
பதவி
குடியிருப்போர் அனைவருக்கும்
செயலாளர் பதவியின் மேல்
நாட்டம் வந்ததால்
ஆட்டம் கண்டுவிட்டது
அடுக்குமாடி சந்தோஷம்!
…………………………………………….
தேள்
திருடனுக்குத்
தேள் கொட்டவில்லை
ஆனாலும்
கத்துகிறான்
கட்டை விரலை
கதவில்
இடித்துக் கொண்டதால்!
…………………………………………………….
வருத்தம்
நல்ல பலன்கள்
பல தந்தாலும்
ஒதுங்குபவர்களுக்கு
நிழல் தர முடியலியே
வருந்துகிறது
நெடிதுயர்ந்த
பனை மரம்!
– எஸ்.பவானி, திருச்சி
…………………………………………………….
முரண்
அடுத்தவர் கையை
எதிர்பார்க்காதே
என்று சொன்னவர்
பார்த்தார் பலருக்கு
கைரேகை ஜோதிடம்!
…………………………………………………….
நன்றி
முற்றிய நெற்கதிர்கள்
தலை குனிந்து
நன்றி சொன்னது
வளர்த்துவிட்ட பூமிக்கு!
– பி.சி.ரகு, விழுப்புரம்