0,00 INR

No products in the cart.

திடக்கழிவு மேலாண்மை எங்கிருந்து துவங்குகிறது?

– மஞ்சுளா சுவாமிநாதன்

ங்கையர் மலருக்காக, திடக்கழிவு மேலாண்மையைப் பற்றி செயல்முறை விளக்கத்தோடு சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் இந்த 9 பெண்கள் செய்து காண்பித்தனர்.

முனியம்மா, செல்வி, புஷ்பாதேவி, மைதிலி, சிவகாமி, ஜோதி, ஜெயா, மஞ்சுளா மற்றும் இவர்களது மேற்பார்வையாளர் உஷா, ஆகியோர்தான் இந்த தூய்மைப் படையின் வீரர்கள்.

2- பின் 1- பேக்

வர்கள் பச்சை நிறத் தொட்டி, சிவப்பு நிறத் தொட்டி, ஒரு பெரிய பை என குடியிருப்பின் அனைத்து வீட்டார்களுக்கும் கொடுத்துள்ளனர்.

மக்கும் குப்பையான காய்கறி குப்பை, உணவு பொருட்கள் எல்லாம் பச்சை நிற தொட்டியில் சேகரிக்க வேண்டும்.

சிவப்புத் தொட்டியில், உடைந்த கண்ணாடிப் பாட்டில்கள், மருத்துவ கழிவுகள், டையபர், சானிட்டரி பேட் என மறுசுழற்சி செய்ய இயலாத மக்கா குப்பையை சேகரிக்க வேண்டும்.

பையில் மறுசுழற்சி செய்யக்கூடிய மக்கா குப்பை – பேப்பர், அட்டைப் பெட்டி, பால் கவர், பிஸ்கெட் கவர் என அனைத்து இத்யாதி சாமான்களும் சேகரிக்க வேண்டும். இவர்கள் சேகரிக்கும் மூன்று விதமான குப்பைகளையும் முதலில் எடை போட்டு எழுதிக் கொள்கின்றனர்.

மக்கும் குப்பையிலிருந்து உரம்

க்கும் குப்பையை, ஒரு அகலமான, சாய்வான தட்டில் கொட்டி, அதன் அசுத்த நீர் வடிந்த பின்னர் அதனோடு மரத்தூள் சேர்த்து நன்கு கிளறுகிறார்கள்.

அடுத்த கட்டமாக அந்தக் குப்பையை ஒரு அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுக்கிறார்கள்.
கடைசி கட்டமாக அந்த குப்பையை அகண்ட வாய் கொண்ட ஒரு தொட்டியில் போட்டு, காற்றோட்டமாக வைத்து, அவ்வப்போது கிளறுகிறார்கள். இவ்வாறு செய்து வர 45 நாட்களில் நல்ல உரம் தயார்!
இதுபோல மூன்று தொட்டிகள் வைத்து சுழற்சியில் மக்கும் குப்பையை உரமாக்குகிறார்கள்.

மக்கா குப்பையிலிருந்து பணம்

172 வீடுகள் கொண்ட அந்த குடியிருப்பில், ஒரு நாளுக்கு சராசரியாக 30 கிலோ மக்கா குப்பை சேர்கிறது. இந்த மக்கா குப்பையை ஒரு பிரத்யேக அறையில், அட்டைகள், பால் கவர்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், பிஸ்கட் கவர்கள் என மேலும் பிரித்து வைக்கின்றனர்.

இவ்வாறு பிரித்து வைக்கும் குப்பையிலிருந்து மட்டும் மாதம் ரூபாய் 3000 வருமானம் ஈட்டுகிறது அந்த குடியிருப்பு அசோசியேஷன். அந்த பணத்தை அவர்கள் இந்த பெண்களுக்கே ஒரு நிதிபோல் சேகரித்து வைத்து, தேவைக்கேற்ப பிரித்துக் கொடுத்து உற்சாகப்படுத்துகின்றனர்.

மக்கா குப்பை மற்றும் மறுசுழற்சி செய்ய முடியா குப்பை

றுசுழற்சி செய்ய முடியாத அசுத்தமான குப்பைகளை ‘தேவையற்றவை’ என்று ஒதுக்கி விடுகிறார்கள். அதனை மாநகராட்சி குப்பை வண்டி எடுத்துச் செல்கிறது.

இவர்கள் குடியிருப்பில் செய்வதுபோல நம் வீட்டில் சேரும் குப்பையை கவனமாக, நேர்த்தியாக பிரித்தோமானால், இந்தத் ‘தேவையற்றவை’ பிரிவில் சேரும் குப்பைகளை பெரிதும் குறைக்க இயலும். இதனால் ஒருவரது வீட்டிலிருந்து குப்பை மேட்டிற்கு செல்லும் குப்பையின் அளவானது கணிசமாகக் குறைகின்றது.
இந்தத் தூய்மைப் படை தளபதிகளிடம் பேசினோம்…

குப்பை சேகரிப்பின் சாதனைகள், சோதனைகள் என்ன?

சாதனைகள்:

மது நாட்டைச் சுத்தமாக வைக்க எங்களுடைய பங்கும் ஓரளவிற்கு இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதைத் தவிர நாங்கள் குப்பையை எடை பார்த்து, பகுத்தறிந்து போடுவதால் எங்களுக்குள்ளும் ஒரு விழிப்புணர்வு வருகிறது. இதனால் நாங்களும் எங்கள் வீடுகளில் குப்பைகளை பகுத்தறிந்து குப்பை வண்டிகளில் போடுகிறோம். எங்கள் அக்கம் பக்கத்தினருக்கும் எடுத்துச் சொல்கிறோம்.

சோதனைகள்:

க்கும் குப்பையை கூடியவரை சீக்கிரம் போட்டுவிட வேண்டும். இரண்டு மூன்று நாட்கள் சேகரித்து போட்டால் அவற்றில் புழு பூச்சி ஓட ஆரம்பித்து விடும். துர்நாற்றமும் அடிக்கும். இந்தத் தேவையற்ற குப்பையான டையபர், சேனிட்டரி பேட் ஆகியவற்றை ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றி போட வேண்டும். இல்லையேல் அதை எடுக்கும் எங்களின் நிலை மிகவும் சிரமமாகிவிடும்.
முக்கியமாக குப்பைத் தொட்டிகளை அடிக்கடி கழுவ வேண்டும். இல்லையேல் அதில் ‘மேகோட்ஸ்’ எனும் ஒருவகை புழு நெளிய ஆரம்பித்துவிடும். குப்பை போடுகிறவர்கள் ‘நாம் இந்தக் குப்பையை எடுப்போமா?’ என்று நினைத்தாலே பாதி பிரச்னை வராமல் தவிர்க்கலாம்.

மேலும் சில சுவாரசியமான செய்திகள்:

தூய்மை படையின் தளபதி உஷா மேலும் சில சுவாரசியமான ‘திடக்கழிவு மேலான்மை’ பற்றிய யுக்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்…

இங்கே சேகரிக்கும் குப்பையின் வகைகள் எங்களுக்கு நன்கு தெரியும். பழைய துணிகள் மற்றும் பழைய செருப்புகளை ‘தேவையற்றவை’ பிரிவில் சேர்க்காமல், அதனை எடுத்துச் செல்ல ஒரு தொண்டு நிறுவனத்தை அடையாளம் கண்டு அவர்களுக்கு கொடுக்கிறோம். அந்த பொருட்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவற்றை வாங்கிக்கொண்டு பயனுள்ள பொருட்களாக அவர்கள் மாற்றிக்கொள்கின்றனர்.

அதேபோல மலிவு விலை நெகிழி பைகள், அதாவது இந்த பிஸ்கெட் கவர்கள் எல்லாம் இந்த காயிலாங்கடை காரர்கள் எடுத்துச் செல்ல மாட்டார்கள். முதலில், அவற்றை மாநகராட்சியிடம்தான் ஒப்படைத்தோம். அவர்களும் அதை தார் ரோடு போட பயன்படுத்தினர். இருந்தும்… எவ்வளவு தான் அதற்கு பயன்படுத்த போகிறார்கள்? அவை திரும்பவும் குப்பை மேட்டையே சென்றடையும் என்ற நிலை. அதனால் அவற்றை இப்போது சிமெண்ட் பேக்டரிகளுக்குத் தருகிறோம்.

அதுபோல e-waste எனப்படும் எலெக்ட்டிரானிக் கழிவுகளை வேறு ஒரு நிறுவனத்திற்குத் தருகிறோம். பெயின்ட் டப்பா, பிளாஸ்டிக் கூடைகள் போன்றவற்றை செடிகள் வைக்க, புத்தகங்கள் வைக்க என்று மறுபடியும் உபயோகிக்கிறோம்.

‘இந்த சானிட்டரி நாப்கின் உபயோகத்தைக் குறைக்க ‘மென்ஸ்டுரல் கப்ஸ்‘ பயன்படுத்தலாம்’ என்பது போல் விழிப்புணர்வு வகுப்புகள் எங்கள் குடியிருப்பில் நடத்துகிறார்கள்.

மேல் கூறியவற்றை போல எங்கெல்லாம் குப்பையை, குப்பை மேட்டிற்கு அனுப்பாமல் குறைக்க முடியுமோ அதையெல்லாம் நாங்கள் செய்து வருகிறோம்.

இவர்களுடன் பேசிய பிறகு …

“சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான். சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்,” பாடல் வரிகள் நினைவில் வர, அட நாமும் திடக்கழிவு மேலாண்மை செய்ய வேண்டும் மற்றவர்க்கும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உறுதி கொண்டு… அதன் முதல் கட்ட முயற்சியாக இதோ எங்கள் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம்!

 

 

2 COMMENTS

  1. மிகவும் அருமையான பகிர்வு. குப்பை வாங்க
    வரும் பெண்களின் நிலையையும்,அவர்களின் சோதனையும்
    சாதனையும், குப்பைகளை பிரித்து அவற்றின் பயன்களையும் விளக்கி அறிய
    வைத்தமைக்கு மிகுந்த நன்றி மேடம்.

  2. திடக்கழிவு மேலாண்மை பற்றி அறிந்து கொண்டால் மட்டும் போதாது. அவற்றை முறையாக ஒவ்வொருவர் வீட்டிலும்
    பின்பற்றுவது அவசியம். இதில் பெண்களின் பங்கு மிக முக்கியம்.

மஞ்சுளா சுவாமிநாதன்http://www.joyousassortment.com
மஞ்சுளா சுவாமிநாதன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். பெரும்பாலும் ஆங்கில பத்திரிகைகளில் எழுதிய இவர், இப்பொழுது தமிழிலும் சமூகம் சார்ந்த கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். சரித்திரத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...