0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்

அன்பு குறைந்து வரும் காலத்தில் அது அனைவரிடமும் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
– அனிதா, சேலம்

யாரையும் எந்தச் சூழ்நிலையிலும் மோசமாக நடத்திவிடாமல் இருக்கணும். ஏனென்றால், அழகியக் கண்ணாடியை உடைக்கும்போதுதான் கூர்மையான ஆயுதம் உருவாகிறது.

‘நாம் தனிமைப்படுத்தப்பட்டது கைப்பேசி வந்த பிறகுதான்’ என்கிறாள் என் தோழி; ‘ஊரடங்கு வந்த பிறகுதான்’ என்கிறேன் நான்… எது சரி?
– எல்.உஷாகுமாரி, சென்னை

செல்ஃபோன் என்பது தம்மாத்துண்டு, ‘கைப்பேசி’யாக இருந்த வரை நோ ப்ராப்ளம்! சும்மா அது ஒரு பேச்சுத் துணை மட்டுமே!
அது ஆன்ட்ராய்டாகவும், ஐஃபோனாகவும் உருமாறி, திருமாறி, ஏகப்பட்ட ‘ஆப்’களுடன் விஸ்வரூபம் எடுத்த பிறகு, அது மட்டுமே துணை!
சினிமா, டிராமா, கச்சேரி, பயணம், புத்தகம், பொழுதுபோக்கு, உணவு, ஷாப்பிங்… ஊரடங்கு வந்த பிறகு, கேட்கவே வேணாம்! எரியுற நெருப்புல எண்ணெய் விட்டு, போதாதற்கு சாம்பிராணி தூபமும் காட்டியது போல, ஓவர் ஆகிவிட்டது. ஸோ, அனுஷா நாட்டாமையின் தீர்ப்பு :
பிஃப்ட்டி; பிஃப்ட்டி!

 • கடைசி வரை நம்முடன் கூட இருந்து துணையா வருபவர் கணவனா? பிள்ளைகளா?
  – எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

 • கீழ்க்கண்டவற்றில் உங்க மனசுக்குப் பிடிச்சதை மட்டும் ரசித்துக்கொள்ளுங்க மேடம்!
 • ஆன்மிக பீஸ்!
  மரணம் வரை வருபவர்
  யாருமில்லை இவ்வுலகில்.
  நமக்கு நாம் மட்டுமே உறவு!
  நம்மைப் படைத்த ஆண்டவன் மட்டுமே துணை!
 • தத்துவ பீஸ்!
  சில காலம் நம்முடைய நினைவுகள்.
  பல காலம் நம் அனுபவங்கள்.
  கடைசி வரை நம் ஊழ்வினை!
 • யதார்த்த பீஸ்!
  கடைசி வரை வருபவை
  ஆதார் கார்டு, டெபிட் கார்டு மட்டுமே!
 • டெய்ல் பீஸ்!
  இப்படித்தான் ஒரு பொண்ணுக்கு, தன் புருஷன் தன்னோட கடைசி வரை அன்பாக இருக்கணும்னு ஆசை. ஆனா, அந்த ஆசாமி அப்படிப் பிரியமா இல்லைன்னு ஒரே குறை!க்கத்து ஊருல ஒரு சாமியார் இருந்தாரு. அவருக்கிட்ட போய் தன்னோட குறையைச் சொன்னா. அவரும், “அம்மணி… நான் ஒரு தாயத்து தர்றேன். அதுக்கு ஒரு கரடி நகம் வேணும். அதை நீ கொண்டு வந்து கொடுத்தா, நான் மந்திரிச்சுத் தர்றேன். அதைக் கட்டிவிட்டா, உன் புருஷன் கடைசி வரை உன்னையே சுற்றிச் சுற்றி வருவான்”னு சொன்னார்.“ஓகே! டன்”ன்னு சந்தோஷமா கிளம்பினா. நேரா காட்டுக்குள்ள போயி, ஒரு கரடிக் குட்டியைப் பிடிச்சு, கொஞ்சம் கொஞ்சமா அதனுடன் பழகி, ஃப்ரெண்ட் பிடிச்சுக்கிட்டா. அதுக்குப் பிடிச்சதைச் சாப்பிடக் கொடுத்து, அன்பா தடவிக் கொடுத்து, ஒரு கட்டத்துல, இவ சொல்றதையெல்லாம் கேட்குற அளவுக்கு கரடியும் ஆயிடுச்சு. நகத்தை வெட்டவும் சம்மதிச்சுது. நகத்தை எடுத்துக்கிட்டுப் போய் சாமியார்கிட்ட கொடுத்தா.தற்கு அந்த சாமியார், “அம்மாடி… ஒரு மாசமா அந்த முரட்டுக் கரடிகிட்ட காட்டுன அன்பை, நீ ஒரு நாள் உன் அப்பாவி புருஷன்கிட்ட காட்டியிருந்தா போதும்; இந்தத் தாயத்து இல்லாமலேயே அவன் உன்னைச் சுற்றிச் சுற்றி வந்திருப்பான்; இதை நீ புரிஞ்சுக்கணும்ங்கிறதுக்காகத்தான் கரடி நகம் வேணும்னு அனுப்பி வெச்சேன்!”ன்னு புத்திமதி சொல்லி அனுப்பினாராம்!எல்லா உறவுகளைக் காட்டிலும் இறுதி வரை நம் கூடவே வரும் ஒரே உறவு கணவன் / மனைவி மட்டுமே! அது சொதப்பிவிட்டால் யார் இருந்தும் புண்ணியம் இல்லை!

திருவிழாவில் தொலைந்த அனுபவம் உண்டா?
– வி.வித்யா பிரசாத், நங்கநல்லூர்
திருவிழாவுல இல்ல; கோயில்ல! அப்போ எனக்கு பத்து வயசு இருக்கும்! சோளிங்கர் மலையின் கீழே உள்ள மண்டபத்தில் உறவினர் கல்யாணம். அது முடிந்ததும் ஆஞ்சனேயரை தரிசனம் செய்யப்போனார்கள். நானும் என் தங்கையும் போன கையோடு, படிகளில் உல்லாசமாக இறங்கி (யாருக்கும் சொல்லாமல்!) மீண்டும் மண்டபத்துக்கே வந்துவிட்டோம்.
மலை மீது எங்களைத் தேடித் தேடி, பயந்துபோன கல்யாண கோஷ்டி, அடிச்சுப் பிடிச்சு பெரும் ஆயாசத்தோடு இறங்கி வந்தால், நாங்கள் ‘கிச்சுக் கிச்சு தாம்பாளம்’ ஆடிக் கொண்டிருந்தோம்.

எல்லாரும் எங்களைப் பிச்சுப் பிச்சு எடுத்தாங்க! “சின்னக் குழந்தைகளைக் கண்காணிப்பா வெச்சுக்காம, அப்படி என்ன பொறுப்பில்லாம இருக்குறது?”ன்னு ஒருத்தர்கூட பெரியவங்களைத் திட்டலையே! என்ன அநியாயம்!!
ஹும்! கூப்பிடுங்க சைல்ட் ஹெல்ப் லைனை!

2 COMMENTS

 1. ‘தனிமைப் படுத்தப்பட்டது’ கேள்விக்கு ‘கணக்காகப்’ பதில் சொன்ன அனுஷா நாட்டாமைக்கு மார்க் நூற்றுக்கு நூறு..

  ஆர். பிரசன்னா
  ஸ்ரீரங்கம்

 2. கடைசி வரை நம்முடன் கூட இருந்து துணையாக வருபவர் யார் என்ற கேள்விக்கு ஆசிரியரின் பதில் அசத்தல். தத்துவ பீஸ் எதார்த்த பீஸ் டெயில் பீஸ் என அசத்திவிட்டார் அசத்தி பாராட்டுக்கள் பல.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

‘செஸ்’ விளையாடத் தெரியுமா மேடம்? - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி செஸ்ஸா? யாராவது அறிவு ஜீவிங்க விளையாடட்டும்! நாம்ப ஜஸ்ட் ரசிக்கலாம்! பொறுமையைச் சோதிக்கும் இந்த விளையாட்டில் எந்த ஆர்வமுமில்லை! ஆனா... ஓரளவு புரியும்! அப்புறம்,...

அன்புவட்டம்!

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றி... - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி பெரிய பெருமைதான் கெஜலட்சுமி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நம்ப சென்னை செஸ் ஒலிம்பியாட். செஸ் ஒலிம்பியாட்டை நடத்தணுங்கிற...

அன்புவட்டம்!

தாலியைக் கழற்றி வைத்து மனைவி செய்த துன்புறுத்தலால் கணவருக்கு விவாகரத்து வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதே! - வாணி வெங்கடேஷ், சென்னை இப்போதெல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆனதுமே, பல நாகரிகப் பெண்கள் போடும் முதல் கண்டிஷனே...

அன்புவட்டம்!

 இளையராஜாவின் எம்.பி. பதவி சர்ச்சைக்குள்ளானதே! - கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி நான் பத்தாவது படிக்கும்போது, வயல் வரப்புகளில் உட்கார்ந்து தேர்வுகளுக்குத் தயாராவது வழக்கம். கால்களின் அடியே ஜில்லென்ற ஏற்றம் பாய்த்த நீர் பாய்ந்துகொண்டிருக்கும். அப்போது நெல்,...

அன்புவட்டம்!

“பயணிகளுக்கு எச்சில் தொட்டு பஸ் டிக்கெட்டுகளைக் கொடுக்கக்கூடாது” என்று பஸ் கண்டக்டர்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளதே! - வாணி வெங்கடேஷ், சென்னை எச்சில் மட்டுமா? எங்க ஊர் கண்டக்டர்களை வந்துப் பாருங்க வாணி! நெற்றி, கழுத்துல...