0,00 INR

No products in the cart.

முதுமையின் உண்மை!

படித்ததில் பிடித்தது:   – சுந்தரி காந்தி
நடிகர் பிரகாஷ் ராஜ் எழுதிய “சொல்லாததும் உண்மை” நூலிலிருந்து…

ன் நண்பன் புதுசா வீடு கட்டினான்! ஆசை ஆசையா கட்டின வீட்டைப் பார்க்க என்னைக் கூப்பிட்டான்.

பிரமாதமான வீடு. ரகளையான ரசனையோடு கட்டப்பட்ட வீடு. ஸ்கூல் படிக்கிற தன்னோட ரெண்டு பசங்களுக்கும், நெட் வசதியோடு கிரவுண்ட் ஃப்ளோரில் தனித்தனி அழகான அறைகள். மனைவிக்கு அவங்க டேஸ்டுக்கு ஏத்த மாதிரி அழகான கிச்சன்.  நண்பர்கள் வந்தா, சீட்டு விளையாடிட்டு ஜாலியா இருக்க டெரஸ்ல ஒரு ரூப் கார்டன்.

அப்படியே ஒவ்வொரு ரூமா சுத்திப் பார்த்துட்டு வரும் போது, முதல் மாடியில் ஒரு ரூமில் இருந்து, பக்தி பாட்டு கசிஞ்சி வருது. ரேடியோவில் கேட்கிற பழைய பாட்டு. ஜன்னல் வழியே சாலையை முறைத்துப் பார்த்தபடி ஒரு பெரியம்மா அந்த ரூம்ல உட்கார்ந்து இருந்தாங்க.  அது அவனோட அம்மா!

சட்டென மனசு கனமாகிடுச்சு. என்னை அறியாமல் என் அம்மா ஞாபகத்திற்கு வந்துட்டா. எனக்குள்ளே ஒரு கேள்வி குடைய ஆரம்பிச்சது. ‘என் அம்மாவோட முதுமையையும் இப்படித்தான் நான் தனிமையில் தவிக்க விடுகிறேனோ?’ என்று .

நண்பன் மேல் வைத்திருந்த மரியாதை சரசரன்னு சரிஞ்சி போய்டுச்சு. ஓடியாடி விளையாடற தன்னோட பசங்களுக்கு வசதியான இடம் எதுன்னு அப்பனா யோசித்தவன், இதில் கொஞ்சமே கொஞ்சமாவது, மாடியில் தனியே கிடக்கிற தாய்க்கிழவி பத்தி மகனா யோசிக்கலையே?

வயசானவளுக்கு மாடியில் ரூம் ஒதுக்கின அவனோட சிந்தனையே என்னை பயமுறுத்திருச்சு. அவன் இப்படி இருந்தா… அவனோட பிள்ளைகள் அந்தப் பாட்டிக்கு என்ன மரியாதை தருவாங்க?

குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத்  தருகிறோம் . பாட்டு கற்றுத்  தருகிறோம். பரதம் கற்றுத்  தருகிறோம்… ஆனால், பெரியவங்கள மதிக்கக் கற்றுத்  தருகிறோமா?

எங்கோ பிறந்து, வளர்ந்து, கடைசியில் பிள்ளைகளோட இருப்பிடம் என்று கிளம்பி வந்து, அறிமுகமான மனிதர்களே இல்லாத ஊர்களில் தான் பெரியவர்களின் மரணம் நிகழுகிறது. தான் செத்துட்டா தன்னுடைய குணநலன்களை சொல்லி அழ எத்தனைப் பேர் இருப்பாங்கன்னு அவங்களுக்குத் தோணும் தானே?

அடுத்தவர்களுக்கு பாரமாகி விட்டோமேங்கிற மன உளைச்சலுடன், வாழ்கிற வயசானவங்க பக்கத்தில் உட்கார்ந்து, ‘உனக்கு இதெல்லாம் செய்கிற வாய்ப்பு கிடைச்சது என்னோட வாழ்நாள் புண்ணியம்னு’ சொல்லி சந்தோஷப்படற, சந்தோஷப்படுத்துகிற வாய்ப்பு நம்மில் எத்தனைப் பேருக்கு கிடைச்சிருக்கு?

பொண்டாட்டி பிள்ளைகளை பீச், சினிமான்னு கூட்டிட்டு போறவங்க, வீட்டோட படிய தாண்டாமே வயசான சில ஜீவன்கள் இருக்கேன்னு யோசிச்சதுண்டா?

பெத்தப் பிள்ளைகளுக்கு காரமா சமைச்சா பிடிக்காது என்று தெரிஞ்சு வெச்சிருப்போம். பிள்ளை ருசி,பொண்டாட்டி ருசியை தெரிஞ்சு வைத்திருக்கிற நம்மில், எத்தனைப் பேருக்கு பெத்தவளோட ருசி தெரியும்?

குழந்தைங்க தூங்கிட்டாங்களானு பூனை மாதிரி அடி எடுத்து வெச்சுப் போய் பார்க்கிற எத்தனைப் பேர், தன்னோட அம்மா தூங்கியிருப்பாளா, அப்பன் முழிச்சுட்டே இருக்கானான்னு பார்த்து இருப்பாங்க?

என் அம்மா திடீரென ஒரு நாள், தான் பிறந்த ஊரை, கர்நாடகாவில்  ஒரு மூலையில் இருக்கிற ‘தாரவாடு’ பார்க்கலாம் என்று ஆசைப்பட்டா. உடம்பு சரி இல்லாம இருக்கிற நேரத்தில், இப்படி ஒரு பயணம்  அவசியமான்னு எல்லோரும் அவளைக் கேட்டாங்க. ஆனால், நான் ‘நிச்சயமா நாம போறோம் நீ கிளம்புமா’ன்னு  சொன்னதும், அவள் முகத்துல முளைச்ச சந்தோஷம் இருக்கே, ப்ச்… அதுதான் வரம்!

‘இல்லடா பிரகாஷ் எனக்குத் தெரிஞ்ச எல்லா முகத்தையும் கடைசியா ஒரு முறை பார்க்கணும்னு தோணுதுடா!’

ரொம்ப பத்திரமா அவளை அந்த ஊருக்குக் கூட்டிட்டு போனேன். அவளுடைய உடம்புக்கு அவ்வளவு தூரம் பயணம் சரிப்படவில்லை. உடம்பு சரி இல்லாம அட்மிட் ஆக வேண்டிய நிலைமை. அந்த ஊரில் இருக்கிற சின்ன ஆஸ்பத்திரியில் சேர்த்து கூடவே இருந்தேன். அந்த சுகவீனத்திலும் ‘என் பையன் என்னை எப்படிப் பார்த்துக்கிறான் பார்’னு தன்னுடைய உறவுக்காரங்க கிட்ட பெருமையா பேசுறா. எல்லோரிடமும் என்னை அறிமுகப்படுத்தறா.ஏதேதோ பேசிக்கிட்டே இருக்கா.

கோவா கூட்டிட்டு போய், இன்னும் பெரிய ஹாஸ்பிடலில் ட்ரீட்மென்ட் தந்து, ஒரு நர்சையும் கூடவே கூட்டிட்டு சென்னை வந்தேன். ‘இவ்ளோ ரிஸ்க் எடுக்கணும்மா?’னு எல்லோரும் கேட்டாங்க. அவங்களுக்கு நான் சொன்ன பதில் இதுதான்…

‘பெத்தவங்கள எப்படி கொண்டாடணும்னு நான் என் குழந்தைகளுக்கு வார்த்தைகள்லே சொல்றது இல்லை.

வாழ்ந்து காட்டணும்னு ஆசைப்படுறேன் அவ்ளோதான்!’

1 COMMENT

  1. பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும், பெற்றோர்களை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சொல்லாலும், செயலாலும் நிரூபித்துக் காட்டியுள்ளார். நிஜத்தில் ஹீரோவாகத் திகழ்கிறார்.
    எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன்,
    லால்குடி.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...