0,00 INR

No products in the cart.

இயேசுநாதர் பொன்மொழிகள்

இயேசுநாதர் பொன்மொழிகள்!

 • வெற்றிகளை விட, வெற்றி மிகுந்த தோல்வி சிறந்தது!
 • பழிக்குப் பழி வாங்காமலும், பொறாமை கொள்ளாமலும் இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்!
 • பணத்தை நாடுபவன் முட்டாள், குணத்தை நாடுபவன் அறிஞன்!
 • தைரியமுள்ளவனால் மட்டுமே நேர்மையாக நடக்க முடியும்!
 • சிறு விஷயத்தில் தவறாக நடப்பவன், பெரிய விஷயத்திலும் தவறாகவே நடப்பான்!
 • சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்!
 • தலைவனாக இருக்க விரும்புகிறவனுக்கு ஊழியனாகவும் இருக்கத் தெரிந்திருக்க வேண்டும்!
 • சத்தியம் என்பது மன வலிமை. சாந்தம் என்பது மன அடக்கம்!
 • கோபமும் பொறாமையும் மனிதனைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவை!
 • ஒழுக்கமுள்ளவர்கள் உலகிற்கு ஒளியாவர்!
 • அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன். ஏனெனில், அன்பே கடவுள்!
 • அமைதிக்காக உழைத்து அமைதியுடன் வாழ்பவர்களே பாக்கியசாலிகள்!
 • அன்பு உள்ள இருதயத்தில், தூய்மை உடையவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆண்டவனைக் காணும் பாக்கியம் பெற்றவர்கள்!
 • நம்மில் ஒவ்வொருவரும் பிறருடன் பொய் பேசுவதைத் தவிர்த்துவிட்டு உண்மையே பேசுதல் வேண்டும்!
 • குழந்தைகளின் மழலை மொழியில் இருந்து விவேகம் ஏற்படுகிறது.
 • கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்!
 • உங்களைப் பகைக்கிறவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்!
 • சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்!
 • எந்த ஒரு மனிதரையும் அவரது முதுமை காலத்தில் புறக்கணியாதீர். நமக்கும் முதுமை உண்டு!
 • துயரப்படுபவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதல் அடைகிறார்கள்!
 • சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதத்தரித்துக் கொள்ளுவார்கள்!
 • இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள்!
  – ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி

கிறிஸ்துமஸ் துணுக்குகள்

 • ஜேம்ஸ் அரசர் பைபிளை மொழி பெயர்த்தார். மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த கற்கள் கொண்டு, 1700க்கும் மேலான குறிப்புகள் அதில் கூறப்பட்டுள்ளன.
 • ஆர்மீனியர்கள் ஆட்டு வடிவ கல்லறைக் கற்களைப் பயன்படுத்தினர். இயேசுநாதர் ஆட்டுக்குட்டியைக் கையிலேந்தி இருப்பதால் அந்த வடிவம் இருந்திருக்கலாம். இருப்பினும் சிலுவை சின்னத்தையே கிறிஸ்துவர்கள் கல்லறைக்குப் பயன்படுத்துகின்றனர்.
 • உலகிலேயே மிகச் சிறிய நாடான வாடிகன் நகரத்தின் பரப்பளவு 108.7 ஏக்கர்தான்.
 • ஆங்கிலேயர்கள் வெள்ளிக்கிழமையும், 13ம் எண்ணையும் தீமை விளைவிக்கக்கூடியதாகக் கருதுகிறார்கள். ஏனெனில், இயேசுநாதர் சிலுவையில் அரையப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை. அவர் காட்டிக் கொடுக்கப்பட்ட கடைசி விருந்தில் கலந்துக் கொண்டவர்கள் 13 பேர்.
  – எஸ்.ராஜம், திருச்சி
 • அமெரிக்காவில் கெண்டக்கியிலுள்ள மாண்டி காசினோ என்ற மாதா கோயில்தான் உலகில் மிகச் சிறிய மாதா கோயில். 1850ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் மூன்று பேர் மட்டுமே ஒரே சமயத்தில் தொழுகையில் ஈடுபட முடியும்.
 • லாஸ் ஏஞ்சல்ஸ் நகர அருங்காட்சியகத்தில் மிகப் பழைமையான ஒரு கிறிஸ்துவ வேத புத்தகம் உள்ளது. 8044 பக்கங்களைக் கொண்ட இந்த பைபிளின் எடை அரை டன். இதன் உயரம் 4 அடி, பருமன் 2 அடி, 9 அங்குலம் ரப்பர் எழுத்துகளைக் கொண்டு கையினாலேயே அச்சடிக்கப்பட்ட நூல் இது! அடேங்கப்பா…!
  – நிர்மலா தேசிகன்
 • பல்வேறு வகையான கிறிஸ்துமஸ் பொருட்களான ஸ்டார் விளக்கு, வண்ண வண்ண தோரணங்கள், ஜொலிக்கும் முத்து நூல்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், பரிசுகள் ஆகியவற்றின் வர்த்தகச் சந்தை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் சுமார் 80 ஆயிரம் மில்லியன் டாலர்களின் மதிப்பெனக் கூறப்படுகிறது.
  – ஆர்.மீனாலதா, மும்பை
 • 1923ம் ஆண்டிலேயே முதன்முதலில் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டது. விளக்குகள் பொருத்தப்பட்டு கிறிஸ்துமஸ் அன்று மாலை அதை ஜனாதிபதி திறந்து வைத்து, கூடி நிற்கும் மக்களிடம் சிறிது நேரம் உரையாற்றுவார். 1923ல் இதன் உயரம் 48 அடி. இதனுள் ரகசிய ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு 1932ல் கரோல் பாடல்கள் இசைக்கப்பட்டன. இதனால் மக்கள் இதை, ‘பாடும் மரம்’ என அழைக்கத் துவங்கினர். 1995ம் ஆண்டு முதல் சூரிய ஒளியை பயன்படுத்தி விளக்குகள் எரிய ஆரம்பித்தன. வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் மார்டின் லூதர் கிங் என்பவர்.
  – வத்சலா சதாசிவன், சென்னை
 • வாஸ்கோடகாமா தென் ஆப்பிரிக்காவின், ‘நேட்டால்’ நகரை கிறிஸ்துமஸ் தினத்தன்றுதான் கண்டுபிடித்தார்!
 • ரேடியத்தை கண்டுபிடித்த கியூரி தம்பதியினர் அதனை கிறிஸ்துமஸ் தினத்தன்றுதான் வெளியிட்டனர்.

  – சங்கரி வெங்கட், சென்னை

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...