வீட்டிற்குள்ளேயே பிட் ஆக இருக்க 6 வழிகள்!

வீட்டிற்குள்ளேயே பிட் ஆக இருக்க 6 வழிகள்!
Published on
– ஆர். மீனலதா, மும்பை

அதென்ன வீட்டிற்குள்ளேயே?

"வெளில சில்லுனு இருக்கு! வெளில சூடா இருக்கு! என்று கூறியவண்ணம் தினசரி வாக்கிங், ஜாகிங் செல்பவர்களில் பலர் அநேக நாட்கள் சோம்பல் பட்டு வீட்டிற்குள்ளேயே பொழுதைக் கழிப்பார்கள்.

சோம்பேறித்தனம் வராமல், செய்கின்ற உடற்பயிற்சி தடைப்படாமலிருக்க, வீட்டிற்குள்ளேயே, பலவகை பயிற்சிகளை 30 – 40 நிமிடங்கள் மேற்கொண்டால் புத்துணர்ச்சி ஏற்படும்.

அவை எந்தமாதிரியான பயிற்சிகள்?

ஸ்கிப்பிங்: பள்ளி நாட்களை நினைவு படுத்தக்கூடிய விளையாட்டு. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விளையாடுவதுண்டு. குதித்து – குதித்து ஸ்கிப்பிங் விளையாடுகையில் கால்கள், கைகள் மற்றும் உடலுக்கு நல்லதொரு பயிற்சி கிடைக்கும்.

நடனம்: தினசரி செய்யும் பயிற்சிகளிலிருந்து மாறுபட்டதொன்று. இயல்பான உடற்பயிற்சி பிடித்த பாட்டை மொபைலில் கேட்டவாறே, தெரிந்தவகையில் நிதானமாக ஆடலாம். நடனம் நன்கு தெரிந்து இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. கை – கால், முகம், இடுப்பு, உடல் அசைவுகளை செய்தாலே போதும். உடலிலுள்ள அதிக கலோரிகளை எரிக்க உதவும்.

யோகா: யோகா மேட் அல்லது பாய்விரித்து அதிலமர்ந்து மூச்சுப்பயிற்சி மற்றும் சில எளிய ஆசனங்களை செய்தால் மனம் அமைதியடையும்.

க்ளீனிங்: வீட்டிற்குள் Mopping செய்வது, தூசி தட்டுவது, அலமாரிகளிலுள்ள துணிமணிகள் மற்றும் புத்தகங்களை ஒழுங்குபடுத்துவது போன்றவைகளைச் செய்கையில், உடலுறுப்புகள் ஃபிட் ஆக இருக்கும். க்ளீனிங்கும் ஆகும்.

யுடியூப்: இதன்மூலம் அநேக விஷயங்களை அறியலாம். தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் எனலாம். இடுப்பு, வயிறு ஆகியவற்றிலிருக்கும் அதிக சதைகைளக் குறைக்க, தசைகளில் வலுவைக் கூட்ட, நுரையீரல்களின் சக்தியை மேம்படுத்த, தொடைகளுக்குப் பயிற்சியளிக்க என பல்வகை உடற்பயிற்சிகளை யுடியூப் வழியாக கற்று மெதுவாக செய்யலாம். வாரத்தில் 2-3 நாட்கள் செய்தால் போதும்.

எட்டு நடை: இது மிகவும் பயன்தரக்கூடிய ஒன்றாகும். எட்டு வடிவில் முடிந்தவரை நடப்பது நன்மை பயக்கும். Ear Phone வழியே பாட்டு கேட்டவாறு வெளியில் நடப்பதை மாதிரி வீட்டினுள்ளும் 8 நடை போடலாம்.

குளிர்காலம் ஆகட்டும், வெய்யில் காலமாகட்டும், உடலையும் உள்ளத்தையும் வீட்டிற்குள் இருந்தபோதும், பிட் ஆக வைத்துக்கொள்ள மேற்கூறிய பயிற்சிகள் நிச்சயமாக உதவும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com