ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
ஓவியம் : பிள்ளை

"துக்கு மன்னர் ரொம்ப சோகமாக இருக்கிறார்?"

"பதுங்கு குழியும் வெள்ளத்தில் முழ்கி விட்டதாம்!"
– மு.நிர்மலா தேவி, திண்டுக்கல்
………………………………………………………………………..


"இ
ன்ஸ்பெக்டர் ஐயா, என் மனைவிய கடத்திட்டாங்க போலிருக்கு… மார்க்கெட்டிலிருந்து தக்காளியும், கத்தரிக்காயும் வாங்கிட்டு வந்துக்கிட்டிருக்கேன்னு சொன்னா ஐயா!"
– ஆர்.மகாதேவன், திருநெல்வேலி
……………………………………………………………………….


"நம்ம தலைவர் மனைவி அப்பாவின்னு எதை வெச்சு சொல்ற?"

"தலைவர் பேருக்கு வந்திருக்கிற குற்றப்பத்திரிகைக்குகூட
நாலு மூலையிலே மஞ்சள் வைக்கிறாங்களே!"
– நிலா, திருச்சி
………………………………………………………………….


"நீங்க போட்ட சமையல் குறிப்பை
ஒரு லட்சம் பேர் பார்த்திருக்காங்களா?"

"மாம்… தக்காளி இல்லாமல் ரசம் வைப்பது
எப்படின்னு ஒரு வீடியோ போட்டேன்!"
– ஆர்.யோகமித்ரா, சென்னை
……………………………………………………………………


"ந்த தியேட்டர்ல பேய் நடமாட்டம் இருக்காமே?"

"இருக்கும். ரொம்ப நாளா மனுஷங்க
நடமாட்டாமே இல்லையே!"
– வி.ரேவதி, தஞ்சை
………………………………………………………………….


"வில் எய்துவதில் எதிரி பலே ஆளாம் மன்னா!"

"ப்படியென்றால் அவன்தான் நமக்கு மெயின் வில்லன்!"
– வி.ரேவதி, தஞ்சை
…………………………………………………………………


"ஐயா! அந்தக் காதல் ஜோடிக்கு நீங்க ஸ்டேஷன்ல
திருமணம் பண்ணி வைச்சது ரொம்ப தப்பா போச்சு!"

"ஏன்? என்னாச்சு?"

"ந்தத் திருமண ஜோடி இந்த ஸ்டேஷனில்
முதலிரவை வைச்சிக்கலாமான்னு கேட்கிறாங்க!"
– ஜி.பாபு, திருச்சி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com