0,00 INR

No products in the cart.

எண்ணெய்களும் குழைமங்களும்!

அழகோ அழகு – 9

அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா
 • முதலில் சருமத்திற்குத் தேவையான எண்ணெய்கள் பற்றிப் பார்ப்போமா? அநேகம் பேருக்கு எந்த எண்ணெய் தங்களுக்கு ஒத்துக்கொள்ளும், சரியான எண்ணெய்தான் உபயோகிக்கிறோமா என்பதே தெரிவதில்லை.வாரத்தில் ஒரு நாள் தலைக்கும், உடம்புக்கும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் நல்லது. எண்ணெய் தேய்த்து சிறிது நேரம் ஊறியபின் தலைக்கு சீயக்காயும், உடம்புக்கு பச்சைப்பயறு மாவும் பயன்படுத்திக் குளிக்கும் நம் பாரம்பரிய வழக்கத்தை மாற்றாமல் வைத்துக்கொள்வது நல்லது. நேரம் இல்லையென்று சொல்பவர்கள் தலைக்கும் முகத்துக்கும் மட்டுமாவது எண்ணெய் பயன்படுத்திக்கொண்டு, உடலுக்கு நேரம் கிடைக்கும்போது செய்யலாம்.நம் உடம்பிலேயே மிகவும் மென்மையானது முகச்சருமம்தான். எனவே, முகத்திற்கு ஆயில் உபயோகித்து அதன் மென்மை தன்மையைத் தொடர்ந்து பராமரிப்பது அவசியம்.
 • இயற்கையாகவே சீபம் (SEBUM) என்ற எண்ணெய் செபேஷியஸ் சுரப்பிகள் (SEBACEOUS GLANDS) மூலம் முகத்தில் சுரக்கும். ஆனால், சிலருக்குத் தேவையான அளவு சுரப்பதில்லையாதலால், அதை ஈடுகட்ட அவர்களுக்கு கூடுதலாக எண்ணெய் தேவைப்படும். ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு விதமான நன்மைகள் உண்டு.

………………………………………………

அன்பு வாசகீஸ்,

நமது மங்கையர் மலர் இதழில்
அழகுக் கலை நிபுணர் டாக்டர் வசுந்தரா
எழுதும் ‘அழகோ அழகு’ தொடரை தொடர்ந்து படித்து வரும் உங்களுக்கு, அழகு, மேக் அப், சருமப் பாதுகாப்பு சம்பந்தமான
சந்தேகங்கள் இருக்கக் கூடும்.

தங்கள் மனதில் தோன்றியிருக்கும் சந்தேகங்களை கேள்விகளாக மங்கையர் மலருக்கு எழுதி அனுப்புங்க. உங்களுக்காகவே பிரத்யேகமாக, பதில் அளிக்கக் காத்திருக்கிறார் வசுந்தரா.
கேள்விகளை இமெயில், [email protected], அல்லது mangayar malar facebook -ல் Messenger வழியாக அனுப்புங்க. கேள்விகளைக் கேளுங்க…. பதிலைப் பெறுங்க…அழகைக் கூட்டுங்க…

………………………………………………

 • பாதாம் எண்ணெய் இளமைத் தோற்றம் கொடுக்கும்.
 • மருத்துவ குணம் நிறைந்த வேப்பெண்ணெய் பருக்கள் வராமல் தடுக்கும்.
 • வறண்ட சருமத்திற்கு, குறிப்பாக குளிர் காலங்களில் ஏற்படும் வறண்ட சருமத்திற்கு சூரியகாந்தி எண்ணெய் மிக நல்லது. தலையிலிருந்து பாதம் வரை உபயோகிக்கலாம்.
 • விட்டமின்கள் C, A மற்றும் E கலந்த எண்ணெய் வகைகள் சரும ஊட்டத்திற்கு நல்லது.
 • பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றும் தலா ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
 • இயல்பிலேயே எண்ணெய் சருமம் உள்ளவர்கள் கொழுப்புச் சத்து குறைந்த DRY ஆயில் உபயோகிக்கலாம்.
 • 20மில்லி பாதாம் எண்ணெயுடன் தலா இரு சொட்டுக்கள் ரோஜா மற்றும் சந்தன எண்ணெய் கலந்து தடவினால், பருக்கள், சரும நிற மாற்றம் (PIGMENTATION) ஏற்படாது. ஃபவுண்டேஷன் (FOUNDATION) பயன்படுத்துவோர்கள் கூட இதை முதலில் தடவிப் பின்னர் ஃபவுண்டேஷன் போடும்போது சருமம் பாதிக்காது.
 • நல்லெண்ணெயுடன் 2 – 3 சொட்டுக்கள் தேயிலை மர எண்ணெய் (TEA TREE OIL) கலந்து பயன்படுத்தலாம்.

லைமுடிக்கு செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் (லேசாக சூடுபடுத்தியது) உபயோகித்தால் ரத்த ஓட்டம் கிடைத்து தலைமுடி நன்கு வளரும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்வதால் தலைமுடி செதில் செதிலாக ஆகாமலும், பொடுகு வராமலும் தடுப்பதோடு முடி கொட்டுவதும் நிற்கும். விட்டமின்கள் நிறைந்த எண்ணெய், முடி உடைவதைத் தடுக்கும்.

தலை முடிக்கு சாயம் பூசுவதாலும் (HAIR COLOURING), முடியை நேராக்குதலாலும் (HAIR STRAIGHTENING) சிலசமயம் முடி அதன் பளபளப்பையும், மிருதுத் தன்மையையும் இழந்து காணப்படும். இதைத் தவிர்க்க தொடர்ந்து எண்ணெய் பயன்படுத்தினால் வேர்க்கால்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைத்து, தலைமுடி பழைய நிலைக்குத் திரும்பும். மெகாடாமியா (MACADAMIA), ஆர்கன் (ARGAN), பாதாம் எண்ணெய் போன்ற எடை குறைவான எண்ணெய்களை உபயோகிக்கலாம்.

டுத்ததாக க்ரீம்கள் – நம் சருமத்திற்கு மிகத் தேவையான ஒன்று க்ரீம். சருமத்தை மிருதுவாகவும், வழவழப்பாகவும் வைத்திருக்க க்ரீம்கள் உதவுகின்றன. க்ரீம்களிலும் விட்டமின்கள் மற்றும் ஸன்ஸ்கிரீன் கலந்த க்ரீம் வகைகள் கிடைக்கின்றன. வறண்ட சருமம் உடையவர்கள் CLEANSING MILK, CLEANSING லோஷன் பயன்படுத்தலாம். இவை சரும அழுக்கை நீக்குவதோடு, புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

வெளிப்புற சரும ஊட்டத்திற்குத் தேவையான கொழுப்பு மற்றும் தண்ணீர் இரண்டுமே இவ்வகை க்ரீம்கள், CLEANSERS, லோஷன்கள் போன்றவற்றில் காணப்படுகிறது. சருமம் பளிச்சென்று இருப்பதற்கும், கரும்புள்ளிகள், பருக்கள், சருமத் தொய்வு, சுருக்கங்கள் இல்லாமல் இருக்கவும் அவரவர்களின் சருமத் தன்மைக்கு ஏற்ப தரமான பொருட்களை வாங்கி உபயோகிக்கலாம். அதேபோல், தலைமுடி பராமரிப்புக்கும் தகுந்த எண்ணெய் மற்றும் ஷாம்பூ, கண்டிஷனர் தேர்வு செய்து பயன்படுத்தலாம். பெயர் தெரியாத, காலாவதியாகிவிட்ட, தேதியிடப்படாத தரமற்ற பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பது அவசியம்.
தொகுப்பு : மங்கை ஜெய்குமார்

1 COMMENT

 1. அழகுக் கலை நிபுணர் டாக்டர் வசுந்தராவின் ஆ லாே சனை களைக் கடைபிடித்தால் புற அழகு மட்டுமல்ல நம் வனப்பு நம்மை வசீகரித்து அக அழகான மனஅழகை மகிழ்ச்சி யடையச் செய்யும்.
  து.சே ரன்
  ஆலங்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

0
‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். பகுதி - 7 ரஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லக்...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி... பகுதி -10 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல்... 1964 ஆம் ஆண்டு வந்த தேவர் பிலிம்ஸின் "வேட்டைக்காரன் "படத்தில் கேவி மகாதேவன் இசையில் கவியரசு...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

 பாகம் - 4   -சுசீலா மாணிக்கம்   திருக்குறளின் நான்காம் அதிகாரம் 'அறன் வலியுறுத்தல்' "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது  பொன்றுங்கால் பொன்றாத் துணை" பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப்...

இனியில்லை கடன்!

0
சென்ற வார தொடர்ச்சி... சிறுகதை: நாமக்கல் எம்.வேலு ஓவியம்: தமிழ் அதற்கப்புறம் ராமசாமியிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை.  எப்போது பணம் கொடுப்பாய் என்று எப்போவும் போல சோமசுந்தரமும் போன் போட்டு கேட்கவுமில்லை.  ஆபரேசன் நல்லபடியாய் நடந்ததா,...

குரு அருள் திரு அருள்!

பகுதி -2 -நளினி சம்பத்குமார் ஓவியம்; வேதா அனைத்தையும் அருளிடும் குருவின் பார்வை சமஸ்க்ருதத்தில் சுபாஷிதம் அதாவது நல்ல அர்த்தங்கள் பொருந்திய வாக்கியம் ஒன்று உண்டு. குருவின் பார்வை என்பது 1011 பார்வைக்குக் கூட ஈடாகாது, அதற்கும்...