0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

 • எனக்கொரு முகராசி உண்டு!

நான் சந்திக்கும் பலரும் உடனடியாக என்னுடன் பழகிடுவாங்க என்பதோடு, அடுத்த கால்மணி நேரத்திலேயே தங்களை அமுத்திக் கொண்டிருக்கும் மனக்குறையை என்னிடம் பகிர்ந்தும் கொள்வார்கள்.

பணம் காசு கேட்டோ… வேறுவிதமான உபரி உதவிகள் கோரியோ அல்ல… ஜஸ்ட் ஒரு எமோஷனல் லெட்அவுட்! அம்புடுதேன்!

 • அன்றைக்கும் அப்படித்தான்… ஏதோ பிளாஸ்டிக் சாமான் வாங்க
  சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தேன். முதல் தளத்தில் இருந்த
  கடை ஊழியை, சில பொருள்களைத் தேர்வு செய்ய உதவினாள். அப்புறம் என்ன தோணுச்சோ… நான் எதுவும் கேட்காமலேயே…

“கல்யாணமாகி நாலு வருஷமாச்சு; இன்னும் கரு தரிக்கலை.
எந்த டாக்டர பார்க்கிறதுன்னே குழப்பமா இருக்கு அக்கா… டெஸ்ட் பண்ணா எல்லாமே நார்மலாதான் இருக்கு! மாமியார் வீட்டுல ரொம்ப ப்ரஷர் போடறாங்க அக்கா!” கண்களில் நீர் கட்டியது.

“கர்ப்பரக்ஷாம்பிகைய வேண்டிக்கோம்மா… திருச்செந்தூர் முருகனை வேண்டிக்கோ.. ஸ்ட்ரெஸ் இல்லாம இரு… தானா பொறக்கும்!
இப்ப எல்லாருக்குமே லேட் ஆகுது!”ன்னு எனக்குத் தோணினது
எதையோ சொன்னேன்னு வெச்சுக்குங்க!

கீழே இறங்கும்போது “என்னவோ என் கஷ்டத்தை உங்கக்கிட்ட சொல்லிட்டேன். கீழே போய், பில் போடற இடத்துல எதுவம் சொல்லிடாதீங்க!”னு பயந்தாள்.

“அதெல்லாம் சொல்வேனாம்மா? டோன்ட் வொர்ரி!” என்று தோளைத் தட்டிவிட்டு வந்தேன்.

***

இதுபோல உங்களுக்கும் நடந்திருக்கும்… ரயில் பயணத்தில், மருத்துவமனை லாபியில், கோயில் பிராகாரத்தில், பார்க்கில்… நாம் தனியாக இருக்கும்போது பல பெண்கள் தங்கள் சொந்தக் கதையை சோகத்துடன் சொல்லி வெப்பப் பெருமூச்சு விட்டிருப்பார்கள்.

ஏன் இவங்க ஒரு ‘X, Y, Z’ இடம் தங்கள் பிரச்னையைச் சொல்ல வேண்டும்? அவங்கப் பிரச்னைக்கு சரியான, உடனடித் தீர்வு அவங்கக்கிட்டயே இல்லாதபோது, நம்மால என்ன செய்ய முடியும்? ஒரு கருங்கல் சுவர்கிட்ட சொன்னாலும், நம்மகிட்ட சொன்னாலும் ஒரே பலன்தான்! என்ன நாம்ப கொஞ்சம் கருணையோட ரியாக்ஷன் காட்டுவோம்! அவ்வளவுதான்!

அப்ப ஏன் சொல்றாங்க?

அவங்களுக்கு இரண்டு ‘காதுகள்’ தேவை!! அவர்கள் கொட்டுவதை, மனசாரக் கேட்டு, ‘உச்சு’ கொட்டி இரண்டொரு நம்பிக்கை வார்த்தை சொல்லும் அன்பு இதயம் தேவை!

நம்முடைய இரண்டு காதுகளின் அமைப்பையும் சேர்த்து வெச்சுப் பாருங்க. இதயம் போன்ற ஒரு வடிவம் கிடைக்கும்.

பெண்களும் குழந்தைகளும் தங்கள் புலம்பலை, மனக் குமுறலை யார் ஆழ்ந்த அனுதாபத்துடன் கேட்கிறார்களோ, அவர்களை
மனதால் நெருங்குகிறார்களாம்!

அல்லது தான் யாரை மனத்தால் நெருங்க முயல்கிறாரோ அவரிடம் தனது அந்தரங்கத்தைச் சொல்லவும் துணிகிறார்களாம்!

அப்ப ஏன் மூன்றாவது நபரிடம் கவலைகளைக் கொட்டணும்?

உறவினர்களிடம் சொன்னால் நகைப்புக்கு இடமாகி விடக் கூடும். அது ‘சர்க்குலர்‘ மாறி சுற்றிச் சுற்றி உருமாறி வந்து பிரச்னையைத் தூண்டிவிடக்கூடும்.”

நண்பர்களிடம் சொன்னால், “போர்!” என்று ஒதுங்கி ஓடிவிடுவார்கள்.
‘க்ரைபேபி’ என்று கேலி செய்வார்கள்.  பிள்ளைகளிடம் சொன்னால், “எனக்கே ஆயிரம் பிரச்னை!” என்று ஆரம்பிக்கும்போதே, அலுத்துக் கொள்வார்கள். பெற்றோர்களிடம் சொல்லலாம்தான்! வயதானக் காலத்தில் அவர்கள் கவலைப்படுவார்களேன்னு தயக்கம் வந்துவிடும்.

புருஷன்கிட்ட சொன்னா, “மனுஷனை நிம்மதியா விடுறியா? சும்மா நை…நை…!” ஒரே டயலாக்கில் வாயை அடைக்கும் சாமர்த்தியம்!

அதனால்தான் கண்ணில்படும் ‘யாரோ, எவரோ‘விடம் அந்த நிமிஷத்துக் கவலையைச் சொல்லி கொஞ்சம் ஆசுவாசம் அடைகிறது பெண் மனம்!

***

சில பள்ளிச் சிறுமிகள், இளம் பெண்கள், தங்களது உடல், மனம், குடும்பம் சார்ந்த பிரச்னைகளை தோழர்கள், ஆசிரியர், கோச், ஜிம் மாஸ்டர், குருமார்கள், ஏன் ஆட்டோ டிரைவரிடம்கூட லேசு பாசாகப் பகிர்ந்து கொள்வது இந்த ‘கம்பரஷன்‘ உணர்வால்தான்!

உடனே அந்த ஆண்கள், அந்தப் பெண்கள் மீது நிஜமாகவே அக்கறை உள்ளவர்களாகியோ, அல்லது போலியாகப் பாசம் காட்டியோ, பெண்களின் மனத்தை ஆகர்ஷிப்பதைப் பார்க்கிறோம்.

அதை ‘Benevolent Love’ என்கிறார்கள் மனவியலாளர்கள்!

***

பள்ளம் தேடி வெள்ளம் ஓடுவது போல ஆறுதல் தேடி உள்ளம் ஓடுவது நமது இயல்பு!

எனவே, எனதருமை பெற்றொர்களே, குறிப்பாக ஆணினமே… உங்கள் தாயோ, மகளோ, சகோதரியோ, மனைவியோ, எதையாவது சொல்ல வந்தால் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்!

அவர்களது தேவைகளை, உணர்வுப் புலம்பலை, உளமாரச் செவிமடுங்கள்!

இல்லை என்றால் யாராவது மூன்றாவது நபர் ஆகர்ஷித்து, ஆக்ரமித்து, அபகரித்த பிறகு, “என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக்கட்டி”ன்னு சோகக் கீதம் பாட வேண்டியிருக்கும்.

உங்கள் Internal இதயம் உள்ளிருக்க.. உங்கள் காதுகள் external  இதயம் ஆகட்டும்! ஏன்னா… உங்கள் இதயத் துடிப்புகளை விட ரகசியமானவை…

நுட்பமானவை பெண்ணின் மன உணர்வுகள்!

1 COMMENT

 1. கல்யாணம் ஆன ஆண்மகன் தனக்கு குழுந்தையில்லை என்பதை பெரிதாக யாரிடமும் எடுத்துரைப்பதில்லை. ஆனால் பெண்ணால் அப்படியிருக்க முடியாது. காரணம் அவளுக்கு கொடுக்கப்படும் அழுத்தம்தான்! குழந்தை பிறப்பு என்பது கணவன்-மனைவி இருவரின் உடல்நிலை சம்மந்தப்பட்டது. மனைவி மட்டும் அதற்கு முழுப் பொறுப்பு கிடையாது. இதை எல்லோரும் உணரும் வகையில் அழகாக, தெளிவாக ‘ஒரு வார்த்தை’யில் எடுத்துரைத்த மேடத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள்.
  எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன்,
  லால்குடி.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

“டர்ர..டர்ர்... டர்ர...” டெலிப்ரின்டரில் செய்திகள் மடிந்து மடிந்து சீராக விழும். அதை வாகாகக் கிழித்து, எடிட்டோரியல் டெஸ்க்கில் உள்ளவர்களுக்குப் பங்கிட்டுத் தருவார்கள். ஆங்கிலத்தில் இருக்கும். அந்தச் செய்திகளைத் தமிழ்ப்படுத்திச் சுடச்சுட முந்தித் தருவது எங்கள்...

ஒரு வார்த்தை!

என்னுடைய உறவினர் ஒருவர் மும்பையிலிருந்து எங்க வீட்டுக்கு வந்திருந்தார். எழுபத்தைந்து வயதைக் கடந்திருந்த அவருக்கு இலேசாகத் தலைச்சுற்றல் வரவே, “ரத்த அழுத்தப் பரிசோதனை செஞ்சுக்கறேன்” என்றார். நானும் அவசரத்துக்கு அருகில் இருந்த எம்.பி.பி.எஸ்....

ஒரு வார்த்தை!

கேரளா, தமிழ்நாடு, ஆந்திரான்னு... (லாட்டரிச் சீட்டு இல்லீங்க.... இது வேற மேட்டர். கொஞ்சம் சீரியஸ்!) தினசரி நம்பப் பொண்ணுங்க தில்லா, எப்படியோ நியூஸைப் பிடிச்சுடறாங்கப்பா! ************** கேரளாவில் சமீபத்துல நடந்த கூத்து இது. கல்யாண...

ஒரு வார்த்தை!

இன்னிக்கு கல்யாண மார்க்கெட்டுல இருக்குற எல்லா பெண்களும் சொல்லி வெச்சா மாதிரி கேக்குற விஷயம், “என்னோட ஹப்பி, என்னை ‘caring’ஆ பார்த்துக்கணும்... எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அப்படியே துடிச்சுப் போயிடணும்... என் மேல...

ஒரு வார்த்தை!

அது ஒரு காலேஜ் ஹாஸ்டல். அங்கே நூறு மாணவியர் தங்கிப் படித்து வந்தனர். அந்த விடுதியில், காலை உணவு என்னத் தெரியுமோ? ரவை உப்புமா! வாரத்துக்கு இரண்டு நாளோ, மூணு நாளோ இல்லை......