0,00 INR

No products in the cart.

மெகா சீரியல் காமெடிகள்!

FB பகிர்வு! மங்கையர் மலரில் பதிவு!

ண்டையை பொளந்து ஆபரேசன் பண்ணுறாங்க..ஆனா தலைமுடி அப்படியே இருக்குது..தலைய மழிக்காம மூளை ஆபரேசன் பண்ணுற டாக்டரை வச்சிருக்கறாங்க மூளை கெட்ட சீரியல் பசங்க!
– சகிதா முருகன்

விருந்தினராக நம் நெருங்கிய சொந்தங்கள் ‘வீட்டுக்கு வரட்டுமா?’ என்று கேட்கக்கூட முடியாது, நம் வீட்டில் விருந்துக்கு வந்தாலோ, கண்கள் மெகாத் தொடரை பார்த்து பேசும். கஞ்சா, அபின், மது, ரேஸ், மொபைல் போன் ஆகியவற்றை விட முதலில் அடிமைப்படுத்துவது மெகா தொடர்கள்..
– ஸ்ரீவித்யா பிரசாத்

முடிஞ்சா அந்த ரோஜா சீரியலை நிறுத்தச் சொல்லுங்களேன். வீட்டில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் தருவதே இந்த சீரியல்கள்தான்! எல்லா சீரியலும் பெண்களை வில்லத்தனமாகவே காட்டி காச் மூச்சென்று கத்த விடுவதே வேலையா போச்சு!
– வசந்தா கோவிந்தன்

வீட்டில் இருக்கும்போது கூட (தூங்கி எழுந்திருக்கும் போது கூட) எப்போதும் பட்டுப்புடவை, நிறைய நகைகள் போட்டுக் கொண்டு இருப்பார்கள் . ஒரு சீரியலில் ஒருவரைக் கடத்தி வைத்து 6 மாதம் ஆகிறது. இன்னும் அவரைத்தேடி யாரும் வரவில்லை. அவரைக் காட்டுவதும் இல்லை. உண்மையை சொல்லவரும் நேரத்தில் நாயகன், நாயகியோ எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டு அதே உண்மையை மீண்டும் தேடி அலைவது. டாக்டராக இருப்பவர் ஆஸ்பத்திரி பக்கமே போகாமல் வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு இருப்பது, இவையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத காமெடிகள்.
– ராதிகா ரவீந்திரன்

**மெகா சீரியல் காமெடிகள் பற்றி– -ஒன்றா? இரண்டா? எடுத்துச் சொல்ல?
**எல்லாமே ‘காப்பி கேட்’தான்.
**இதுல ஜெயில் காட்சி என்றால், அதிலும் அதேதான். ஆட்கள் மட்டும் வேறு-வேறு.
**இதே போலவே கடத்தல் காட்சிகள். எளிதாக யூகிக்க முடியும்.
**சீரியலுக்கு சீரியல் வித்தியாசப்படும் — மாமி வில்லி/அத்தை வில்லி/அப்பா வில்லன்-
**திருமணமான ஹீரோவை, இன்னொருத்தி விரும்பி தில்லாலங்கடி வேலை செய்வது என ஒரே காமெடி மயம்.
**அப்படியும் ஏன் பாக்கறோம்னா? எப்பவாச்சும் அரட்டை அடிக்க, எழுத / பேச Use செய்யலாம்னுதான்.
– மீனலதா

குழந்தைகள் வளர்ந்து எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும், சீரியல் கதாநாயகன், கதாநாயகிக்கு முடி நரைக்கவே நரைக்காது.அதுவும் கதாநாயகிக்கு சான்ஸே இல்லை.

யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால், தீச்சட்டி தூக்குவது, அங்கப் பிரதஷணம் செய்வது. தீ மிதிப்பது.

குழந்தைகள் எதிரிலேயே சண்டை போடுவது. குழந்தைகளின் வயதுக்கு மீறின வசனங்கள் பேசுவது… இவையெல்லாம் மெகா சீரியலில் வரும் காமெடி அபத்தங்கள் என்று எனக்குத் தோன்றும்.
– ஜெகதாம்பாள் நாராயணசாமி

னித மனங்களில் துவேஷம் வளர்த்து, குடும்ப உறவுகளை சின்னாபின்னமாகும் சூழல் உருவாக்கும் மெகா சீரியல் களை நாங்கள் பார்ப்பதே இல்லை. இதுல விமர்சனம் வேறா?
– லலிதா சண்முகம்

ரு சீரியல்ல காசிக்கு போன தாத்தா ஆளையே காணும்.. மூத்த மருமகளுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை கருப்பபை இல்லைனு கொஞ்ச நாளைக்கு முன்னால்( ஒரு 6 மாதம் முன் இருக்கும்) கதை ஓட்டினாங்க.. இப்போ சித்தர் மருத்துக்காக அண்ணன் தம்பிலாம் துரோகம் பன்னிக்கற மாதிரி காட்டுறாங்க..

இன்னொரு சீரீயல்ல 6 வயசுல காணமால் போறாங்க ரோஜா..
அனு 2 வயசுல காணாமல் போறாங்க.. ஆனால் இரண்டு பேரும் ஒரே தேதியில் ஆசிரமத்தில் வந்து சேர்ந்தாங்களாம்.. லாஜிக்கே இல்லாமல் போகுது…
– ஜெயந்தி சதீஷ்

டி‌வி சீரியல்கள் பார்ப்பதே இல்லை. வாசித்து மகிழ நல்ல நல்ல புத்தகங்கள் கை வசமிருக்க‌..‌கண்களையும்,மனதையும் கெடுத்துக் கொள்வதில் விருப்பமில்லை.
– விஜி சம்பத்

ன்னத்தை சொல்ல , பொழுது போக்கிற்காக ஆரம்பித்த சீரியல் ஒவ்வொரு சேனலிலும் ஒரே மாதிரி குடும்பத்தை சிதைக்கும் விதமான கதைகள்.

துரோகிகளின் கூடாரமாக வெட்டு குத்து குடும்பத்தை பிரிப்பதற்கு விதவிதமான சூழ்ச்சி இதை தொடர்ந்து பார்ப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் சிந்தித்து பாருங்கள்.
-வி.பவானி

மெகா தொடர் தொடங்கியது என்றால் அதில் வரும் குடும்பத்திற்கு கெட்டகாலம் தொடங்குகிறது என்று அர்த்தம்.
– சித்ரா குமார்

ப்போதும் அடுத்தவ புருஷனையே ஆட்டயை போடுவது.பிறருக்கு கேட்குற மாதிரியே ரகசியத் திட்டம்(?!) போடறது. கல்யாணமானாலும் முதலிரவு நடக்க விடாம பல மாசம் தள்ளிப் போறது.சண்டைக் காட்சிகளில் நன்றாகவே நடிப்பது.பாடல் காட்சிகளில் அல்லது ரொமான்ஸ் சீன்களில் வராத ரொமான்ஸில் உருகுவது. இவையெல்லாம் மெகா சீரியல் காமெடிகள்தான்.
– விஜி முருகானந்தன்

மெகா சீரியலை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த என் மாமியார் இறந்து பல வருடம் முடிந்தும் அந்த சீரியல் முடியவில்லை. இப்படி எத்தனை முதியவர்கள் மெகா சீரியல் முடிவு தெரியாமலேயே ஏக்கத்துடன் விண்ணுலகில் இருக்கிறார்களோ?
– உஷா முத்துராமன்

சினிமாவில் ஹீரோ போல் சீரியலில் ஹீரோயின். அவளால் முடியாத விஷயமே கிடையாது. வானத்தை வில்லாய் வளைப்பாள். மலையைத் தூசாய் நினைப்பாள். வில்லி போடும் திட்டங்கள் எல்லாம் டெலிபதியில் கதாநாயகிக்குத் தெளிவாகத் தெரிந்து விடும். எப்படி என்று கேள்வி கேட்கக்கூடாது. வில்லியை விட படு பயங்கரமாக யோசித்து அவள் திட்டங்களைத் தவிடுபொடி ஆக்குவாள். சீரியலில் வரும் ஆண்கள்அனைவரும் சரியான அசமஞ்சங்களாகவும் கையாலாகதவர்களாகவும் இருப்பார்கள். நல்ல காமெடி போங்கள்!
– ஹேமலதா சீனிவாசன்

முழு நேரமும் வீட்டில் ஏதாவது அல்லது யாரையாவது பற்றி புரளி சொல்வது. சொந்த வீட்டுக்கு செல்வது போல அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன் செல்வது. நடைமுறைக்கு ஒவ்வாத ஒப்பனை. எல்லோர் வீட்டிலும் கட்டாயம் ஒரு வில்லி அல்லது வில்லன் இப்படி கூட யோசிப்பார்களா என நினைக்க வைக்கும் நிகழ்வுகள்…
– பானு பெரியதம்பி

Vijay TV le ஒரு படிச்ச மேதாவி தாலி கட்டிட்டான் னு ஒரு ரௌடி கூட வாழுறாளே, கண்றாவி கான்சப்ட். ஜட்ஜோட பெண்ணாம் பாரீன் ரிடர்ன் வேற, ஆனா கலாசாரத்த காப்பாத்துறாளாமாம். இதை ஒரு எபிசோட் பார்த்துட்டு ஓடினவதான் நான்….
– நிர்மலா எஸ்.

ரே மாதிரி கதைகள்…தாலி சென்டிமெண்ட்…மாமியார் மருமகள் பழி வாங்குதல்…என்ற அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் தடைகளைத் தாண்டி எத்தனையோ தூரம் வந்தபிறகும் அவர்களை பிற்படுத்தும் போக்கை முதலில் இந்த சேனல்கள் நிறுத்த வேண்டும்.
– மதுரா

ரு சீரியலில் ஒரு பெண் குழந்தைக்கு தலையில் ஆண்கள் மாதிரி ‘விக்’ வைத்தவுடன் அவனை பையன் என்றே நம்புகின்றனர்… இது மாதிரி நம்மை முட்டாளாக்கும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன சீரியல்களில்…
– பாலகிருஷ்ணன் நன்னுசாமி

சொந்த சேனல் சீரியல்களிலிருந்தே சுடுவது.லாஜிக் இல்லாத காட்சிகள்.நெகடிவ் உணர்வுகள்.ஆண்கள் டம்மிகளாக இருப்பது..பிற்போக்குத்தனமான கருத்துகள் பெண் படிக்ககூடாது,புருஷன்செத்தால் வெள்ளைச்சேலை கட்டுவது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வளவு இருந்தும் இந்த சீரியல்கள் மீதான ஈர்ப்பு ஏன் குறைவதில்லை. உளவியல் மருத்துவர்கள் சொல்லலாமே.
– சக்தி அருளானந்தம் சக்தி

ரைத்த மாவையே அரைக்கம் சீரியல்கள் பார்ப்பதை விட்டு பல வருடங்கள் ஆகி விட்டதன. இதுவே காமெடிதான்!
– சுதா ரவி

ந்த பாக்யா… ஒரு வார்த்தை பேசுறதுக்கே ரெண்டு நிமிடம் ஆறது. ஆமாங்க….. னு சொல்லறதுக்குள்ள, நம்ம பொறுமை போயிடறது. ‘ரோஜா ‘சீரியலை யாரு பார்க்கறாங்கனு, ஜவ்வு மாதிரி இழுத்துட்டே போறாங்க?..ராத்திரி படுத்து தூங்கறப்போ கூட, மூஞ்சி நிறைய மேக்கப், கழுத்து நிறைய நகை, பட்டுப் புடவை…. தாங்கலைடா சாமி….. வில்லிகள் கண்ணை உருட்டறதைப் பார்த்தா.. சிரிப்பு தான் வரும்.
– ஜெயா சம்பத்

பொழுது போக்கிற்காக நமது வரவேற்பறைக்கு வந்த சீாியல் மெதுவாய், மெகாவாக, மாறி ,அனைவா் மனதையும் கொள்ளை கொள்ளாமல், ஸ்லோபாய்சன் கணக்காய், குடும்ப உறவுகளை சிதைக்கிறது! பெண்களே பெண்களுக்கு எதிாியாய், மகாகேவலம் அறங்கேறி வருகிறது, ஆண்கள் குடிக்கு அடிமையானது போல், பெண்கள் சீரியலுக்கு அடிமையாகிவிட்டாா்கள். இதெல்லாம் சீரியல் மேட்டர் இல்லீங்க… சீரியஸ் மேட்டர்!
– நா. புவனாநாகராஜன்

ந்து வரிகளில் உங்கள் குமுறல்களை கொட்டி தீருங்கள் என்று கூறுகிறீர்களே உங்களுக்கே இது நியாமா படுகிறதா? ஒரு மிகப்பெரிய கட்டுரை அல்லவா எழுதச் சொல்லி இருக்க வேண்டும்! அழுகை என்ன , ஆர்ப்பாட்டம் என்ன,ஒரே ஆம்பளையை அதுவும் கல்யாணம் ஆனவனை இரண்டு மூன்று பேர் என்னைத் தான் கட்டிக்கணும் இல்லைனா உன் குடும்பத்தை வேரோடு அழிச்சிடுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதும், தூங்கும் போது கூட மேக்கப்புடன் இருப்பதும், சீரியல்களில் மட்டும் கூட்டுக்குடும்பம் இருப்பதும் ( நிறைய பேர் இருந்தால் தானே அதில் இரண்டு வில்லிகள் கண்களை உருட்டி உருட்டி பேசி நம்மை பயமுறுத்த முடியும்), சினிமா போல சண்டை காட்சிகள், பாடல் காட்சிகள், ரொமான்ஸ் சீன்கள் வருவதும், இது போதாதென்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து ஒரு மணிநேரம் ஒவ்வொரு சீரியல்களாக வரிசைகட்டி போடுவதும்… அப்பப்பா தாங்க முடியலே!
– கிருஷ்ணவேணி

இந்த வாரம் நமது வாசகீஸ் அதிகமாக குமுறி தீர்த்ததால்,
மெகா சீரியல் காமெடிகள்…
Part II அடுத்த வாரமும் தொடரும்…

1 COMMENT

  1. ஒவ்வொருரின் குமறல்களும் படிப்பதற்கு
    ஆர்வமாகத்தான் இருந்தது. சிரிப்பாகவும் இருந்தது.

Stay Connected

261,755FansLike
1,915FollowersFollow
7,230SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...