ஆண்டவன் ஒரு நாள் ஒரு வாட்ஸ் அப் குரூப்பைத் துவங்கினார். அதற்கு, ‘உலகம்’ என்று அழகான பெயரையும் சூட்டினார்.
முதலில் பஞ்ச பூதங்களைச் சேர்த்தார். ஆகாயம், பூமியைச் சேர்த்ததும், சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் ரிக்வெஸ்ட் கொடுத்துச் சேர்ந்தனர்.
நம்ப கடவுள்தான் ரசனைக்காரர் ஆச்சே! அடுத்ததா, கடல், மலை, நதி, அருவி, தாவரம், விலங்கு, பிராணி, பறவை, பூச்சி என வரிசையாகச் சேர்த்து மகிழ்ந்தார்.
மிக அழகான உலகம் உருவானதும் என்ன தோன்றியதோ, மனிதனையும் குரூப்பில் சேர்த்தார். மனிதன் புத்திசாலியாக இருக்கவே, கடவுளுக்கு அவனை மிகவும் பிடித்துப் போய்விட்டது.
‘‘இனி, இந்த குரூப்பை இவன் நல்லபடியாக நடத்திச் செல்வான்” என்று எண்ணி மனிதனை, ‘குரூப் அட்மின்’ ஆக்கிவிட்டு அவர், ‘left’ ஆகி விட்டார்.
கொஞ்ச நாள் பொறுப்பாகச் செயல்பட்ட மனிதன், காலப்போக்கில் சுயநலம் ஆகிவிட்டான். தன் இஷ்டத்துக்கு ஆட ஆரம்பித்தான்.
மரம், நதி, குளம், இவற்றை ரிமூவ் செய்து விட்டு, தொழிற்சாலை, மால், அபார்ட்மெண்ட், தார் சாலை போன்றவற்றை, ‘add’ செய்தான்.
இதனால் கோபம் கொண்ட மழை, ‘‘என் அன்புக்கு உரியவர்கள் இல்லாத இடத்தில் எனக்கு என்ன வேலை?” என்று அதுவும், ‘left’ ஆனது.
ஆனால், சூரியன் left ஆகாமல், குரூப்பில் இருந்துகொண்டே தனது சினத்தை மனிதன் மீது காட்டிக்கொண்டே இருக்கிறான்.
இந்தக் கதை கற்பனைதான். ஆனால் எங்கேயோ, ‘சுரீர்’ ன்னு உரைக்குதில்லே. எனக்கும்தான்!
உலகத்திலுள்ள மக்களின் நிலையினை
இயல் பான காரண கர்த் தாக்கள் மூலம்
விளக்கிய விதம் அருமை. வாழ்த்துகள்.
து.சேரன்
ஆலங்குளம்
சுயநலத்தால் மனிதன் தன் மரியாதையையும் வாழும் தகுதியையும்
சிறிது சிறிதாக இழக்கிறான் என்பதை
இந்த கதை உணர்த்துகிறது
இவ்வார ‘ஒரு வார்த்தை’ சுருக்கமாக இருந்தாலும் சுரீர் என உரைக்கும் விதத்தில் இருந்தது உண்மை! மனிதனின் சுயநலத்தால் இயற்கை எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதை நயமாகவும், நாசூக்காவும் இதைக்காட்டிலும் சிறப்பாக யாராலும் கூற முடியாது, டச்சிங், டச்சிங்!
எம்.இராஜேந்திரன்,
1/80பி-17, வரதராஜநகர் விஸ்தரிப்பு, லால்குடி-621601.