0,00 INR

No products in the cart.

இனியில்லை கடன்!

சென்ற வார தொடர்ச்சி…

சிறுகதை: நாமக்கல் எம்.வேலு

ஓவியம்: தமிழ்

தற்கப்புறம் ராமசாமியிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை.  எப்போது பணம் கொடுப்பாய் என்று எப்போவும் போல சோமசுந்தரமும் போன் போட்டு கேட்கவுமில்லை.  ஆபரேசன் நல்லபடியாய் நடந்ததா, வீட்டுக்கு வந்தாகி விட்டதா, எப்படி இருக்கிறார்கள், கட்டியை பயாப்ஸி டெஸ்ட்டுக்கு கொடுத்து ரிசல்ட் வந்ததா, எந்த ஒரு விவரமும் இல்லை.  திடீரென்று இப்போது வந்து நிற்கிறான். அவனை சோமசுந்தரமும் எதிர்பார்க்கவில்லை. ஜானகி காதில் கிசுகிசுத்தது காதுகளில் ஒருமுறை வந்து போனது.

மீண்டும் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டார் சோமசுந்தரம். பணம் ஏதும் கொடுக்க வந்திருக்கிறானா, இல்லை செலவு தலைக்கு மேல் போய்விட்டது இன்னும் ஒரு இருபதினாயிரம் கொடு என்று கேட்கப் போகிறானா என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே, எழுந்து நின்று தனது இடுப்பு வேஷ்டி மடிப்பில் இருந்து ஒரு மஞ்சள் பையை எடுத்து திறந்தார் ராமசாமி. பையனுக்கு கல்யாணம் ஏதும் வைத்திருக்கிறானா, பத்திரிகை ஏதும் வைக்கப் போகிறானா, வாங்கிய கடனைப் பற்றி பேசவில்லை, தன் பெண்டாட்டியை பற்றி இன்னும் ஏதும் சொல்லவில்லை. பத்திரிகை வைத்துவிட்டு பிறகு இருபதினாயிரமோ முப்பதினாயிரமோ கொடு என்று கேட்பானோ ‘ என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே பையிலிருந்து ரூபாய் கத்தைகளை வெளியில் எடுத்தார் ராமசாமி.

‘ சோமா, இதுல ஒரு லட்சத்து ஐயாயிரம் இருக்கு எடுத்துக்கப்பா ‘ என்றார்.

திகைத்து போனார் சோமசுந்தரம். நடப்பது நிஜமா என்று தன்னையே கேட்டுக் கொண்டார். கத்தையாய் பணம். ஒரு லட்சத்தி ஐயாயிரம்.  நடப்பது.  பணத்தை வாங்கிக் கொண்டு, ‘ ஜானகி இங்கே வா…’ என்று தன் மனைவியை அழைத்தார்.

‘ ராமசாமி முழு பணத்தையும் கொடுத்திட்டான். இனிமே பாக்கி ஏதும் இல்லே. அந்த பீரோல நகைக் கடன் ரசீது இருக்கில்லே. அதோட சேர்த்து வை. நாளைக்கே போயி உன் வளையல்களை மீட்டுக்கிட்டு வந்துடலாம் ‘ என்றார்.

சந்தோசத்துடன் பணத்தை வாங்கிக் கொண்ட ஜானகி, ‘பேசிக்கிட்டிருங்க, இன்னும் அஞ்சு நிமிசத்துல சாப்பாடு தயாராகிடும், சாப்பிட்டு போவீங்களாம் ‘ என்றுவிட்டு பணத்துடன் திரும்பினாள்

கொஞ்ச நேரம் ஏதும் பேசவில்லை. டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். சாப்பாடு தயாராகிவிட்டது என்று ஜானகி கூப்பிட இருவரும் எழுந்து போயினர்.

சாப்பிட்டுக் கொண்டே, ‘ என்னை மன்னிச்சிடு சோமா… உடனே பணத்தை திருப்பி தர முடியாம போச்சு.  முன்னே மாதிரி பணம் கிடைக்கறதே இல்லை. வாங்கின கடனை அடைக்கவும் முடியறதில்லை. யாருகிட்டேயாவது புது கடன் வாங்கினாத்தானே பழைய கடனை அடைக்க முடியும். சில சமயம் நினைச்சுக்குவேன், நாம பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டோமோனு நீ தப்பா  நினைச்சுக்குவியோனு..’ என்றார் ராமசாமி.

‘ பரவாயில்ல விடு ராமா… அதான் இப்போ பணத்தையே கொடுத்திட்டியே.  அது சரி. இவ்ளோ பணத்தை எப்படி புரட்டினே. ‘ என்றார் சோமசுந்தரம்.

கண்களில் திடீரென்று கண்ணீர் கசிந்தது. ‘  திரும்பத் திரும்ப கடன் வாங்கி வாங்கி எனக்கு ரொம்பவும் கெட்ட பெயரா போச்சா. சில சமயம்  இனிமே யார்கிட்டதான் போய் எப்படி கையேந்தறதுனு யோசிப்பேன். ஒருநாள் யோசிச்சு யோசிச்சு இனிமே வாழ்க்கையில கடனே வாங்கக்கூடாதுனு முடிவு பண்ணி, ரிடையர் ஆனப்ப கிடச்ச பணத்துல ஒரு காலி பிளாட் வாங்கிப் போட்டிருந்தேன் இல்லையா. அத அடமானம் வச்சித்தானே ஒருத்தர்கிட்ட ஆபரேசனுக்கு ஒரு லட்சம் வாங்கியிருந்தேன், அதை அவருக்கே வித்து எல்லா கடனையும் அடைச்சுடலாம்னு முடிவு பண்ணி அஞ்சு லட்சத்துக்கு வித்துட்டேன். முதல்ல உங்களுக்குத்தான் பணம் கொண்டு வந்திருக்கேன்.  உங்க உதவிய மறக்கவே மாட்டேன், இனி கடனும் வாங்கவே மாட்டேன். இது நான் சாப்பிட்டுக்கிட்டிருக்கிற இந்த சாப்பாட்டு மேல சத்தியம் ‘ என்றபடி  தட்டில் கையை கழுவிக் கொண்டு எழுந்தார்.

அவரது மனைவியைப் பற்றி இன்னும் ஏதும் கேட்கவே இல்லையே என்று யோசித்து,  ‘ சரிப்பா, மல்லிகா இப்போ நல்லா இருக்காங்க இல்லையா.. அது பத்தி சொல்லவே இல்லை ‘ என்றார் சோமசுந்தரம்.

திடீரென்று ராமசாமி கண் கலங்கினார்.

‘ என்னடா இது, நாம என்ன தப்பா கேட்டுட்டோம்.  அழற மாதிரி நடிச்சு, கொடுத்த ஒரு லட்சத்துல கொஞ்சத்தை மறுபடியும் கடனா கொடுன்னு கேட்கத்தான் அச்சாரம் போடறானோ ‘ என்றுகூட யோசிக்கலானார் சோமசுந்தரம்.

முகத்தை துடைத்துக் கொண்டு. ‘ ஒரு மாசம் ஆச்சு சோமா அவ போய்ச்சேர்ந்து ‘ என்று மேலே கை காட்டினார் ராமசாமி. திருக்கிட்டார் சோமசுந்தரம். ‘ ஆஸ்பத்திரில இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தா, நல்ல இருந்தா, ஆனா திடீர்னு ஒருநா விடிகாலையில அவ எந்திருக்கவே இல்லை. என்னை விட்டுட்டு போய்ச் சேர்ந்துட்டா  ‘ என்றார் ராமசாமி.

சோமசுந்தரத்திற்கும் துக்கம் தொற்றிக் கொண்டது. பேசமுடியவில்லை. கொஞ்ச நேரம் மவுனம்,

‘ ஆச்சு… காரியம் எல்லாம் ஆனபிறகுதான் சரி உன் பணத்தை கொடுத்துடணும்னு கொண்டு வந்துட்டேன். இனிமே கடன்னு ஏதும் வாங்கறதில்லைன்னு மல்லிகா போட்டோ முன்னால நின்னு சத்தியமும் செஞ்சிட்டேன்.  சரி நான் கிளம்பறேன் சோமா…’ என்று எழுந்தார்.

திரும்பி ஜானகியை பார்த்து ஜாடை செய்தார் சோமசுந்தரம்.  இருவரும் எழுந்து உள்ளே போனதும் ‘ ஒரு நூறு ரூபா கொடு அவன் கிட்ட பஸ் செலவுக்கு வெச்சுக்கோனு சொல்லி கொடுப்போம்.  பாவம் ‘ என்றார் சோமசுந்தரம்.

ஜானகி இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களாக எடுத்துக் கொடுத்து விட்டு. ‘ கொடுங்க, போயிட்டு போறார் ‘ என்றாள்.

பணத்துடன் வந்த சோமசுந்தரம்,  ‘ ராமா… மனசை தளரவிட்டிடாதே… பழசை நினைச்சு நினைச்சு இனி ஆகப் போறதில்லை… உன் உடம்பை பார்த்துக்க.. பழமொழி சொல்லுவாங்க, ‘ ஆண்டாண்டு அழுதாலும் மாண்டார் திரும்புவதில்லைனு… போனவங்களைப் பத்தி கவலைபட்டுக்கிட்டிருக்காம இனிமே நம்ப உடம்பை பார்த்துக்கிட்டு வாழ பழகிக்கணும்… சரி… நீ இப்போ நாமக்கல் திரும்பி போகணுமில்லையா… இந்த பணத்தை வச்சுக்க. பஸ் செலவுக்கு ஆகும் ‘ என்று சொல்லியபடி பணத்தை ராமசாமியின் கைகளில் திணித்தார்.

சட்டென மறுத்த ராமசாமி…’ இல்லை காசு வேணாம் சோமா… பணத்தை கொடுத்து திரும்ப என்னை கடன்காரனாக்கிடாதே. பஸ்க்கு பணம் வச்சிருக்கேன்… உங்களையெல்லாம் நான் மறக்கவே மாட்டேன் ‘ என்றபடி விறுவிறுவென நடந்தார் ராமசாமி.  திக்பிரமித்து நின்றனர் சோமசுந்தரமும் ஜானகியும்.
முற்றும்.

4 COMMENTS

 1. மனைவியை இழந்துவிட்ட நிலையில் பெரியசாமி
  வாங்கியக் கடன் தொகையை நண்பர் சோமசுந்த
  ரத்திடம் திருப்பிச் செலுத்தி தான் நாணயஸ்தன்
  என நிரூபித்தது கதையின் ஹைலைட். !

  • இவரைப் போன்ற ராமசாமிக்கள் இன்னும் நிறைய பேர் நாட்டுக்குத் தேவை..
   மிக்க நன்றி

 2. கஷ்டநிலையிலும் வாங்கிய கடனை அடைக்க நிலத்தை விற்று கொடுத்து அவர் மன சுமையை இறக்கி கொண்டார்.கதை
  சூப்பர்.

  • எனக்குத் தெரிந்து நிறைய பேர் ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கி, அசலுக்கும் வட்டி கட்டி, வட்டி க்கும் வட்டிக் கட்டி.. அடிபட்டுப் போயிருக்கிறார்கள். கடலிலிருந்து மீள ராமசாமி யைப் போல சிலசமயம் அதிரடி முடிவுகள் எடுத்தே ஆகவேண்டும்.
   மிக்க நன்றி மேடம்..

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...