீழாக நடக்கிறதே?

– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்

புத்தகம் அமைதியாக இருக்கும்…

படித்தவன் ஆட்டம் போடுவான்!

பாட்டில் அமைதியாக இருக்கும்…

குடித்தவன் ஆட்டம் போடுவான்!

பிணம் அமைதியாக இருக்கும்…

தூக்கிச் செல்பவன் ஆட்டம் போடுவான்…

ஏன்… உங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி ஓர் உவமைச் சொல்றேன்! முன்னெல்லாம் ஆட்டுக்கல் சும்மா இருக்கும்… குழவி, சுற்றிச் சுற்றி வந்து அரைக்கும்… இப்ப, கிரைண்டர்ல ட்ரம் சுத்துது… குழவி ‘சும்மா’ இருக்குது…”

கல்யாணங்கள்ல, பொண்ணு அமைதியா இருக்கும். மாப்பிள்ளை குஷியா இருப்பான். இப்ப மணப்பெண், டான்ஸ் ஆட, மணமகன் ‘டை’ கட்டி, ‘கை’ கட்டி ஒரமாக நிற்கிறான்! முன்னெல்லாம் பள்ளிகள்ல, மாணவர்கள் அமைதியா இருப்பாங்க… வாத்தியார்கள் ‘சவுண்டு’ கொடுப்பார்கள். இப்ப, வாத்தியார்கள் பயந்து நிற்க, மாணவர்கள் அலப்பறை செய்கிறார்கள்.

காலம், கலிகாலம் ஆகிப் போச்சும்மா!
ஈனோ சால்ட் குடிச்ச ஜீரணம் பண்ணுங்கம்மா!

———————————

கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் வங்கிகளில் ஒரு ரூபாய் மதிப்புள்ள பால் பாயிண்ட் பேனாவை twine நூலால் கட்டி வைத்திருப்பது எதைக் காட்டுகிறது?!!

-பானுமதி ரங்கசாமி, திருச்சி

து நமது மக்களின் திருட்டு புத்தியைக் காட்டுகிறது…அல்லது வங்கிகள் நம் மீது வைத்திருக்கும் அவ நம்பிக்கையைக் காட்டுகிறது  என்று தானே நினைக்கறிங்க?!!

யூ ஆர் ராங் madam..

மகாலட்சுமிய அதாவது வங்கிப் பணத்தை யார் வேணும்னாலும் திருடலாம்.. ஆட்டயப் போடலாம்.

ஆனா… சரஸ்வதி அதாவது பேனா… தானா விரும்பி வந்தால்தான் உண்டு.

அதைத்தான் சொல்லாமல் சொல்றாங்க.

சோ…மக்களே…உங்க பிள்ளைகளுக்கு நிறைய பணத்தை விட்டுட்டுப் போகாம, அவங்களுக்கு கல்விய கொடுங்க.

இந்த பாடத்தைதான் இத்தனை வருஷமா வங்கிகள் நமக்கு சொல்லி கிட்டு இருக்கு.

இது புரியாம… அவங்களை தப்பா இல்ல நினைச்சு கிட்டு இருக்கோம்..?!!

(பேங்க் போகும் போது  மறக்காம பேனா எடுத்து செல்வோர் சங்கத்தின் சார்பாக நன்றி.. ஹி… ஹி…)

4 COMMENTS

 1. என்னுடைய கேள்விக்கு பதில் தந்து அ னைத்தையும் விலாவாரியாக புரிய வைத்த
  அன்பு மேடத்திற்கு மிகுந்த நன்றி.வாழ்க வளமுடன்

 2. அனைத்து பதில்களுமே பழையதையும்,
  புதியதையும் நன்றாக யோசிக்க வைத்து
  விட்டது.super

 3. கேள்வி சூடாக இருந்தால் அதற்கு சாந்தம் தரும் பதில். கேள்வி நக்கலாக இருந்தால் அதற்கு நாசூக்கான பதில். சந்தேகமான கேள்விக்கு அறிவுப்பூர்வமான பதில். இதுதான் அனு மேடத்தின் ஸ்டெல்(style).
  ஆர்.வித்யா சதீஷ்குமார்,
  பள்ளிக்கரணை.

 4. அனுவின் பதில்கள் அனைத்தும் “அணுஅணுவாய் “ரசிக்க வைத்தது.குறிப்பாக வாசகிகள் ராஜம்,பானுமதி ரங்கசாமி அவர்களின் கேள்விக்கு அனுவின் பதில்கள் “அசத்தல்”

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

‘செஸ்’ விளையாடத் தெரியுமா மேடம்? - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி செஸ்ஸா? யாராவது அறிவு ஜீவிங்க விளையாடட்டும்! நாம்ப ஜஸ்ட் ரசிக்கலாம்! பொறுமையைச் சோதிக்கும் இந்த விளையாட்டில் எந்த ஆர்வமுமில்லை! ஆனா... ஓரளவு புரியும்! அப்புறம்,...

அன்புவட்டம்!

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றி... - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி பெரிய பெருமைதான் கெஜலட்சுமி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நம்ப சென்னை செஸ் ஒலிம்பியாட். செஸ் ஒலிம்பியாட்டை நடத்தணுங்கிற...

அன்புவட்டம்!

தாலியைக் கழற்றி வைத்து மனைவி செய்த துன்புறுத்தலால் கணவருக்கு விவாகரத்து வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதே! - வாணி வெங்கடேஷ், சென்னை இப்போதெல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆனதுமே, பல நாகரிகப் பெண்கள் போடும் முதல் கண்டிஷனே...

அன்புவட்டம்!

 இளையராஜாவின் எம்.பி. பதவி சர்ச்சைக்குள்ளானதே! - கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி நான் பத்தாவது படிக்கும்போது, வயல் வரப்புகளில் உட்கார்ந்து தேர்வுகளுக்குத் தயாராவது வழக்கம். கால்களின் அடியே ஜில்லென்ற ஏற்றம் பாய்த்த நீர் பாய்ந்துகொண்டிருக்கும். அப்போது நெல்,...

அன்புவட்டம்!

“பயணிகளுக்கு எச்சில் தொட்டு பஸ் டிக்கெட்டுகளைக் கொடுக்கக்கூடாது” என்று பஸ் கண்டக்டர்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளதே! - வாணி வெங்கடேஷ், சென்னை எச்சில் மட்டுமா? எங்க ஊர் கண்டக்டர்களை வந்துப் பாருங்க வாணி! நெற்றி, கழுத்துல...