உங்களை ஈர்த்த புதுமையான சினிமா பாடல் வரிகள் எவை? ஏன்?

உங்களை ஈர்த்த புதுமையான சினிமா பாடல் வரிகள் எவை? ஏன்?
Published on
FB பகிர்வு! மங்கையர் மலரில் பதிவு!

நா. புவனா நாகராஜன்
ஏ சாமி, மன்மத சாமி, மந்திாிசாமி ,போக்கிாிசாமி …
குறுகிய காலத்தில் பட்டித் தொட்டியெல்லாம் பரவிய பாடல். பாடலுக்கு ஏற்ப அருமையான டான்ஸ், நல்ல ஜனரஞ்சகமான இசை, ராஜலெட்சிமியின் அசத்தலான குரல் வளம்,  நடிகையின் லெட்சுமிகரமான முகம் , நளினம் ,ஒட்டு மொத்தத்தில் நவரச கலவையான பாடல்! மீண்டும் கேட்கத் தூண்டுவது நிஜம்! அட்டகாசமான டி.எஸ். பியின் இசை!

கிருஷ்ணவேணி
வாலமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
பாட்டும் ஆட்டமும் நன்றாக ரசிக்கும்படி உள்ளது. சித்திரம் பேசுதடி படத்தில் கானா உலகநாதன் பாடல் இது.

ஜெயா சம்பத்
'டான்' என்ற ரிலீஸுக்குத் தயாராக உள்ள படத்தில் வரும், அனிருத் இசையில் அமைந்த பாடல் இது :-
அமுக்கு டுமுக்கு அமால் டுமால்
ஹே ஜல புல ஜங்கு
ஏய் டம டும டங்கு
தக் லைஃப்ல கிங்கு
இப்படியே பாடல் வரிகள் இருக்கும். அர்த்தம் புரியலைன்னாலும், பாடல் செம்ம ஹிட்.  இப்போல்லாம் இப்படி வரும் பாடல்கள் தான் இளைஞர்களுக்குப் பிடித்திருக்கு.

வி. ஸ்ரீவித்யா பிரசாத்
ஒஹாமா ரீயா வாஹியாஹா …
இந்தப்பாடல் வரிகள் அர்த்தம் தெரியாது.  இருப்பினும் புது அர்த்தம் சொல்லி இருப்பார் சின்னக் கலைவாணர். இந்தப் பாடல் கேட்கும்  போதெல்லாம் விவேக் சார் நினைவு வருகிறது.

கோமதி சிவாயம்
நாக்கு மூக்க நாக்கு மூக்க பாட்டுதாங்க..
இடைவிடாமல் பாடும்போது மூச்சு பயிற்சிக்கு நேரம் ஒதுக்கத் தேவையில்லை. சிம்பிள் லிரிக்ஸ் பாட ஈஸி.. அது என்ன மாயமோ தெரியல.. பாடும்போதே உற்சாகம் கொப்பளிக்குதுங்க!

பானு பெரியதம்பி, சேலம்
தட்லாட்டம் தாங்க.. தர்லாங்க சாங்க
உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க
சூப்பர்ஸ்டார், அனிருத் இசையில் சேர்ந்து 'பேட்ட'  படத்தில் கலக்கிய மரண மாஸான பாடல். எல்லோரையும் தலையாட்ட வைத்ததோடு, தட்லாட்டம் வார்த்தைக்கு அர்த்தத்தையும் தேடியது. ரஜினியின் அசால்டான நடிப்பு, ஸ்டைல் என அனைத்தும் கூடுதல் சிறப்பு.

உஷா முத்துராமன் 
சத்திய பூச்சு கோவா
லாலுகுசீந்தாவா
சாயா பா டிரிமு
சாயா ர் ஹரி ஹரி
ரஜினிகாந்த் நடித்த பிரியா என்ற படத்தில் 'என்னுயிர் நீதானே உன்னுயிர் நான் தானே' என்ற பாடலுக்கு முன் வரும் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை பலமுறை கேட்டிருக்கிறேன் … ஆனால், உச்சரிக்கத் தான் வராது. இருந்தாலும் ரசித்து கேட்கும் அருமையான பாடல் அது. ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் நடித்த பிரியா படத்தில் வரும் பாடல்.

கலைமதி  சிவகுரு
சர்க்கார் படத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், பாடலாசிரியர் விவேக் எழுதிய சிம்டாகாரன் பாடலில்…
"பல்டி பாக்குற டர்லவுடனும் பல்தே
வோர்ல்ட் மொத்தமும் அரளவுடனும் பிஸ்தே.
பிசுறு கெளப்பி பெர்ளவுடனும் பல்தே"
என் பேத்தி பிறந்த 4 ம் மாதத்திலே இந்தப் பாடல் வரிகளை கேட்டவுடனே சிரிப்பாள். நாங்களும் மேலும்,மேலும் இந்த வரிகளையே போட்டு சிரிக்க வைத்தது மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி ஆகும். இப்போது கேட்டாலும் அதுதான் நினைவுக்கு வரும்.

ஷ்யாம் மேகி
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தா
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபிபொ……………….
மலம பித்தா பித்தாதே மலம பித்தா பித்தாதே
இப்போ latest trend. குழந்தைகள் அனைவரும் இதைக் கேட்ட உடன் ஆட தொடங்கி விடுவார்கள். எப்போது படம் வரும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது.

தாரை செ.ஆசைத்தம்பி
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா…
அந்த 'உய்யலாலா'வை ரொம்ப நாளாக வெண்மைக்கு வெண்மை தரும் 'உஜாலா'என்று நினைத்திருந்தேன்!

ஜானகி பரந்தாமன்
சுராங்கனி… சுராங்கனி… சுராங்கனிக்கா மாலுக்கென்னவா.மாலு ..மாலு மாலு சுராங்கனிக்கா மாலு சுராங்கனிக்க மாலுக்கென்ன வா …
1977 ல் வெளிவந்த பாடல் . கானா பாட்டுன்னா என்ன? என்று கேட்கின்ற கால கட்டம். விரசம் இல்லாத வரிகள். யாரு வேண்டுமானாலும் பாடலாம்.  துள்ளல் சாங், சிறியவர் முதல் பெரியவர் வரை ஆட்டம் போட வைக்கும் பாடல் (இன்றும்கூட) .இன்றைய "ஒய் திஸ் கொலை வெறி போல்" ஒரே நாளில ப்ரபலமான பாடல்.

சுதா திருநாராயணன் 
ஹே..அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற
டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா
அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா…
லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்கம்மா…
சூரியன் படத்தில் வரும் இந்த பாடல் நம் நரம்புகளை தூண்டி விடும் பெப்பி ஸாங்.

நளினி ராமச்சந்திரன்
"மக்காயேலா…மக்காயேலா …காயபாவுவா…"
நான் படத்தில், நண்பர்கள் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் பாடும் இந்த பாடலில் 'ஏலே மக்கா' என்று நண்பனை கூப்பிடுவதை, இது என்ன புது வார்த்தை என வியக்கும் வண்ணம் 'மக்காயேலா' என மாற்றி அமைத்திருந்தது ரசிக்கும்படி இருந்தது.

ராதிகா ரவீந்திரன்
"அஸ்க் லஸ்கா ஏதோ ஏதோ ஐ, அஸ்த் அஸ்த் லைபே
அஹவா போலிங்கோ சிந்தா சிந்தா, இஷ்க் இஷ்க் மை லே லவ்"
நண்பன் படத்தில் வரும் இந்தப் பாடல், பல மொழியில் காதலை சொல்லும் பாடல். அழகிய பூக்களின் பிண்ணணியில் விஜய், இலியானா சேர்ந்து ஆடும் புதுமையான பாடல் வரிகள்  கொண்ட இப்பாடல் கேட்க இனிமையாக இருக்கும்.

ராதா நரசிம்மன் 
"ஏய்ய் கோலி சோடாவே"!ஏய் கறிக்கொழம்பே!"
ரவுடி பேபி சாங் தூளாக இருக்கும். மியூசிக் அபாரம்! கைகளில் ஷூ அணிந்தப்படி ஸீன் வடிவமைத்திருப்பதும், நடனமும் புதுமை.

ஜெகதா நாராயணசாமி
மாஸ்டர் படத்தில் வரும்," லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி, பே அட்டென்ஷன் லிசன் டு மீ "என்ற பாடல், அனிருத் இசையமைப்பில், விஜய் அவர்கள் பாடிய இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆங்கிலமும், தமிழும் கலந்த, தங்கிலீஷ் பாட்டு, குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை தலையாட்டும் பாட்டு, ஜப்பான் பள்ளி மாணவர்களை கவர்ந்த பாட்டு,எளிமையான நடன அசைவுகளை கொண்ட பாட்டு.

ஹேமலதா ஶ்ரீநிவாசன்
தளபதி படத்தில் ராக்கம்மா கையத்தட்டு பாடலில் பல இடங்களில் வரும் 'ஜாங்கு ஜக்கு சஜக்கு ஜக்கு ஜாங்கு ஜக்குச்சா' என்ற அர்த்தமற்ற வார்த்தைகள் அனைவராலும் மிகவும் ரசிக்கப் பட்டவை. ஆபாசமான சத்தங்களும் வார்த்தைகளும் இல்லாதவரை இதை எல்லாம் ரசிக்கலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com