0,00 INR

No products in the cart.

ஜெர்மனியின் அழகே அழகே!

பயணம் – கிழக்கு ஐரோப்பியா – 6

– பத்மினி பட்டாபிராமன்

கப்பலுக்குள் ரயில்
ல நாடுகளில் ரயிலில் பயணித்திருக்கிறோம். படகுகளில் பயணம் செய்திருக்கிறோம். ஆனால், ஒரு ரயிலையே படகுக்குள் நுழைத்து பார்க் செய்து, கடலைத் தாண்டிச் சென்ற அனுபவம் எங்களுக்குப் புதிதுதான்.

டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் இருந்து ஜெர்மனியின் ஹேம்பர்க் நகருக்கு I.C.E (Inter City Express) என்ற ரயிலில் செல்வதாகத் திட்டம். கோபன்ஹேகன் சென்ட்ரல் ரயில் நிலையம் – ஏராளமான கடைகள், உணவு விடுதிகள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஜூஸ் கடைகள், கைவினைப் பொருட்கள், சாவனீர் கடைகள்.

ஆனால், எங்கும் படு சுத்தம். (அது அவர்களின் ரத்தத்தில் ஊறியது.)
கூட்டமாக, பரபரப்பாக இருந்தது என்றாலும், தள்ளு முள்ளு, கூச்சல் இல்லை.

பெண்களின் அணிகலன்கள் விற்கும் கடைகளில் நானும் (போகாமல் இருப்போமா?) மதர் ஆஃப் பேர்ல் காதணி, செயின் சாவனீர்கள் வாங்கினேன். நிமிடத்திற்கொரு முறை வழுக்கினாற்போல வந்து நிற்கும் நீண்ட ரயில்கள். ஹேம்பர்க் செல்லும் ரயில் வந்தது. சுமார் ஐந்தரை மணி நேரப் பயணம். இதில் முக்கிய அம்சமே, டென்மார்க்கின் ராட்பி (Rødby)என்ற இடத்திலிருந்து ஜெர்மனியின் புட்கார்டன் (Puttgarden) என்ற இடம் வரை ரயிலோடு கப்பல் (Ferry) மூலம் செல்வதுதான். ஐரோப்பிய நாடுகள் பலவற்றைச் சூழ்ந்திருக்கும் பால்டிக் கடல் மேல்தான் இந்தப் பயணம்.

ராட்பி வரை ரயிலில் டென்மார்க்கின் இயற்கை அழகை, பசுமையை (Typical Dutch Countryside) ரசித்தபடி செல்லலாம். ஆங்காங்கே மேயும் வளர்த்தியான குதிரைகள் கண்ணில் பட்டன.

ராட்பியின் ஸீ போர்ட் அருகே வந்தபோது எதிரே அந்த பிரம்மாண்ட ஃபெர்ரி காத்திருந்தது. எல்லோருடைய கண்களும் கேமராக்களும் தயாராகின. மெல்ல ரயில் கப்பலின் அடித்தளத்துக்குள் நுழைந்து, வேகம் குறைத்து ஸ்மூத்தாக நின்றபோது, ‘ஹே’ என்ற உற்சாகக் கூச்சல் பயணிகளிடம் இருந்து… எல்லோருமே இறங்கி, கப்பலின் பயணிகள் டெக் நோக்கிச் செல்ல வேண்டும். யாரும் ரயிலில்
இருக்கக் கூடாது. உடைமைகளை வைத்துவிட்டுச் செல்லலாம். (பாஸ்போர்ட், பணம், கேமரா மற்றும் முக்கிய டிராவல் டாக்குமென்ட்கள் நம்மிடம்தான் இருக்க வேண்டும்.)
50 நிமிடங்கள் இந்தப் பயணம். ஃபெர்ரிக்குள் சுற்றி வந்து, காஃபி குடித்து மேல் டெக்கின் குளிர் காற்றில் நின்று ஃபோட்டோ எடுத்து… வெகு தூரத்தில் தெரியும் தீவுக் கூட்டங்களை ரசித்து… நேரம் போனதே தெரியவில்லை.

ஜெர்மனியின் புட்கார்டன் வந்தவுடன் மீண்டும் ரயிலில் ஏறி, அது கப்பலை விட்டு மெல்ல வெளியே வந்து நிலத்தைத் தொடும் வரை ஒரு புது அனுபவம். பின்னர் வேகமெடுத்து, ஹேம்பர்க் செல்லும் வரை இரு புறமும் ஜெர்மனியின் சிறு ஊர்கள், இயற்கைக் காட்சிகள்.

ஹேம்பர்க்

டக்கு ஜெர்மனியின் முக்கிய துறைமுக நகரம் ஹேம்பர்க்.
‘கேட்வே ஆஃப் த வோர்ல்ட்’ (Gateway of the World) என்று வரலாற்றுப் புகழ் பெற்றது. இங்கு ஓடும் எல்பே நதி (Elbe River) வடகடலில் கலக்கிறது. இதனால் இந்த நகரில் ஏகப்பட்ட கால்வாய்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன. அதுவே இந்நகருக்கு ஒரு தனி அழகைக் கொடுக்கிறது.

நகரின் மையப் பகுதியில் ஆல்ஸ்டர் (Alster lake) ஏரி. அதில் சென்று வரும் படகுகள், அதைச் சுற்றிய கரைகளில் நிறைய கடைகள், உணவு விடுதிகள், மக்களின் பொழுதுபோக்கு இடங்கள். இங்குள்ள லூதரேன் சர்ச்சுகளில் ஒன்று செயின்ட் மைக்கேல் சர்ச்சில் (St. Michael’s Church). ஒரு பெரிய மைக்கேல் வெண்கலச் சிலை. மைக்கேல், தீய சக்தியான டெவிலை பெரிய வாளால் குத்துவது போல… (நம்ம ஊர் புராணங்களில் இல்லாததா?) இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனிக்கு எதிரான அல்லைட் படைகளின் அணுகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது இதன் துறைமுகம். கப்பல்கள், படகுகள், கப்பல் நிறுத்தும் இடங்கள், எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் எல்லாமே பெரும் நாசத்தை சந்தித்தன. அவற்றிலிருந்து மீண்டு, இன்று உலகின் முக்கிய துறைமுக நகரமாக வளர்ந்திருக்கிறது. ஆர்ட் மியூசியத்தில் ஹேம்பர்கின் சரித்திரம், போர்கள், மக்களின் வாழ்க்கை பற்றியச் செய்திகள் கிடைக்கின்றன.

திடீரென்று தெருவில் பார்த்தால் குழந்தைகள் ஓட்டிச் செல்லும் கார் போல ஏதோ வேகமாக ஓடின. மினி ரேஸ் கார்களில் இளைஞர்கள் அணிவகுத்துச் செல்லும் காட்சிதான் அது. இங்கே இது ஒரு வீர விளையாட்டு. அழகான ஊர் என்றால், ஆபத்து இல்லாமல் இருக்குமா?

இங்கே இருக்கும் ரீபன் ரெட்லைட் டிஸ்ட்ரிக்ட் (Reeperbahn Redlight District) ஐரோப்பாவின் புகழ் மிக்க இரவு வாழ்க்கைக்கான இடம் என்கிறார்கள். ஏராளமான கிளப்கள், விடுதிகள் இருப்பதால் குற்றங்களும் நிறையவே நடக்கும் இடம். விலைமாதர்கள் மட்டுமின்றி; கொள்ளை, போதை மருந்து என்று பலவற்றுக்கும் மையமான இடம். முன்பு இதன் கரன்சி மார்க் இருந்தது. ஆனால், இப்போது யூரோதான் புழக்கத்தில் உள்ளது. எல்லாமே விலை அதிகம் என்பதால் இங்கே எதுவும் வாங்கவில்லை. ஆனால், நகரின் கொள்ளை அழகைக் கண்ணுக்குள்ளும் கேமராவுக்குள்ளும் பதிந்து கொண்டோம்.

பெர்லினுக்கு கோச்சில் செல்வதற்காக எங்கள் கோச் வரும் வரும் என்று காத்திருந்தால், வரவே இல்லை. ஏதோ ஸ்டார்டிங் ட்ரபிள் என்று சொல்லி விட்டார்கள். மீண்டும் ஹேம்பர்க் ரயில் நிலையம் சென்று, ஒருவழியாக ரயில் பிடித்து இரண்டு மணி நேரப் பயணத்தில் பெர்லின் வந்தோம். ‘ஹாலிடே இன் பெர்லின்’ ஹோட்டலில் தங்கல், டின்னர்.

பெர்லின்

லக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர்க்கு சமமாகப் புகழ் பெற்றது ஜெர்மனியின் பெர்லின் சுவர். ஜெர்மனியின் தலைநகரம் பெர்லின். இரண்டாம் உலகப் போரில் பெரும் பங்கு பெற்ற நகர். அதன் முடிவில் ஹிட்லர் தோற்றுப்போக, ஜெர்மனி நான்கு நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.

அமெரிக்கா, சோவியத், பிரிட்டன், ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள் மேற்கு பெர்லினை ஆக்கிரமிக்க, ஜெர்மனியின் பெரும்பான்மையான கிழக்குப் பகுதி, ரஷ்யா வசம் வந்தது. அப்போதுதான் கிழக்கு பெர்லின், மேற்கு பெர்லின் பிரிவினை ஏற்பட்டது. அதை உறுதி செய்வதற்காக ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த வீரர்கள் பெரிய கான்க்ரீட் கற்களால் நீண்ட சுவரை நடுவில் கட்டினார்கள்.

இந்த சுவரில் காவல் டவர்களும் நிறுவப்பட்டன. இதனால் மேற்கு பெர்லின் முற்றிலுமாக கிழக்கு ஜெர்மனியுடன் துண்டிக்கப்பட்டது. சுவர் கட்டும் முன்னால் சுமார் ஒரு லட்சம் ஜெர்மானியர்கள், கிழக்கு பெர்லினின் கம்யூனிஸ்ட் ஆதிக்கத்தை விட்டு, மேற்கு ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்கள்.

அதைத் தடுக்கவே இந்த சுவர் எழுப்பப்பட்டது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியும் அல்லவா? வரலாற்றில் நாம் அறியாதவை நிறையவே உண்டு.

கிழக்கு ஜெர்மனியிலிருந்து தப்பிக்க முயன்றவர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.
1989ல் பல நாடுகளும், இந்த சுவர் ஜெர்மனியின் அவமானச் சின்னம் என்று எதிர்ப்புக் குரல் கொடுக்க, புரட்சியாளர்கள் சுவரை 1990ல் இடிக்க ஆரம்பித்தார்கள்.1994ல் இது முடிந்தது.

டிவி செய்திகளில் பார்த்த நினைவு வருகிறதா?
பெர்லின் சுவரின் வீழ்ச்சி கிழக்கு, மேற்கு ஜெர்மனியை இணைத்தது. இந்த வரலாற்றுச் சிறப்பு (?) கொண்ட நகரைப் பார்க்கப்போகிறோம் என்று ஒரு த்ரில் ஏற்பட்டது. முதல் விசிட் பெர்லின் சுவரை நோக்கித்தான்.

பெர்லின் சுவரை அனேகமாக இடித்து விட்டார்கள் என்றாலும், சில பகுதிகளை வரலாற்றின் அடையாளச் சின்னங்களாக இன்னும் வைத்திருக்கிறார்கள். அதிலும் பெரும் பகுதியில் அழகிய சித்திரங்களை வரைந்து புதுமையாக்கியுள்ளனர்.
ஒருசில பகுதிகள் மட்டும் அப்படியே இடிபாடுகளுடன் காட்சி தருகிறது. உலகெங்குமிருந்து ஓவியர்கள் வந்து இங்கே சித்திரங்களை வரைந்திருக்கிறார்கள்.

சுமார் 14 அடி உயரத்தில் உலகின் பெரிய கேன்வாஸ். அந்த நீண்ட சுவர் முன் நின்று சுவாரசியமான சித்திரங்களைப் பார்த்தால் நேரம் போவதே தெரியாது. சில படங்களின் அர்த்தமும் புரியாது.

ரஷ்யாவும் அமெரிக்காவும் மூக்குடன் மூக்கு வைத்து நின்று சண்டையிட்ட இடம் ஒன்று பெர்லினில் தவறாமல் பார்க்க வேண்டியது. அது…
(தொடர்ந்து பயணிப்போம்)

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...