0,00 INR

No products in the cart.

புகைப்படங்களும் புடம் போட்ட நினைவுகளும்!

– தனுஜா ஜெயராமன்

ற்போதைய காலங்களைப் போல புகைப்படம் எடுப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை அக்காலத்தவர். திருமணம் போன்ற மிகப்பெரிய நிகழ்வுகளில் கூட புகைப்படம் எடுப்பதென்பது அக்காலத்தைய வழக்கமில்லை. சற்று வசதி படைத்த குடும்பமாக இருப்பின், தனியாகப் புகைப்படக் கலைஞரை நியமித்து, திருமணத்திற்குப் பிறகு மணமக்களை ஜோடியாக நிற்க வைத்து ஒன்றோ இரண்டோ புகைப்படங்களை மட்டுமே எடுத்து வைத்துக்கொள்வர். அதிலும் ஒப்பனை ஏதுமில்லாத எளிய ஆடை அலங்காரத்துடனான பாவனை, புன்னகை ஏதுமற்ற எளிய புகைப்படங்களாகவே அவை இருக்கும்.

க்காலங்களைப் போல ஒப்பனைக் கலைஞர்களைத் தனியாக நியமிக்கும் வழக்கமேதுமில்லை அப்பொதெல்லாம். வீட்டு உறவுப் பெண்மணிகளே கைதேர்ந்த ஒப்பனைக் கலைஞர்களாக மாறிக்கொள்வர். மணப்பெண் அலங்காரம் என்ற பெயரில் நடக்கும் கூத்துக்கள் ஒரு வேடிக்கையான அழகியல் நிகழ்வே. மணப்பெண்ணிற்கு ஐடெக்ஸ் கண்மைகளை பட்டைப் பட்டையாகத் தீட்டியும், அதன் மேல் பாண்ட்ஸ் பவுடரை அப்பியும் வைப்பதே ஆகப்பெரும் முக அலங்காரமாகும். அதுவே அப்போதைய மணப்பெண்களின் அதிகபட்ச அலங்காரமாக இருக்கும். தனியாக சிகை அலங்கார நிபுணர்களும் கிடையாது. அழுந்தப்படிய வாரிய முடியை இழுத்துப் பின்னிய ஒற்றை ஜடையில் கீழே குஞ்சலங்களைக் கட்டித் தொங்கவிட்டபடி பின்னிவிடுவர். நெற்றியின் நடுவில் சுட்டி வைத்து இருபக்கமும் சூரிய, சந்திர அரை வட்டங்களைச் சொருகி வைத்திருப்பர். தலையில் ஒரு பூ ஜடை ஒன்றை வைத்து விடுவதே அப்போதைய ஆடம்பரமான தலையலங்காரம்.

இப்போது போன்ற மெகந்தி, சங்கீத் போன்ற நிகழ்வுகளற்ற எளிய திருமணங்கள். விசேஷத்திற்கு இரு நாட்கள் முன்பே மருதாணி இலைகளைப் பறித்துப் பாக்கு வைத்து அரைத்து கைகளில் வட்ட வட்டமாக வைப்பதே ஆகச்சிறந்த டிசைன். விரல்களில் வளராத முருங்கைக் கிளையில் வைத்திருக்கும் சாணியைப் போல, குப்பி வைத்திருப்பார்கள். ஆனால், அதுவே செக்கச்செவேலென சிவந்து வாசனையுடன் மனதைக் கவரும்.

இப்படியான அலங்காரங்களால் பெண்ணின் தலை, முக, மருதாணி அலங்காரங்களை தனியாகப் புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியமேயிருக்காது புகைப்படக் கலைஞருக்கு. அதிகபட்சமாக பின்புறம் ஜடையலங்காரத்தை புகைப்படமெடுப்பதே ஆகச்சிறந்த புகைப்படக்கலை.

ஏதோ அத்தி பூத்தாற் போன்று சில வசதி படைத்த திருமணங்களில், சிலர் தனியாக புகைப்படக் கலைஞர்களை நியமித்திருப்பர். அதில் உறவினர் பெண்கள் சிலர் எல்லா பிரேம்களிலும் தெரிந்திட, பிரம்மப் பிரயத்தனம் செய்வது வேடிக்கையாக இருக்கும். புகைப்படத்தில் நிற்க அழைக்கப்படவில்லை என கோபித்துக் கொண்டு சென்ற உறவினர்களும் உண்டு.


தே போல், பிறந்த குழந்தையை போட்டோ எடுத்தால் ஆயுசு குறையுமென யாரோ கட்டிவிட்ட கதை வதந்(தீ )யாய் பரவி, குழந்தையை காமிராவில் சிறைப்படுத்த தயங்குவர். ஆனால், ஐந்து மாதம் ஆனதும் பாலும் செரிலாக்குமாய் கொழுக் மொழுக்கென வளர்ந்த குழந்தையை குப்புறப் படுக்கவைத்து புகைப்படமெடுத்து விடுவார்கள். அதுவும் ரம்பா போல் தொடையை காட்டியபடி லேசாக முளைத்த பால் பற்களைக் காட்டி, பொக்கை வாயில் சிரித்தபடி போஸ் தந்திருக்கும். குழந்தைக்கு வெள்ளி அரைஞான் கயிறும் கால் கொலுசும் போடாமல் விடுவது ஆகப்பெரும் தெய்வக் குத்தமாகிவிடும்.

குழந்தைக்கு ஒரு வருடம் ஆகும் முன்பே, முளைத்த அரை ஜான் தலை முடியில் ஆறு முழம் பூவைச் சொருகி, குழந்தை கதறக் கதற மாமா மடியில் உட்காராமல் திமிறி அழும். அப்படி அழுதபடியான அரை மொட்டை தலை புகைப்படமொன்று வீடுதோறும் அலங்கரிக்கும்.

பெண் குழந்தையெனில் பெரிய மனுஷியானால் அரைகுறையாகக் கட்டிய புடைவையிலோ தாவணியிலோ அட்டை மயில் மேல் அமர்ந்தபடியும், ஆண்டாள் கொண்டையுமாக ஓரிரு புகைப்படம் சர்வ நிச்சயம்.

பெண்களின் சீமந்த நிகழ்வெனில், மேடிட்ட வயிறோடு பட்டுப்புடைவையும், பூ ஜடையும் முன்பக்கமும் பின்பக்கமுமாக ஒரே ப்ரேமில் வரும்படியான புகைப்படங்கள் அந்த நாளைய பிரபலம்.

அந்நாளைய பெரிய வீடுகளில் ஜமீன்தார் போன்ற கம்பீரமான முறுக்கு மீசை கொண்ட ஆண் அமர்ந்தபடி இருக்க, அருகில் பண்டரிபாய் போன்று அடக்க ஒடுக்கமான பெண் புடைவைத் தலைப்பை பவ்யமாகப் பிடித்தபடி நிற்கும் புகைப்படங்கள் கூடத்தை அலங்கரிக்கும். அத்தகைய புகைப்படங்கள் பல பழைய வரலாறுகளைச் சொல்லாமல் சொல்லிப்போகும்.

ஒரு சில மனிதர்களுக்கு தன் வாழ்நாள் முழுவதும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வாய்ப்போ, வசதியோ கிடைத்திருக்காது. அவர்களின் வாரிசுகள் வைத்திருக்கும் கைகளால் வரைந்த புகைப்படங்கள் அவர்களின் ஏழ்மை மற்றும் வாழ்நிலையை படம் பிடித்துக் காட்டும். பழங்காலத்தில் இறந்த நபர்களின் தலையை துணியால் கட்டி உட்கார வைத்தும் புகைப்படம் எடுத்து வைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அது இறந்தவர் நினைவாக என்பதைத் தவிர, வேறு காரணமில்லை.

ள்ளி, கல்லூரி சென்ற பெண்கள் பெரிய பூப்போட்ட கறு நிற புடைவையோ அல்லது அதில் கிழித்த தாவணியோ அணிந்தபடி தோழிகளுடன் ஆசையாய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஸ்டியோவின் பெயருடன், தேதி குறிப்பிட்டு தொங்கிக் கொண்டிருக்கும். பார்க்கும்பொதெல்லாம், ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ என்ற பாடல் வரிகள் பின்னணியில் நினைவுக் குவியல்களாய் தோன்றி மறையும்.

ஆண்களெனில், ஹிப்பி தலையும், பெல்பாட்டம் பேண்ட் மற்றும் கட்டம் போட்ட சட்டைகளை அணிந்து ஒருவர் தோள் மீது ஒருவர் கைகளைப் போட்டபடி ஸ்டைலாக நின்று (அல்லது அப்படி நிற்பதாக நினைத்து) எடுத்திருக்கும் புகைப்படங்கள் சுவாரஸ்மானவை.

க்காலத்தைய புகைப்படங்கள் அனைத்துமே சொல்லும் சேதிகள் ஒன்றே. எவ்வித ஒப்பனையுமற்ற இயல்பான வெள்ளந்தி முகங்களும், சரியாக வாரப்படாத கலைந்த தலைகளும், கவனம் செலுத்தாத உடையலங்காரமும் எளிமையை மட்டுமே உணர்த்திச் செல்லும். அப்புகைப்படங்கள் எந்தப் பாசாங்குமற்று இருந்தாலுமே, அதற்குள் ஏதோ ஒரு உயிர்ப்பு மிதமிஞ்சி கிடப்பதாகவே தோன்றும்.

அக்காலத்தைய புகைப்படங்கள் பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய ஒன்றென்றால் அது சற்றுமே மிகையாகாது. பழைய புகைப்படங்களை பாதுகாத்து நமது வருங்கால சந்ததியினருக்கு நமது பழங்கால வாழ்வியல் முறைகள் குறித்து அறியச் செய்வோம்!

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...