0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்

‘பீஸ்ட்’ படத்தின் அரபிக் குத்துப்பாடல் கேட்டீங்களா?
– மணிமேகலை ராஜ், மதுரை

அடேயப்பா! என்ன கவித்துமான வரிகள்? நெஞ்சை அள்ளும் கற்பனை! ரசனை ததும்பும் கவிதைக்கு ஏற்ற ரம்யமான இசை!
தளபதி விஜய் + அனிருத் + கிரேட் பொயட் சிவகார்த்திகேயன் பெயர்கள் என்றென்றும்… ஸாரிங்க… இதுக்கு மேல பொய் பொய்யா எழுத பேனா ஒத்துழைக்க மாட்டேங்குது. புதுமைங்கிற பேர்ல ஒரே இரைச்சல்!
காலக் கொடுமையான பாடல்!  ஆனா, நான் கேள்விப்பட்டேன்…
நிஜமா இருந்தா சந்தோஷம்! கவிஞர் சிவகார்த்திகேயன் தான் எழுதும் பாடல்களின் சன்மானத் தொகையை, மறைந்த நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு அன்பளிப்பாகத் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். கேட்டிலும் ஒரு நன்மைன்னு ஆறுதல் பட்டுக்கலாம் மணிமேகலை!

கமல், ‘பிக்பாஸ் அட்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டாரே?
– வாணி வெங்கடேஷ், சென்னை

எப்பாவது, ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை, பாயசம், வடை, ஐஸ்க்ரீம், ஜாமூன்னு விருந்து வெச்சா, சாப்பாடு சுமாரா இருந்தாலும் ஆர்வமா இலை முன்னால உட்காரலாம்.

மூணு வேளையும் அதையே போட்டா? ‘வுட்ரா சாமின்னு ஓட வேண்டியதுதான்.

ஏதோ, விஜய் டீ.வில மவுசு போன அராத்துகளைப் பிடிச்சு நூறு நாள் வேலை திட்டத்துல போட்டாங்க… நாம்பளும் பார்த்துத் தொலைச்சோம்! 24X7ன்னு கலவரப்படுத்துனா… மக்கள் வெறுப்பாயிடுவாங்கன்னு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் கமலுக்கே தெரியாமல் போனதுதான் ஆச்சர்யத்தின் மேக்ஸ்!  ‘விக்ரம்’ ரிலீஸ் வேலையைப் பாருங்க கமல்ஜி!

சித்ரா ராமகிருஷ்ணாவுடன் தொடர்பில் இருந்த அந்த ஹிமாலய மர்ம யோகி யாராக இருக்கக்கூடும் அனுஷா?
– எஸ்.எஸ். கணேஷ், நவிமும்பை

பார்த்தீங்களா கணேஷ் ஸார்…!

என்ன ஒரு ட்ரிக்! இந்திய தேசியப் பங்குச் சந்தையின்
முதல் பெண் நிர்வாக இயக்குநராக அம்மணி சித்ரா, இருந்தபோது நடந்த ஊழல் என்ன, எவ்வளவு பணப் பரிமாற்றம், பயன் அடைந்தவர்கள் யார், பின்னணியில் யார்… யார்… இதைப் பற்றிப் பேசாமல், யார் அந்த சாமியார்னு ஆர்வமா பேசிக் கொண்டிருக்கோமே… அங்கதான் அவங்க புத்திசாலித்தனம் நிக்குது!

பூதாகரமான, ஊழலைத் திசைத் திருப்பவும் மக்களை ஏமாற்றவும், சித்ராவும், அவரது கூட்டாளி ஆனந்த் சுப்ரமணியமும் கட்டிவிட்ட கற்பனைக் கதாபாத்திரமே அந்த ‘ஷிஷெல்ஸ் தீவு சாமியார்!
(அப்ப, இ-மெயில் மெசேஜ்? நம்ம ஆனந்தாவேதான்!)

ஏதாவது ஒரு சினிமா பார்த்துக்கிட்டு இருப்போம்! நடுவுல லாஜிக் இடிக்கும்! ‘என்னடா?ன்னு ஆடியன்ஸ் யோசிக்கும்போதே, ஒரு கவர்ச்சி டான்ஸ் போட்டு ரசிகர்களைத் திசை திருப்பிடுவாங்களே…
அது மாதிரிதான்.

அந்த யோகியின் மெயில் ஐ.டி.யே விசித்ரம்! பரமம்பவித்ரம்!

‘ரிக் யஜூர் சாம @ அவுட்லுக்.காம்!’

நாலு வேதங்களில் ‘அதர்வணம் மிஸ்ஸிங்…! ஏன்னா அது மாந்த்ரீகம், மேஜிக் சம்பந்தப்பட்டதாம்!

“படிச்சவன் சூதும் வாதும் பண்ணா அய்யோன்னு போவான்…” என்றான் பாரதி.

சித்ரா மேடம், நிறைய திகில் அமானுஷ்யக் கதைகளைப் படிச்சுருப்பாங்களோ?!!

இந்த வாரப் பூங்கொத்து யாருக்கு அனுஷா மேடம்?
– லக்ஷ்மி ஸ்ரீநிவாசன், திருச்சி

சென்னையின் செஸ் புலி, சுட்டிப் பையன் பிரக்ஞானந்தாவுக்குத்தான்!

வயசு என்னவோ 16தான்! ஆனால், நடப்பு உலக சாம்பியனும், நம்பர் ஒன் சதுரங்க வீரருமான 31 வயது மேக்னஸ் கார்ல்செனை, அதுவும்
கறுப்பு நிறக் காய்களுடன் கூலா ஆடி ஜெயிச்சான் பாருங்க! உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி ஆகி, ஆன்லைன் ரேபிட் போட்டியில, ‘லாக் அவுட்’ பண்ணிட்டு எஸ்கேப் ஆயிட்டாரு!

“கார்ல்செனையே வீழ்த்திட்டியேப்பா! என்ன செலிப்ரேஷன் ஐடியா?’ன்னு  நடுவர்கள் கேட்டா…

“தூங்கப் போறேன்!”ன்னு சொல்றான் செம க்யூட்டா!

ஏன்னா அவன் ஜெயிச்சப்போ நள்ளிரவு மணி 2!

2 COMMENTS

  1. குட்டிப்பையனின் மெகா வெற்றி நம்மூர்
    சின்னஞ்சிறு பையன்களுக்கு சூப்பர் டானிக்.பிரக்ஞானந்தாவின் கலக்கலான விளையாட்டு அனைத்து துறைகளில்
    முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஒரு புத்துணர்வின் உந்துவிசையாகும்.
    து.சேரன்
    ஆலங்குளம்

  2. சித்ரா ராமகிருஷ்ணாவுடன் தொடர்பில் இருந்த இமாலய சாமியார் யார் என்ற கேள்விக்கு ஆசிரியரின் பதில் மிகவும் ரசிக்கும்படி இருந்தது . சாமியார் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றும் சித்ரா ஆசிரியர் கூறுவது போல் நிறைய அமானுஷ்ய கதைகள் படித்திருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

அன்னையர் தினத்தை சிறப்பித்து வந்த சலுகைகளில் தங்களைக் கவர்ந்தது எதுவோ? -ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம் “சிக்குபுக்கு, சிக்குபுக்கு ரயிலே’ ஆஃபர்தான்! சிறு குழந்தைகளுடன் இரவு ரயிலில் பிரயாணிக்கும்போது, அவர்களைத் தூங்கவைக்க போதிய இடம் இல்லாமல் அவஸ்தைப்படுவோம் இல்லையா? தனியாகப் படுக்கவைத்தால்...

அன்புவட்டம்!

டி.வி.யில் வரும் சமையல் குறிப்புகளுக்கும், பத்திரிகையில் வரும் சமையல் குறிப்புகளுக்கும் என்ன வித்தியாசம்? -கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி டி.வி. ல பார்த்து சமைக்கும்போது (அதுவும் ஏகப்பட்ட கமர்ஷியல் பிரேக்குப் பிறகு...!) கவனமா பார்த்து, எல்லாத்தையும் ஞாபகத்துல...

அன்புவட்டம்!

காலம் காலமாய் கச்சேரி கேட்டாலும், கல்யாணி, காம்போதி அலுக்கவில்லையே... எப்படி? -சீனு சந்திரா, சென்னை கல்யாணி, காம்போதி இரண்டுமே கனமான ராகங்கள்... ஐ மீன் ஹை க்ளாசிக்கல். அதனால் அவை தரும் நேர்வள அதிர்வலைகளின் வீர்யமும் மகத்தானவையாம்....

அன்புவட்டம்!

பெண்கள், பல துறைகளில் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள் என்று பெருமையுடன் பேசிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், குடும்பத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பெண்களின் நிலைமை என்னவென்று சொல்வது? -வத்சலா சதாசிவன், சென்னை ‘அதிசயப்...

அன்புவட்டம்!

நடிகை ரோஜா ஆந்திரப் பிரதேசத்தின் அமைச்சர் ஆகிவிட்டாரே!! - வாசுதேவன், பெங்களூரு நான் ரோஜாவை ஸ்ரீலதாவாகச் சந்தித்தது ‘செம்பருத்தி’ காலக்கட்டத்தில்... சென்னை தி.நகரில் உள்ள விஜயராகவன் சாலையில் உள்ள ஃபிளாட் ஒன்றில் சந்தித்தேன். (பேட்டி, டைரக்டர்...