0,00 INR

No products in the cart.

அவள் பெயர் காளி!

-ராஜி ரகுநாதன்
ஓவியம்: தமிழ்

 

எங்கும் நிறைந்தவள் பெண்!

ண்டைக்காலத்தில் நம் பாரத தேசத்தில் பல பெண்மணிகள் வேத மந்திரங்களைக் கண்டறிந்த ‘மந்திர த்ரஷ்டர்’களாக இருந்தார்கள். புராண காலப் பெண்களுக்கு கல்வியறிவும் அரசாளும் உரிமையும் நிராகரிக்கப்படவில்லை. ஆண்களுக்குச் சமமாக, இன்னும் மேலாகக் கூட மதிப்பையும் கௌரவத்தையும் வீட்டிலும் சமுதாயத்திலும் பெற்று தம் பங்கு சேவையை அளித்தார்கள்.

ஜனக மகாராஜா நடத்திய அறிஞர் மாநாட்டில் தத்துவவாதியான கார்கி என்ற பெண்மணி யாக்யவல்கிய முனிவரைக் கேள்வி கேட்டாள். அக்காலத்தில் அரச சபையில் அறிஞர்களும் வேத பண்டிதர்களும் நிறைந்த யாக சாலையில் கேள்வி கேட்கும் துணிச்சலும் உரிமையும் பெண்களுக்கு இருந்தது. யாரும் அதனை எதிர்க்கவில்லை. விந்தையாகப் பார்க்கவும் இல்லை. அக்காலத்தில் பெண்கள் அனைத்துக் கலைகளிலும் திறமை பெற்றிருந்தனர். அரசர் முதல் அறிஞர் வரை அனைவரும் மகளிரை கௌரவித்ததும் விருதளித்ததும் அதிசயமாக பார்க்கப்படவில்லை.

அவ்வையார் சேர சோழ பாண்டிய அரசர்களின் மாபெரும் சபையில் இடம் பெற்றிருந்ததோடு அவர்களை கேள்வி கேட்கும் அதிகாரமும் பெற்றிருந்தாள். அவர்களோடு அவ்வையாருக்கு இருந்த நட்பினால் அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த அவளால் முடிந்தது.

தற்போது விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்வது போன்ற முறையே குருகுலங்களில் வேதக் கல்வி கற்பதற்கும் இருந்தது. அவ்வாறு சென்ற ஒரு சிறுவனுக்கு தந்தை பெயர் தெரியவில்லை. ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு சிறுவன் தயங்காமல் பதியளித்தான். “என் தாயார் பெயர் ஜாபாலா. இதனை மட்டுமே என் தாய் சொல்லச் சொன்னாள்” என்றான். “உண்மையைப் பேசுவதற்கு தைரியம் வேண்டும். வேத மாணவனுக்கு சத்தியமே அடைக்கலம். இன்று முதல் நீ ‘சத்தியகாம ஜாபாலி’ என்று அழைக்கப்படுவாய். இதன் பெருள் ‘உண்மையின் மேல் விருப்பம் கொண்டவன்’ என்பது” என்று கூறி அவனை குருகுலத்தில் சேர்த்துக்கொண்டார் ஆசிரியர்.

கம்பீரமும் பெருமையும் நிரம்பியவர்களாக புராண இதிகாசங்களில் பெண்கள் வர்ணிக்கப்படுகிறார்கள். திரௌபதியை அரச சபையில் அவமதித்த போது அவள் கேட்ட கேள்விகளுக்கு யாராலும் பதில் அளிக்க முடியவில்லை. திரௌபதி மிகச் சிறந்த இல்லாள். தீயிலிருந்து தோன்றியவள். தீயைப் போன்ற புத்திகூர்மையும், துணிச்சலும் தவமும் நிறைந்தவள்.

பாண்டிய அரசன் நெடுஞ்செழியனின் சபையில் கண்ணகி அதே போல் கேள்வி கேட்டாள். தன் கோபாக்னியால் மதுரையை எரித்தழித்தாள். இந்த விவரங்களை இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் காவியத்தில் விவரிக்கிறார். திரௌபதி, கண்ணகி இருவரும் மிகப் பெரும் தெய்வங்களாக வழிபடப்படுகிறார்கள். இவர்களுக்கு கோவில்களும் நித்திய பூஜைகளும் நடக்கின்றன.

சீதா தேவியும் ராவணனிடம், “என் கோபத் தீயால் உன்னைச் சாம்பலாக்க  என்னால் முடியும்.. என் கணவன் ஸ்ரீராமனின் பாணத்தால் நீ தண்டிக்கப்பட வேண்டும் என்பதால் நான் பொறுமையாக இருக்கிறேன்” என்கிறாள்.

இப்படிப்பட்ட மகளிர் குல மாணிக்கங்கள் பலப்பலர்.

“அகல்யா, திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி ததா !

பஞ்ச கன்யாம் ஸ்மரேன்னித்யம் சர்வ பாப வினாசனம் !!”

என்று போற்றுகிறோம். அதாவது இவர்களின் பெயரை காலையில் நினைத்தாலே நம் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

இவர்களின் வாழ்க்கையை சிந்தித்துப் பார்த்தால் இந்த பெண்களின் புகழும் புத்திகூர்மையும் நம்மை வியக்க வைக்கின்றன. அனுசூயா, ருக்மிணி, தயமந்தி, நளாயினி, குந்தி, காந்தாரி, சகுந்தலா, மதாலசா, கார்கி, மைத்ரேயி, காத்யாயணி, லோபாமுத்ரா, சாவித்திரி, அருந்ததி போன்ற பெண்களை நினைத்தாலே நமக்கு தைரியமும் புண்ணியமும் கிடைக்கிறது.

தமக்கென்று விதிக்கப் பெற்ற சுயதர்மத்தை கடைபிடித்தாலே போதும் மிக உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்று நிரூபித்த பெண்களின் வரலாறுகள் எத்தனையோ உள்ளன நம் பாரத தேசத்தில்.

இல்லாளின் பெருமை!

ழைத்துச் சோர்ந்து போய் வீட்டுக்கு வரும் கணவனுக்கு அமைதியையும், சுகத்தையும் அளிப்பவள் மனைவி. மனைவி கணவனுக்கு என்ன சேவை செய்கிறாளோ அதற்கேற்ற பாத்திரத்தை வகிக்கிறாள். பாசத்தோடு அன்னமிடும் போது தாயாக, அறிவுரை கூறும் போது தோழியாக, சுகமளிக்கும் போது காதலியாக… இவ்வாறு கணவனுக்கு தேவையான அனைத்து சௌகர்யங்களையும் அளித்து தம் கடமையான சுய தர்மத்தைக் காப்பதில் பெண்ணினம் என்றுமே பின்வாங்கியதில்லை.

கௌசிக முனிவர் என்ற சித்தர் தீவிரமான தவ நிஷ்டையில் இருந்த போது ஆகாயத்தில் பறந்த ஒரு கொக்கின் எச்சம் கௌசிகரின் மேல் விழுந்தது. தவ நிஷ்டைக்கு பங்கம் நேர்ந்தது. கொக்கை கோபத்தோடு முறைத்து அண்ணாந்து பார்த்தார் கௌசிகர். அது எரிந்து சாம்பாலானது. நீண்ட நேரம் தவத்தில் அமர்ந்திருந்ததால் அவருக்குப் பசித்தது. எழுந்து சென்று ஒரு வீட்டின் முன் நின்று உணவு யாசித்தார். அந்த வீட்டின் இல்லாள் அப்போது கணவனின் சேவையில் இருந்தாள். கணவனுக்கு உணவு படைத்து விட்டு பின்னர் வந்து கௌசிகருக்கு பிச்சை இட்டாள். அவள் செய்த தாமதத்தைப் பொறுக்காத கௌசிகர் சிவந்த கண்களால் கோபத்தோடு பார்த்தார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாத அந்த பெண்மணி புன்னகையோடு, “என்னை கொக்கென்று நினைத்தாயா கௌசிகா?” என்றாள். அந்த முனிவர் வெட்கத்தால் தலை குனிந்தார். இவ்விதம் தம் கடைமையைச் செய்ததாலேயே கடுந்தவத்தால் அடையக் கூடிய மகிமைகளை பெண்கள் பெற்றிருந்தனர்.

அருந்ததி புராணங்களில் வசிஷ்ட முனிவரின் மனைவியாகவும் மகா பதிவிரதையாகவும் போற்றப்படுகிறாள். திருமணங்களில் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கச் செய்வது ஒரு முக்கிய சம்பிரதாயமாக உள்ளது. இது சப்த ரிஷி மண்டலத்தில் இருக்கும் ஒரு சிறிய நட்சத்திரம்.

லலிதா சஹாஸ்ர நாமம் கேட்டறிய வேண்டுமென்று விரும்பிய அகஸ்திய முனிவர் ஹயக்ரீவ சுவாமியைப் பணிந்து வேண்டினார். ஒரு கணம் ஆலோசித்த ஹயக்ரீவர், “லோபாமுத்திரையின் கணவரே! அகஸ்தியா!” என்று அழைத்தார். லோபாமுத்திரை லலிதா தேவியின் சிறந்த பக்தை. லலிதா சஹாஸ்ர நாமத்திலும், கட்கமாலா சுலோகத்திலும் இந்த இல்லாளின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதிலுருந்தே இவள் பெருமையை அறிந்து கொள்ளாலாம். “நீ லோபாமுத்திரையின் கணவன் என்பதால் உனக்கு லலிதா சஹஸ்ரநாமம் போதிக்கிறேன்” என்கிறார் ஹயக்ரீவர் அகஸ்தியரிடம்.

இறைவன் எல்லா இடங்களிலும் பௌதிகமாக இருப்பது சாத்தியமில்லை என்பதால் பெண்களை படைத்தான். தாய்மார்கள் தம் புதல்வர்களுக்கு மிகச் சிறந்த அறிவை அளிப்பதில் என்றுமே முன்னிற்கிறார்கள். இதற்கு மார்கண்டேய புராணம் விவரிக்கும் ராணி மதாலசா, துருவனின் தாய் சுநீதி, லட்சுமணனின் தாய் சுமித்ரா, காந்திஜியின் தாய் புத்திலிபாய், சிவாஜியின் தாய் ஜீஜாபாய்  போன்றோரை சிறந்த உதாரணங்களாகக் கொள்ளலாம்.

காதலின் உயர்வு!

ண்மையான காதல் உயிரைக் கொடுக்குமே தவிர எடுக்காது. கணவனின் உயிரை மீட்பதற்காக யமனைப் பின்தொடர்ந்த சாவித்திரியை நாமறிவோம். அண்மைக் காலங்களில் காதல் கதைகளையும் காதலுக்காக செய்யும் கொலைகளையும் தற்கொலைகளையும் கேள்விப்படுகிறோம்.

ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலிக்காக தன் ஆயுளில் பாதியைக் கொடுத்த காதல் கதையை மகாபாரதத்தில் ஆதிபர்வம் விவரிக்கிறது. காதலின் இனிமையையும் பிரிவின் துயரையும் தியாகத்தின் பெருமையையும் அது அளிக்கும் மகிழ்வையும் ‘ருரு, ப்ரமத்வரா’ கதை மூலம் மிக அழகாக விவரிக்கிறது மஹாபாரதம்.

காட்சிகளால் ஆபத்து!

காதல் மொழி பேசி அசடு வழியும் ஆண்கள் சிலர் அதனை மறுக்கும் பெண்கள் மீது அமிலம் ஊற்றுவேன் என்று கிளம்பியிருக்கும் காலமாக இது உள்ளது. மனித உருவில் வந்த அரக்கர்களால் பெண்களுக்கு நேரும் ஆபத்துகள் கொஞ்சநஞ்சமல்ல! அவற்றை ஊக்கப்படுத்தும் விதமாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வக்கிர மனம் கொண்டவர்கள் உருவாகி உள்ளனர். பாலியல் வன்முறை, காமம், பலாத்காரம் போன்றவை எளிதாக அனைவருக்கும் கிடைக்கும் ஒரு துயரமான நிலையில் உலகம் உள்ளது. இது போன்ற ஒரு காட்சியை ஒரு பூங்காவில் பார்த்து அஜாமிளன் என்ற இளைஞன் கெட்டழிந்தான் என்று பாகவதம் விவரிக்கிறது. தற்காலத்திலும் மின்னணு சாதனங்கள் மூலம் பார்க்கக் கூடாதவற்றைப் பார்த்து சீரழியும் இப்படிப்பட்ட அஜாமிளர்கள் உருவாகி வருகிறார்கள்.

பெண்கள் எதிர்கொள்ளும் அநீதிகள்!

சிறிது காலம் முன்வரை பெண்கள் தம் உரிமைகளுக்காக போராடுவதும், தம் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை எதிர்ப்பதும் அதிகம் பார்க்க நேர்ந்தது. ஆனால் அண்மையில் மகளிர் மீது மட்டுமின்றி மாணவிகள், சிறு குழந்தைகள் மீதும் நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் கேளிக்கைக்காக நடத்தும் பொழுதுபோக்காக மாறிவருகின்றன என்பது வருத்தமளிக்கும் செய்தி. இது போன்ற சூழலில் இளைய தலைமுறையின் இதயத்தில் அன்பு, இரக்கம், மரியாதை போன்ற நற்குணங்கள் எவ்வாறு வளரும்?

பெண்களை தேவதைகளாக நினைத்து கௌரவித்த தேசம் நம் பாரத தேசம். குழந்தைகளை சின்னக் கண்ணனாகவும், லட்சுமி தேவியாகவும் கொஞ்சி முத்தமிட்டு வளர்த்தனர் பெற்றோர். ஆனால் கள்ளம் கபடமின்றி விளையாடிய  குழந்தைப் பருவத்தை பிள்ளைகள் இழந்து வருகிறார்கள். பெற்றோரின் பொறுப்பும் கடினமாகி வருகிறது. சிறுவர் சிறுமிகளின் நடத்தையை மிக கவனமாக கண்காணிக்க வேண்டி வருகிறது.

பாவம், புண்ணியம், தர்மம், அதர்மம் போன்ற சொற்களை மூட நம்பிக்கைகளாக ஒதுக்கியதன் பரிணாமமே இப்போது நாம் பார்க்கும் வன்முறை நிறைந்த உலகம். தான் செய்வது தவறு என்று தெரியாமல் மது, போதை மருந்துகள் போன்றவற்றின் தாக்கத்தால் இளைய தலைமுறை கெட்டழிகிறது. விவேகம், திட மனது போன்றவை இன்றி அல்லலுக்கு ஆளாகிறது.

யாதுமாகி நிற்கும் பெண் ‘காளி’ என்பதை ஒரு முறை சிந்தனை செய்ய வேண்டிய கடைமை உள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன் தமிழ் தெலுங்கு இரு மொழி இலக்கிய உலகிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருதும் தினசரி டாட்காம் வழங்கிய தெய்வத் தமிழர் விருதும் பெற்றுள்ளார். இது நம் சனாதனதர்மம் என்ற நூலும் மேடம் கதைகள், பால்டம்ளர் என்ற சிறுகதைத் தொகுப்புகளும் இவருடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. தெலுங்கில் இவருடைய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி விரிவுரை நூலை ருஷிபீடம் பதிப்பகம் சிறப்பாக வெளியீட்டது. தாய்மண்ணே வணக்கம் என்ற சிறுகதை மங்கையர்மலர் போட்டியில் பரிசு பெற்றதை பெருமையாக நினைக்கிறார்.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...