0,00 INR

No products in the cart.

அன்பு வட்டம்!

முகஸ்துதி செய்பவர்களை எப்படி அணுக வேண்டும் அனுஷா?
– எஸ். பாலகிருஷ்ணன், மதுரை

தை ‘முகஸ்துதி’ன்னு ஏன் நினைக்கறீங்க பாலா? நம்பள மோடிவேட் பண்றாங்கன்னு சந்தோஷப்பட்டுங்கங்களேன்!

முகஸ்துதி எல்லாமே நயவஞ்சகமானது இல்ல; சில சமயம் மனப்பூர்வமான எளியப் பாராட்டாவும் இருக்கலாமே… நம்ப காதுல ஒரு ஸ்பூன் தேன் ஊத்துவதால, அந்த நபருக்கு என்ன பயன்னு கொஞ்சம் யோசிச்சா போதும்… ‘க்ளு’ கிடைச்சுடும்…

நேர்மையான, கனிவானப் பாராட்டுகளுக்கு இந்த உலகமே மயங்கி நிற்கும்போது, நாம்ப மட்டும் என்ன லார்ட் லபக்குதாஸா? முகஸ்துதி செய்றவங்களை, நீங்களும் “ரொம்ப நல்ல பாராட்டுறீங்கன்னு” கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே திருப்பிப் பாராட்டிட்டுப் போங்க பாஸ்! அதுக்கெல்லாம் ஜி.எஸ்.டி. போட மாட்டாங்க!

************************

‘ஜல்ஸா’ – படம் பார்த்தாச்சா?
– கமலா பாண்டியன், மதுரை

ச்சு! ஆச்சு!! நல்ல சஸ்பென்ஸ் சினிமாவுக்கு ‘ஜல்ஸான்னு பேரு வைப்பானேன்? வன்மையாகக் கண்டிக்கிறோம் டைரக்டர்!

சிவாஜி நடிச்ச ‘எதிரொலி’ படம் பார்த்திருப்பீங்க. நேர்மையான வக்கீல், சந்தர்ப்ப சூழ்நிலையால, ஒரு குற்றத்தைச் செஞ்சுட்டுப் படம் முழுக்கப் புழுவாய்த் துடிப்பார்!

அதே முடிச்சுதான்! வித்யாபாலனுக்கு கனக் கச்சிதமாகப் பொருந்தும் கதை! வித்யாபாலன் ஒரு பிரபல டீ.வி. ஆங்கர். நீதி, நியாயம்னு இருக்குற கொள்கைத் திலகம்… அவங்க கார்ல, நடுநிசியில, எதிர்பாராதவிதமா இளம்பெண் ஒருத்தி மோதி விபத்து ஏற்பட்டு விடவே, விளைவுகளுக்குப் பயந்து அதை மூடி மறைச்சுடறாங்க… அந்தப் பொண்ணு வேறு யாருமில்ல, வித்யாவோட மூளை வளர்ச்சிக் குன்றிய மகனை, தாய் போல நேசிக்கும் சமையல்காரியின் செல்ல மகள்!

வித்யாவின் மனசாட்சி உறுத்தியதா? சமையல்காரி பழி வாங்கினாளா? ஓ.டி.டி.யில் பார்த்து அறிக! பை தி வே, ‘ஹிட் அன்ட் ரன்’ அப்படியொன்றும் பெரிய குற்ற மில்லையே மேடம்! அதற்குப் போய் பிரபலப் பெண்மணி, அதுவும் தைரியமான ஜர்னலிறா்ட் பயப்படுவானேன்?

மற்றபடி, பாத்திரமறிந்து இயல்பாய் நடித்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்து… குறிப்பாக வித்யாவின் ஸ்பாஸ்டிக் சைல்டாக நடித்திருக்கும் சூர்யா… சூப்பர்யா!

************************

சமீபத்தில் படித்த விநோதமானச் செய்தி?
– சீனு சந்திரா, சென்னை

கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவில், ஒப்லாபுரா என்ற கிராமம் இருக்கிறது. இங்குள்ள ஒரு காகம், அதுக்கு என்ன பிரச்னையோ, விளையாடும் சிறுவர்கள், மோட்டார் சைக்கிளில் விரையும் இளைஞர்கள், ரேஷன் கடை வாசலில் நிற்கும் பெண்கள் என யாரையும் விட்டு வைக்காமல் விரட்டி விரட்டிக் கொத்திவிட்டு பறந்து விடுகிறதாம்! ஜனங்க எல்லாரும் தலை, முதுகு, முகம்னு கொத்து வாங்கி உள்ளூர் மருத்துவமனைக்குப் போனா, டாக்டரும், நர்ஸும்கூட பிளாஸ்டரோட நிற்குறாங்களாம்! எல்லாம் காக்காய் தந்த பரிசு!

“டேய்… ஒத்தைக் காக்காடா! இந்தா தலையில துண்டு கட்டிட்டிக்கிட்டுப் போ!”ன்னு அலர்ட் செய்ற அளவுக்கு பரிதாபம் டு தி கோர் ஆகிவிடவே… கோயில்ல குறி கேட்டிருக்காங்க.

“வருஷா வருஷம் கிராமத்து எல்லைச் சாமியான ஆஞ்சநேயருக்குப் போடற பூசைய மறந்துட்டீங்க… அதனால திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யுங்க!”ன்னு பூசாரி சொல்லவே, திடீர் பூஜை நடத்தப்பட்டிருக்கு! என்ன அதிசயம்?
மறுநாளிலிருந்து அந்த காக்காயைக் காணோமாம்!

(காகம், சனிபகவானின் வாகனம். ஆஞ்சநேயரைக் கும்பிடும் பக்தரை, சனி தொந்தரவு செய்ய மாட்டார் என்பது ஜோதிட நம்பிக்கை!)

************************

“பத்து நிமிடத்தில் உணவு டெலிவரி”என்று அறிவித்த ஜோமடோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க சென்னை போக்குவரத்து போலீஸ் முடிவு செய்திருக்கிறதாமே?
-ஜெயலட்சுமி, கோவை.

 • ஆறு மாதத்தில் போன்  strength ஐ அதிகப்படுத்துகிறது..
 • 60 டிகிரியில் கூட குளிர்ச்சி தரும்..
 • வெறும் ஒரு சலவை யில் விடாப்படியான கறை..
 • 99 சதவிகிதம் கிருமிகளை அழிக்கும்..
 • பொடுகு திரும்ப வரவே வராது…
  இப்படியெல்லாம் கூட தான் விளம்பரம் செய்றாங்க..

அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மைன்னு நமக்கு தெரியாதா??

பத்து நிமிஷத்துல லிஃப்ட் ஏறி ஃபிளாட் கண்டு பிடிக்கறதே கஷ்டம்..

பிளீஸ்…  காமெடி பண்ணாதீங்க ஜோமடோ…

1 COMMENT

 1. துன்பத்துக்கு கர்த்தா சனீஸ்வரர் பார்வை நம் மீது படாமல் இருக்க அனுமர் பக்தனாகும் நல்ல யாே சனை தந்த அனும்மாவுக்கு காே டி நமஸ்காரம்.
  து.சே ரன்
  ஆலங்குளம்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

அன்னையர் தினத்தை சிறப்பித்து வந்த சலுகைகளில் தங்களைக் கவர்ந்தது எதுவோ? -ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம் “சிக்குபுக்கு, சிக்குபுக்கு ரயிலே’ ஆஃபர்தான்! சிறு குழந்தைகளுடன் இரவு ரயிலில் பிரயாணிக்கும்போது, அவர்களைத் தூங்கவைக்க போதிய இடம் இல்லாமல் அவஸ்தைப்படுவோம் இல்லையா? தனியாகப் படுக்கவைத்தால்...

அன்புவட்டம்!

டி.வி.யில் வரும் சமையல் குறிப்புகளுக்கும், பத்திரிகையில் வரும் சமையல் குறிப்புகளுக்கும் என்ன வித்தியாசம்? -கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி டி.வி. ல பார்த்து சமைக்கும்போது (அதுவும் ஏகப்பட்ட கமர்ஷியல் பிரேக்குப் பிறகு...!) கவனமா பார்த்து, எல்லாத்தையும் ஞாபகத்துல...

அன்புவட்டம்!

காலம் காலமாய் கச்சேரி கேட்டாலும், கல்யாணி, காம்போதி அலுக்கவில்லையே... எப்படி? -சீனு சந்திரா, சென்னை கல்யாணி, காம்போதி இரண்டுமே கனமான ராகங்கள்... ஐ மீன் ஹை க்ளாசிக்கல். அதனால் அவை தரும் நேர்வள அதிர்வலைகளின் வீர்யமும் மகத்தானவையாம்....

அன்புவட்டம்!

பெண்கள், பல துறைகளில் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள் என்று பெருமையுடன் பேசிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், குடும்பத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பெண்களின் நிலைமை என்னவென்று சொல்வது? -வத்சலா சதாசிவன், சென்னை ‘அதிசயப்...

அன்புவட்டம்!

நடிகை ரோஜா ஆந்திரப் பிரதேசத்தின் அமைச்சர் ஆகிவிட்டாரே!! - வாசுதேவன், பெங்களூரு நான் ரோஜாவை ஸ்ரீலதாவாகச் சந்தித்தது ‘செம்பருத்தி’ காலக்கட்டத்தில்... சென்னை தி.நகரில் உள்ள விஜயராகவன் சாலையில் உள்ள ஃபிளாட் ஒன்றில் சந்தித்தேன். (பேட்டி, டைரக்டர்...