
வாழைப்பழம் அழுகிப்போகாமல் இருக்க, வாழைக் குலையை படத்தில் காண்பது போலகட்டித்தொங்க விட்டால் அதிக நாள் வரை நன்றாக இருக்கும். நான் எப்போதும் அதிகம் பழுக்காத, காயாக இருக்கும் வாழப் பழங்களை வாங்கி தொங்கவிடுவேன்.
ஒரு டஜன் வாங்கினால் கூட அது தீரும் வரை அழுகாமல் இருக்கும். அமெரிக்காவில் இதற்கு ஸ்டான்ட் கூட கிடைக்கிறது.
–கங்கா ராமநாதன், சென்னை
எள்ளு, வேர்க்கடலை, பொட்டுக்கடலை (உடைச்சகடலை) இவை மூன்றையும் சம பங்காக எடுத்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை, கொதிக்கவைத்து, வடிகட்டிய வெல்லப்பாகில் கலந்து, கொஞ்சம் நெய், மற்றும் லேசாக வறுத்த துருவிய தேங்காயை சேர்க்கவும். பின் கெட்டியானதும் உங்களுக்கு பிடித்தமான வடிவத்தில் பிடித்துக் கொள்ளவும். 15 நிமிடத்தில் சுவையானஆரோக்கியமான இனிப்பு தயார்.
–கங்கா ராமநாதன், சென்னை
……………………………………..
ஊத்துக்காடு கவி என்கிற நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதரை அறியாதவர் இல்லை. அவரது உபந்யாசத்திலிருந்து எனக்கு பிடித்த ஒரு வரி – "அத்தினத்திற்கும் ஓட்டைகைக்கும் ஆயிரம் காதம் ஆனாலும் நடக்குதையா சேலை வியாபாரம்." உபந்யாசத்தில் எங்கே வந்தது சேலை வியாபாரம்? என்று உங்களுக்கு தோனலாம். அதன் விளக்கம் உங்களை மேலும் வியப்பில் ஆழ்த்தும்.
துரியன் சபையில் பாஞ்சாலி இரு கை உயர்த்தி கண்ணா காப்பாற்று என்று சொல்லி அரற்றிய போது, கண்ணன் துவாரகையில் இருந்து சேலை அனுப்பியதை தான் உபந்யாசகர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தினம் என்றால் அஸ்தினாபுரம். ஓட்டைகை என்றால் துவாரகை. 'ஆயிரம் காதம்' என்பது அஸ்தினாபுரத்திற்கும் துவாரகைக்கும் உள்ள தூரம். கண்ணன் துவாரகையிலிருந்து சேலை கொடுத்ததைத் தான் இவ்வளவு சுருக்கமாக சொன்னார் நமது கவி.
-பாரதிராஜன் , சென்னை.
……………………………………..
வெற்றிலையில் நீர்ச்சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் 'சி'உள்ளது.
மேலும் இதில் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.
மருத்துவ குணம் கொண்ட வெற்றிலை
சரும அழகை காக்கும் வெற்றிலை
தொகுப்பு – சுந்தரி காந்தி, சென்னை