0,00 INR

No products in the cart.

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக உள்ள வழக்கம். நீதிபதிகள் வரும்போது முன் செல்லும் தபேதார்கள், வழியில் கூட்ட நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்தி தருவர். கோர்ட் வளாகத்திற்குள் நீதிபதி எந்தப் பணியில் ஈடுபட்டாலும், அவர் செல்லும்போது இந்த தபேதார் நீதிபதிக்கு முன் செல்வது வழக்கம். இந்த தபேதார் பணியில் இதுவரை ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சென்னை ஐகோர்ட் வரலாற்றிலேயே முதல்முறையாக திலானி என்ற பெண் தபேதாராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது பெருமிதத்திற்குரிய விஷயம்.
– ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி.

—————————————

உதடுகளைப் பாதுகாக்க சில யோசனைகள்!

சிலருக்கு உதடுகள் இயற்கையிலேயே சிவப்பாக, ஆரோக்யமாக இருக்கும். சிலர் உதட்டை அடிக்கடி கடிப்பதாலும், தரமற்ற லிப்ஸ்டிக், லிப்பாம் போன்றவற்றை உபயோகிப்பதாலும் உதடுகள் கருப்பாக, அழகற்று வெடிப்புடன் காணப்படும். இதை தவிர்க்க வீட்டிலேயே எளிமையான முறையில் உதடுகளைப் பாதுகாக்கலாம்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து தடவ உதடு அழகாகும்.

தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, வெடிப்புகள் நீங்கி உதடுகள் வழவழப்பாகும்.

பாதாம் பவுடருடன், பாலேட்டை கலந்து உதடுகளில் தடவ, வறண்ட உதடுகள் மிருதுவாகும்.

உதடுகளில் உள்ள வெடிப்பை சரி செய்த பிறகே லிப்ஸ்டிக் போட வேண்டும்.
தரமான லிப்ஸ்டிகை போடுவதோடு
அதை இரவில் முறையாக நீக்க வேண்டும்.

லிப்ஸ்டிக் பிரஷ், லிப்ஸ்டிக் போன்றவற்றை பிறருடன் பகிரக்கூடாது. லிப்ஸ்டிக்கை நேரிடையாக அப்படியே போடாமல் லிப் பிரஷ் கொண்டு போட அழகாக இருக்கும். சரிவிகித உணவு, ஆரோக்கிய பானம் இவையே உடலையும், உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைக்கும்.
– மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

—————————————

ஹெட்தலே (Hedathale)

ர்நாடகாவில் நஞ்சன்கூட் என்ற கிராமத்தில் ஹொய்சாலா காலத்து லக்ஷ்மி கந்தசாமி கோயில் இருந்தது. 12 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற நரசிம்ம ஸ்வாமி மற்றும் வேணுகோபால் ஸ்வாமி விக்ரகங்களும் தவிர, அழகிய ஆண்டாள் விக்ரமும் இருந்துள்ளது. இந்த ஆண்டாளின் முக்கியத்துவம் என்ன என்றால் சாதாரண வெளிச்சத்தில் இந்த ஆண்டாள் சிலை சாதாரணமாக தெரியும். ஆனால் பூஜை செய்யும்போது எல்லா விளக்குகளும் அணைக்கப்படும். ஆண்டாளின் நெற்றிக்கு அருகில் ஆரத்தி காட்டும்போது ஆண்டாளின் கண்கள் நிஜ கண்களாகவே நம்மை பார்ப்பது போல இருக்கும். இது மாதிரி காட்சி எங்கும் காண முடியாது.

இன்னும் சற்று முன்னோக்கி சென்றால் ஒரு பெரிய ஹால் இருக்கும். அந்த இடம் சாவடி என்பார். பல்லேகரா தண்ட நாயக்கரின் 16 பெண்களுக்காகவே கட்டப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் மாப்பிள்ளைகளை மாமியார்கள் பார்க்க மாட்டார்கள். அதற்கு ஏதுவாக பெண்ணும் மாப்பிள்ளையும் அருகருகே அமர்ந்து இருந்தாலும் மாப்பிள்ளை பார்க்காதவாறு டிசைன் செய்யப்பட்டிருக்கும். மேல் உத்திரத்தில் பல பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்ட சித்திரம் செதுக்கப்பட்டிருக்கும். அவை நமது மன அழுத்தம் மற்றும் மாறுபட்ட எண்ணங்களை நம் மனதில் இருந்து அகற்றிவிடும் என்று நம்புகின்றனர்.

எப்படி செல்வது:
பெ
ங்களூர் – மைசூர் நிறைய தனியார் பஸ்கள் உள்ளன. சொந்த காரில் சென்றால், மைசூர் – ஊட்டி சாலையில் நஞ்சன்கூட் டவுன் வரும். அங்கிருந்து 5 கி.மீ. தூரத்தில் ஹெட்தலே கோயில் உள்ளது.
– ஆர். ஜானகி, சென்னை

—————————————

செஸ் ஒலிம்பியாடிலும் ஜோதி ஓட்டம்!

லிம்பிக் போட்டிகள் தொடக்கத்துக்கு முன்பாக நடத்தப்படுவதைப் போன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கத்துக்கு முன்பாகவும் ஜோதி ஓட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என சர்வதேச செஸ் சம்மேளம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை முதன் முதலாக சென்னை அருகே மகாபலிபுரத்தில் வரும் ஜூலை – ஆகஸ்ட்டில் நடைபெற இருக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலிருந்து தொடங்க இருக்கிறது. இந்தியாவில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்ஸ்க்கு ஏதென்ஸ் போல, செஸ் விளையாட்டின் பிறப்பிடமாக இருக்கும் இந்தியாவிலிருந்தே இனி ஒவ்வொரு முறையும் இந்த ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தொடங்கும். அதன் பிறகு சர்வதேச செஸ் சம்மேளத்தில் உறுப்பினராக இருக்கும் நாடுகளில் வலம் வரும் அந்த ஜோதி, இறுதியாக போட்டி நடைபெற இருக்கும் நாட்டையும், சம்பந்தப்பட்ட நகரத்தையும் வந்தடையும்.

தற்போது மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ஐம்பது நாள்களே இருப்பதால் இந்த அறிமுக ஜோதி ஓட்டமானது இந்தியாவுக்குள்ளாக மட்டுமே நடைபெற இருக்கிறது. ஜோதியை ஏந்தி ஓடுபவராக இந்திய செஸ் நட்சத்திரமான விஸ்வநாதன் ஆனந்தும் இருப்பார்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மகாபலிபுரத்தி்ல் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10வரை நடைபெறவுள்ளது. இதில் 187 நாடுகளில் இருந்து 343 அணிகள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். 44-ஆவது ‘சர்வதேச செஸ்’ ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை, சின்னத்தை முதல்வர் வெளியிட்டிருக்கிறார்.

செஸ் போட்டிக்கான 50 நாள்கள் கவுன்ட்டவுனை பொதுமக்களின் பார்வைக்காக ஒளிப்படக் காட்சியாக ரிப்பன் கட்டத்தில் துவக்கி #CHESS CHENNAI 2022 எ்னற ஹேக்டேக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது.

செஸ் காய்களில் ஒன்றான குதிரைக்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிவிக்கப்பட்டு வணக்கம் தெரிவிப்பது போன்று சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘தம்பி’ என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
– ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

—————————————

கோபுரப்பட்டி – சின்ன ஸ்ரீரங்கம்!

சிறிய ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படும் கோபுரப்பட்டி திருச்சி மண்ணச்ச நல்லூரிலிரந்து 20 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொள்ளிடம், காவிரி ஆறுகளுக்கு நடுவே  ஸ்ரீரங்கம் பெருமாள் பள்ளி கொண்டுள்ளது போல் இங்கு பெறுவளம் மற்றும் கம்பலாறு என்ற இரண்டு ஆறுகளுக்கு நடுவே பாலசயனத்தில் காட்சி அளிக்கிறார் ஆதி நாயக பெருமாள். இன்று, ஆறுகள் இருந்த இடம் மாறி சிறிய வாய்க்காலாக உள்ளது. சுமார் 700 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் 1323ம் ஆண்டு வீர வல்லாளன் என்ற ஹோய்சால மன்னனால் குடமுழுக்கு செய்யப்பட்டது. 1324ம் ஆண்டில் அலாவூதின் கில்ஜி ஆணைப்படி மாலிக்காப்பூர் தலைமையில் திருவரங்கம் மீது படையெடுப்பு நடந்தபோது சுமார் 12,000 பிராம்மணர்கள் பெருமாளையும், கோயிலையும் காக்க முயன்றனர். அப்போது முகம்மதியர்களால் இந்த 12,000 வைணவர்களின் தலைகள் கொய்யப்பட்டு பெருங்கொலை நடந்துள்ளது. பிள்ளை லோகாச்சார் ஸ்ரீரங்கம் நம்பெருமாளை கோபுரப்பட்டி அருகே எடுத்துச் சென்று காத்தனர்.

கோபுரப்பட்டியில் இன்றளவு ஒவ்வொரு ஆடி, அமாவாசை அன்று அந்த ஊர் மக்கள் உயிர் நீத்த 12,000 வைணவர்களுக்கு நீத்தார் கடனை நடத்தி வருகிறார்கள். கோபுரப்பட்டியிலிருந்து பிறகு பெருமாள் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். திரும்பவும் 1371-ம் ஆண்டு கோபண்ணா தலைமையில் ஸ்ரீரங்கத்திற்கு நம் பெருமாள் வந்து சேர்ந்தார். வீரவல்லாளன் அரங்கனின் பக்தன். முகம்மதியர்களை எதிர்த்துப் போரிட்டு உயிரிழந்தான். அப்போது அவருக்கு வயது 86.

இந்தக் கோயில் 2010ம் ஆண்டு புனரத்தாரணம் செய்யப்பட்டு புதுப் போலிவுடன் திகழ்கிறது. இந்த ஊர் மக்கள் மாதா மாதம் ஸ்ரீரங்கத்திற்கு அரிசி அளித்து வருவார்கள். அந்த அரிசியை இந்த ஊரி்ல் ஒவ்வொரு மாதமும் அளப்பார்கள். ஒருமுறை அளக்க படி இல்லாதபோது பெருமாளே படியுடன் தோன்றி அளக்க உதவி புரிந்தாராம். இந்த பெருமாள்  கையில் அளக்கும் படியோடு காணப்படுகிறார். சிறிய ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படும் கோபுரப்பட்டி அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஸ்தலமாகும்.
– ஜி. இந்திரா, ஸ்ரீரங்கம்

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...