0,00 INR

No products in the cart.

கிறிஸ்துமஸ் மரம்

– ஆர்.மீனலதா, மும்பை

னது சிநேகிதி மேரியிடம் பேசுகையில், அவர்களது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றிக் கூறினாள். ஈஸி ரெஸிபியையும் பகிர்ந்தாள். சில விபரங்கள் பொதுவாகத் தெரிந்திருந்தாலும் அவள் கூறியதிலிருந்து, கிறிஸ்துமஸ் மரங்கள் குறித்த செய்திகள் சுவாரஸ்யமாக இருந்தன.

தீய சக்திகள் அணுகாது இருக்க, வீட்டு முகப்பில் இதனை அலங்கரித்து வைப்பது வழக்கம். கிளைகளில் சிலுவையின் அடையாளம் காணப்படும்.

மரத்தின் முக்கோண வடிவம், தந்தை; மகன்; தூய ஆவி எனும் இயேசுநாதரின் முப்பரிமாணங்களைக் காட்டுவதாக இருக்கும்.
பண்டிகைக் கால உற்சாகத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் கிறிஸ்துமஸ் மரம்.

வெட்டிய பின்பும் முளைத்த மரம் :
து குறித்து, சுவாரசியமான செய்தி ஒன்று உள்ளது. ‘புனித போனி பேஸ்’ என்கிற பாதிரியார் கி.பி.10ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்தவர். கிறிஸ்துவ மக்களிடையே நிலவி வந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து வந்ததோடு, ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தும் வந்தார்.
அச்சமயம் அங்கிருந்த, ‘ஓக்’ மரம் ஒன்றினை மக்கள் வழிபடுவது கண்டு, கோபமுற்று அதனை வெட்டி வீழ்த்தியதோடு, மீண்டும் துளிர்க்காமலிருக்க வேர்ப்பகுதியையும் அடியோடு பெயர்த்தெடுத்து போட்டுவிட்டு, வேறு ஊர்களுக்குச் சென்றார். மக்களுக்கு வருத்தமாக இருந்தது.

ஆனால், அனைவரும் ஆச்சரியப்படும்படியாக, ஒருசில தினங்களில், ‘ஓக்’ மரம் அதே இடத்தில் முளைத்து வளர்ந்து, கிடுகிடுவென முன்போலவே கம்பீரமாக உயர்ந்து நின்றது. இயேசுநாதரே மீண்டும் வந்ததின் அடையாளமாக எண்ணி, மக்கள் அதை வணங்க ஆரம்பித்தனர்.

பிற ஊர்களில் தனது வேலையை முடித்து சில மாதங்கள் சென்று ஊர் திரும்பும் வழியில், பாதிரியார் அப்புதிய மரத்தை, அதே இடத்தில் கண்டு அதிசயித்து, மண்டியிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். ஆனால் கிறிஸ்துவ வழிபாட்டில், ‘ஓக்’ மரம் உயிர்ப்பின் அடையாளமாக இருந்தபோதிலும் கிறிஸ்துமஸ் மரமாக ஆக்கப்படவில்லை.

பிறகு எப்போது?
15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்ட்டின் லூதர் எனும் ஜெர்மானிய பாதிரியார், ஒரு டிசம்பர் மாதத்தில் பனி படர்ந்த சாலை வழியே நடந்து செல்கையில், சிறு சிறு ஓக் மரங்களிடையே வெண்பனி படர்ந்திருந்த ஃபிர் (தேவதாரு) மரமொன்று வெளிச்சத்தில் அழகு தேவதையாக ஒளிர்வதைக் கண்டார். இதை, தெய்வ தரிசனமாகக் கருதி, பிறருடன் பகிர்ந்துகொண்டார்.

ஒரு சில வாரங்கள் சென்று வந்த கிறிஸ்துமஸ் தினத்திற்கு முதல் நாள், பாதிரியார் தேவாலய வளாகத்திற்குள் இருந்த ஃபிர் மரத்தை மெழுகுவர்த்தி ஏற்றிய கூண்டு விளக்குகளால் அலங்கரித்தார். ஃபிர் மரம், ‘எவர் க்ரீன்’ மரமெனக் கூறப்படுகிறது.

இவ்வழக்கம் ஜெர்மனியில் ஆரம்பித்து, மெதுவாக 16ஆம் நூற்றாண்டில் மற்றைய உலக நாடுகளுக்குப் பரவியது. அதன் பின்னர், ‘ஓக்’ மரமும் ஃபிர் மரமும் கிறிஸ்துமஸ் மரமாக உபயோகப்படுத்தப்பட்டன.

இயற்கையான, ‘ஓக்’ மற்றும் ‘ஃபிர்’ மரங்கள் கிடைக்காதபோதும், செயற்கையான கிறிஸ்துமஸ் மரங்களை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

மீனலதா
ஆர். மீனலதா, தொலைபேசி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். விருதுகள் பல பெற்றவர். சிறந்த நாடக நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், சினிமா, இசை, கவிதை, சமையல், Ad.supervision, விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்கும் ஆல்ரவுண்டர். நிகழ்ச்சி அமைப்பாளரும்கூட.. பழகுவதற்கு இனிமையான பண்பாளர். பலருக்கும் முன்னோடியாக விளங்குபவர். மங்கையர் மலரின் மும்பை நிருபர். உற்சாக ஊற்று.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...