0,00 INR

No products in the cart.

‘குடி பாட்வா’ பண்டிகை!

– ஆர். மீனலதா, மும்பை

ஸ்ரீராமபிரான், சீதாப்பிராட்டியார் மற்றும் லட்சுமணன் சகிதம் 14 வருட கால வனவாசம் முடிந்து அயோத்தி வந்து பட்டம் சூட்டிக் கொண்ட தினமென்றும்,

சத்திரபதி சிவாஜி மகாராஜா போரில் எதிராளியை வென்று தனது வெற்றி வாகையை கொண்டாடும் விதத்தில் இதை ஆரம்பித்தார் என்றும்,

பிரம்ம தேவன் இவ்வுலகை படைத்த நாளென்றும் அழைக்கப்படும்
‘குடி பாட்வா’ பண்டிகை மராட்டிய மாநிலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும்.

குடி பாட்வா, யுகாதி, செட்டி சந்த், நவ்ரே, சம்வதார் பாட்வா என பல்வேறு பெயர்களில் பலவகை இனத்தினரால் அழைக்கப்படும். இந்நன்னாள் சைத்ர மாதத்தின் முதல் நாளாகும்.

ஒரு அறுவடை முடிந்து, மற்றொன்று ஆரம்பமாகும் தினத்தில், கிராமப்புற மக்கள் காலையில் வெறும் வயிற்றில் கொஞ்சம் வேப்பிலைக் கொழுந்தைச் சாப்பிடுவது வழக்கம். சிலர் வேப்பிலைக் கொழுந்துடன் வெல்லம், புளி சேர்த்து லேகியம் மாதிரி அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடுவதும் உண்டு. உடலிலுள்ள ரத்தத்தை சுத்திகரித்து, உடலை வலுவடையச் செய்ய இது உதவும் எனக் கூறப்படுகிறது.

‘குடி பாட்வா’ அன்று பெண்களும், குழந்தைகளும் அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடையணிந்து, வாயிலில் வண்ணக் கோலங்களைப் போடுவார்கள். வீட்டு வாயிலில் மாவிலைத் தோரணம் கட்டி பூக்களால் அலங்கரிப்பார்கள்.

அக்னி தேவதைக்கு வாசனை மிக்க ‘Davana’ (மரிக்கொழுந்து) இலையைப் போட்டு வணங்குவார்கள். இது விஷ்ணு பகவானிற்கு அர்ப்பணிப்பதாக ஐதீகம்.

வீட்டு வாயிலில் அல்லது ஜன்னலில் ‘குடி’ வைப்பது முக்கியமாகும். கொடி மாதிரி இருக்கும் குடி விக்டரியைக் குறிப்பதாகும்.

குடி பாட்வா – குடி செய்யும் முறை:-

முதலில் நல்லதாக ஒரு மீடியம் சைஸ்  மூங்கில் குச்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். பார்டர் இருக்கும் மஞ்சள், பச்சை, சிகப்பு, நீலம் போன்ற கலர்களில், 5 – 6 மடிப்பு மடிக்க வேண்டும். பின்னர் இதைப் பிரித்துவிட, பாவாடை போல விரிந்து அழகாக காணப்படும். இதன் மேல் பகுதியை கொசுவம் மாதிரி ஒன்றாக்கி ரப்பர் பேண்ட் போட வேண்டும். பாவாடை மாதிரி விரிந்து இருக்கும் துணி நடுவழியாக மூங்கில் குச்சியைச் செருகி அதன் மீது சிறிய காப்பர் செம்பு அல்லது குடுவை போல இருக்கும் பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்து சிகப்பு – மஞ்சள் நிறப்பூக்கள், மாவிலைக் கொத்து கொண்டு சுற்றி அலங்கரிக்க வேண்டும்.

இப்போது குடி ரெடி. இதை வீட்டு வாயில், ஜன்னல்களில் வைப்பது முக்கியம். பார்ப்பதற்கு மங்களகரமாக இருக்கும் இந்த குடி, குடி பாட்வா அன்று அனைத்து மராட்டிய மக்கள் வீடுகளிலும் வைக்கப்பட்டிருக்கும். புது வருடத்திற்கான வரவேற்பு.

ஸ்பெஷலாக பூரி – ஸ்ரீகண்ட், பூரண்போளி என விருந்து அமர்க்களப்படும்.

குடி பாட்வா ‘ஸ்பெஷல் ஸ்ரீகண்ட்’டை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். எப்படி என்று பார்க்கலாமா?

ஹோம் மேட் ஸ்ரீகண்ட்:

தேவை: நல்ல கெட்டியான புளிப்பில்லாத தயிர் – 5 கப், பொடி செய்த சீனி – 1¼ கப், ஏலப்பொடி – 1 டீஸ்பூன், குங்குமப்பூ –  சிறிது, வெதுவெதுப்பான பால் –
1 டேபிள்ஸ்பூன், ஃட்ரை ப்ரூட்ஸ் (பொடி செய்தது)- ¼ கப்.

செய்முறை: முதலில் தயிரை ஒரு மஸ்லின் துணி அல்லது பெரிய கைக்குட்டையில் வைத்து கட்டி 2 -3 மணி நேரங்கள் தொங்கவிட, நீர் வடிந்துவிடும். இதை ஒரு ஃபெளலில் போட்டு, கட்டி இன்றி நன்கு மசிக்க வேண்டும்.

வெதுவெதுப்பான பாலில் குங்குமப் பூவைக் கலந்து மசித்த தயிரில் விட வேண்டும். பொடி செய்த சீனி, ஏலப்பொடி சேர்த்து மிக்ஸ் செய்து, மேலே பொடி செய்த ட்ரை ஃப்ரூட்ஸ், 3 – 4 குங்குமப்பூ போட்டு அலங்கரித்து வைக்க வேண்டும்.

சூடான பூரியுடன் இதைச் சேர்த்து சாப்பிட சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும். ஸ்ரீகண்ட் டை சாப்பாட்டிற்குப் பின் Dessert ஆகவும் சாப்பிடலாம்.

2 COMMENTS

  1. ‘குடி பாட்வா’ பண்டிகை என்றால் என்ன, அது கொண்டாடப்படும் விதம் போன்றவற்றை முதன் முதலில் இப்போதுதான் தெரிந்து கொண்டேன், சூப்பர்! கட்டுரை எழுதிய மீனலதா அவர்களுக்கு பாராட்டையும், வெளியிட்ட மங்கையர் மலருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    ஆர்.வித்யா சதீஷ்குமார்,
    பள்ளிக்கரணை.

  2. ‘குடி பாட்வா’ பண்டிகை பற்றி அறிந்து
    கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மீனலதா
ஆர். மீனலதா, தொலைபேசி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். விருதுகள் பல பெற்றவர். சிறந்த நாடக நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், சினிமா, இசை, கவிதை, சமையல், Ad.supervision, விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்கும் ஆல்ரவுண்டர். நிகழ்ச்சி அமைப்பாளரும்கூட.. பழகுவதற்கு இனிமையான பண்பாளர். பலருக்கும் முன்னோடியாக விளங்குபவர். மங்கையர் மலரின் மும்பை நிருபர். உற்சாக ஊற்று.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

-ஜி.எஸ்.எஸ். டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம்,...

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான...

யானைகளை மனிதர்களிடமிருந்து காப்பதுதான் எனது நோக்கம்! 

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஓவியம்; தமிழ் யானைகளின் ராணி என்றழைக்கப்படும் பார்பதி பருவா, உலகின் ஒரே யானைப் பாகி ஆக அறியப்படுகிறார். யானைப் பாகன்கள் நிறைந்த உலகில், ஒரே ஒரு யானைப் பாகி இவர்தான். வடகிழக்கு மாநிலங்கள்,...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...