0,00 INR

No products in the cart.

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

இவை எல்லாமே…
ந்த வீட்டில் சுவர் ஏறி குதித்து ஏன் திருடினாய்?”

ரசு ஆஸ்பத்திரியில் பிறந்த இரண்டு குழந்தைகளை மாற்றி வைத்தாயா?”

“சொந்த வீட்டிலேயே வீட்டு பத்திரமெல்லாம் திருடி மாத்தியிருக்க… இப்படி ஒரு எண்ணம் உனக்கு ஏன் வந்தது?”

ரண்டு பெண்களுக்குத் தாலி கட்டி, சேர்ந்து வாழறது என்னய்யா நியாயம்?”

ரு பெண்ணாய் இருந்து, உன் அம்மாவையே கொல்ல துணிஞ்சிட்டியே… என்ன தைரியம் உனக்கு?”

ன் மாமியாரை எப்படி உன் வழிக்குக் கொண்டுவந்தே?”

ப்படிய்யா இந்த மாதிரி கேடுகெட்ட ஜோக்கெல்லாம் எழுதுற?”

வை எல்லாமே சீரியல் பார்த்துதாய்யா!”

– வி.ரவிந்திரன், ஈரோடு

டீ எனும் பானம்…

1. உலகிலேயே மக்களால் மிக அதிகமாகக் குடிக்கப்படும் பானம், ‘டீ.’
2. டீ தாகத்தைக் குறைக்கும் ருசியான பானம். காபி, டீ குடித்தால் ‘டீ ஹைடிரேஷன்’ வரும் என்று சொன்னது போக, டீ குடித்தால் தாகம் எடுக்காது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
3. டீயின் அரோமா (மணம்) உடல் சோர்வைப் போக்கி, உடனடி தெம்பைத் தருகிறது.
4. பிளாக் டீ குடிப்பவர்களை இதய நோய் தாக்குவதில்லை.
5. பால், சர்க்கரை சேர்க்காத பிளாக் டீ உடல் எடையைக் குறைக்க பெஸ்ட் சாய்ஸ்.
6. டீயில் உள்ள புளோரைட் பல் வலிமைக்கு எனாமல் தேயாமல் பாதுகாக்க உதவுகிறது. தவிர, ஆண்டி பாக்டீரியல் ஏஜெண்டாகப் பயன்படுகிறது.
7. வீங்கிய கண்கள், கரு வளையத்திற்கு, ‘டீ பாக்’ ஓத்தடம் நல்ல நிவாரணி.
8. பர்ஃயூம் கலந்த டீபாக் ஒரு நல்ல ரெஃபிரஷர். பூச்சி வராமல் டிராய், பீரோக்களில் (Refresher) போட்டு வைக்கலாம்.
9. ‘சன் பர்ன்’ (Sun brun) காரணமாய் வரும் எரிச்சல் குறைய, டீ தண்ணீரை பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடமாக இல்லை, அந்த இடத்தில் டீ தண்ணீரை விட்டுக் கழுவினால் எரிச்சல் குறைந்து நிறம் மாறும்.
– பாலாஜிகணேஷ்
நல்லது ஐந்து!

  • உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் ஆகியன ஜீரணிக்க நேரமாகும். இதை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
  • வாழைத்தண்டை சமைத்து சாப்பிடும் நாட்களில் தயிர், மோர் சேர்க்காமல் இருப்பது நல்லது.
  • உடலில் உள்ள நோய்களுக்கு மருந்து சாப்பிடும்போது பத்தியம் இருக்க வேண்டிய நிலை வந்தால், அந்த நேரம் பூசணிக்காயைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
  • மாம்பழம் சாப்பிட்டவுடன் பால், எலுமிச்சை பழச்சாறு சாப்பிடுவது உடம்புக்கு மிக நல்லது.
  • கடுகு வெப்ப குணம் கொண்டது. இதனை அதிகமாகப் பயன்படுத்தாமல் அளவாகவே பயன்படுத்துவது நல்லது.
    – ஆர்.உமா, ஈரோடு
எறும்பைத் தின்னாத பறவை!

றும்பைத் தின்னாத பறவை நீண்ட நாள் உயிருடன் இருக்கும் என்றொரு நம்பிக்கை பண்டைக் காலத்திலிருந்தே நிலவி வருகிறது. இந்த நம்பிக்கை உருவான காலத்தில் எறும்பைத் தின்னும் மனிதர்கள் நீண்ட ஆயுள் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றொரு நம்பிக்கையும் நிலவி வந்தது. இப்படி எறும்பைச் சுற்றி எதிர்மறையான நம்பிக்கையையும் ஒரே காலகட்டத்தில் பிரச்சாரம் செய்திருந்தனர்.

இன்றும் எறும்பை உண்ணும் மலைவாழ் ஆதிவாசிகள் கண் பார்வையில் மிகவும் முன்னிலையில் உள்ளனர். எறும்பின் உடலில் அடங்கி இருக்கும் வைட்டமின் ஏ தான் இதற்குக் காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பறவைகளின் பாகத்துக்கு வரும்போது ஏன் இந்த மாறுபாடு என்ற கேள்வி எழுகின்றது. இது பறவையியல் நிபுணர்களையும், விஞ்ஞானிகளையும் பெரும் குழப்பத்துக்குள்ளாகியது.
அண்மையில் எறும்பைத் தின்னாத பறவை நீண்ட நாள் உயிருடன் இருப்பதைப் பற்றிய சில தகவல்களையும் ஆராய்ச்சியில் வெளியிட்டுள்ளனர்.

இப்பறவைகள் எறும்பைத் தின்னாமல் அவற்றை சிறகுக்குள் பாதுகாக்கின்றன. இங்ஙனம் இருநூறுக்கும் மேற்பட்ட இனப் பறவைகள் எறும்பை சிறகுக்குள் பாதுகாக்கவும், சிறகை எறும்புக் கூட்டில் விரித்து வைக்கவும் செய்கின்றன.

எறும்பின் உடலிலுள்ள ஃபார்மிக் அமிலம் பறவைகளின் சிறகுக்கடியில் வசிக்கும் பேன் முதலிய சிறு பிராணிகளை அழித்து விடுகிறது. இதனால் பறவைகளுக்கு நோய் நொடி அண்டுவது குறைகிறது. ஆதலால், எறும்பு தின்னாத பறவைக்கு நீண்ட ஆயுள் கிடைப்பதாக உறுதி கூறுகின்றனர்.
– இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்

வாய் சுத்தம்
தினமும் நாம் பயன்படுத்தும் டங் கிளீனர்கள் கடைகளில் குறைந்த விலையில், தரமற்ற தகரத்தால் தயாரிக்கப்பட்டவையாக இருக்கின்றன. எனவே, இவற்றை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதைப் பயன்படுத்துவதன் மூலம் நாக்கில் எரிச்சல், பல் வலி ஏற்படும். எனவே, நம் நாக்கில் சேர்ந்துள்ள வெள்ளைப் படலத்தை அகற்றுவதற்கு, டங் கிளீனருக்கு பதிலாக பல் தேய்க்கும் பிரஷ்ஷின் பின்புறம் இருக்கின்ற டங் கிளீனரை பயன்படுத்தலாம்.

நாம் தினமும் உபயோகப்படுத்தும் டூத் பேஸ்ட்டுகளில் பெரும்பாலும் ப்ளோரைடு மற்றும் மென்தாலும் கலக்கப்படுகிறது. மேலும், சில டூத் பேஸ்டுகளில் அதிக அளவில் மென்தால் சேர்க்கப்படுவதால், வாய் புத்துணர்ச்சி பெறும் என நினைத்துப் பலர் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், அதிகப்படியான டூத் பேஸ்ட்டுகளில் மென்தால் சேர்ப்பதால், இது வாய்ப்புண் ஏற்பட வழிவகைச் செய்கிறது. இவற்றைப் பயன்படுத்தாமல் இதற்கு பதிலாக, இயற்கை முறையில் தயாரித்த டூத் பேஸ்ட்டுகளைப் பயன்படுத்தலாம்.
– ஏ.எஸ்.கோவிந்தராஜன்

1 COMMENT

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...